வணக்கம் Dr. / Mr. / Ms. V 0.1
ஒரு தாயின் வலியில் தான்
ஒரு உயிரே பிறக்கிறது!
வலிகள் இல்லா
வாழ்க்கை இல்லை!
விண்ணை நம்பு
விடியும் நாளை பொழுது!
உன்னை நம்பு
உயரும் வாழ்க்கை என்று!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 0.2
நீ ஓடு
உன்னால் முயன்றவரை,
நான் தொடர்வேன்
பின்னால் இறுதிவரை..!
- இப்படிக்கு வெற்றி.
வணக்கம் Dr. / Mr. / Ms. V 0.3
வாழ்வதோ சில காலம்
வந்து போகும் அதில் சோகம்!
முடங்கிவிடாதே
முடியவில்லை என்று!
தொடர் முயற்சி உனக்கிருந்தால்..
தோல்வியும் ஒப்புக் கொள்ளும்
தோற்றுவிட்டேன் என்று..!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 0.4
நீ
எதை சாதிக்க நினைக்கின்றாயோ
அதை நினைத்தே செயல்படு..!
சாதிப்பாய்👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 0.5
வாழ்க்கையின் மொக்கை தருணங்களை
பட்டை தீட்டி கூர்'மை'யாக்கிய
மங்கை அவள்..!
இன்று அவளில்லை
கூர்மை எழுதுகோலில்
வாழ்கின்றாள்.
கவிதைகளாய் எழுதிக் கொண்டிருக்கின்றேன்..!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 0.6
மழைத்துளிகளை பிடித்து
மாலையாய் கட்ட முடியும்...
கடலின் அலைகளிடம்
கடிதம் எழுத சொல்ல முடியும்...
நட்சத்திரங்களை எண்ணி
நாளைக்கு சேர்க்க முடியும்...
நிலவின் வெளிச்சத்தில்
நின்றே வாழ முடியும்...
ஆகாயத்தை அன்பால்
அடிபணிய செய்ய முடியும்...
நம்பிக்கை நதி மட்டும் நம்மில் வற்றாமல் இருந்தால்...
உலகமும் தோழா
உன் வசப்படுமடா!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 0.7
நேற்று என்பது
தொலைந்து போனது!
நாளை என்பது
தொலைவில் உள்ளது!
இன்று மட்டும்
தொலையாது கையில் உள்ளது!
எட்டு வைத்து செல்,
நீ எட்டு திசையும்
வெல்!!!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 0.8
ஒழுக்கத்தை பின்தொடரு
புகழ் உனது !
நடு நிலைமையை பின்தொடரு
செல்வம் உனது !
செய்நன்றி பின்தொடரு
வையகம் உனது !
திடமனதை பின்தொடரு
லட்சியம் உனது !
தன்னம்பிக்கையை பின்தொடரு
பாதை உனது !
விடாமுயற்சியை பின்தொடரு
வெற்றி உனது !
வணக்கம் Dr. / Mr. / Ms. V 0.9
பேச மறுத்தாய்!
பேச தயங்கினாய்!
பேசி பேசி சிரித்தாய் !
இறுதியில்
பேசாமல் கழுட்டிவிட்டாய் !
- காதலி
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.0
வெற்றி என்பது ஒரு
போராட்டத்தின் முடிவல்ல,
மற்றொரு போராட்டத்தின்
தொடக்கமும் கூட..!
வீறு கொள் மீண்டும்
வெற்றி நடை போட
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.1
ஆகாயத்தையும்
பூமியையும்
சூரியனையும்
சந்திரனையும்
மேகத்தையும்
மழையையும்
நட்சத்திரத்தையும்
கோல்களையும்
காற்றையும்
நெருப்பையும்
வனங்களையும்
விலங்குகளையும்
உலகத்தையும்
ஊர்களையும்
ஆண்களையும்
பெண்களையும்
உன்னையும்
என்னையும்
படைத்தவன்.?
அதில் ஏன் உடன்
காதலையும் படைத்து
போதாதென்று
அழுகையையும்
கண்ணீரையும்
படைத்தானோ???
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.2
நீ சாதிக்க எண்ணும்போது உன்னை பாதிக்க துன்பம் வரலாம்
பலரும் வெறுக்கலாம்
அப்போது..
உன் விழியை ஈட்டியாக்கு
உன் செயலைக் கேடயமாக்கு
உன் நம்பிக்கையை கவசமாக்கு
உன் நாணயத்தை கிரீடமாக்கி
முன்னேறி செல்
அங்கே உன் எதிரிகளான
உன்
பயம் தயக்கம்
சோம்பல் அலட்சியம்
இவைகளை எல்லாம்
வென்று வாகை சூடிவா,
சுற்றும் பூமியும் உன் கையில் .!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.3
தோல்விகளில் கற்றுகொள்
கேள்விகளில் பெற்றுக்கொள்
தவறுகளை ஏற்றுகொள்
இதுவே வெற்றியின் ஆரம்பம்
தெரிந்துகொள்!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.4
அவள்..
நெற்றிச்சுட்டி - நெளிந்திடும்!
பொட்டு - பொறாமைப்படும்!
கிளிப் - பிடித்துவிடும்!
கண் மை - கருத்துவிடும்!
மூக்குத்தி - முக்திபெற்றிடும்!
தோடு - தோற்றுவிடும்!
உதட்டுச்சாயம் - மெருகேற்றிடும்!
கழுத்துமணி - கலந்திடும்!
மாராப்பு - மலைத்துவிடும்!
வளையல் - வாழ்ந்திடும்!
மோதிரம் - மோட்சமடைந்திடும்!
கடிகாரம் - கடிந்திடும்!
புடவை - பூரித்துவிடும்!
ஒட்டியாணம் - இறுக்கிகட்டிடும்!
கொலுசு - பாடிசத்தமிடும்!
செருப்பு - பிழைத்துவிடும்!
எல்லாம் சேர்ந்து அவளின்
பெண்மையை கூட்டிவிடும்!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.5
தோழா..
தோல்வியோ!
வெற்றியோ!
எதையும்
எதிர்பார்க்காமல்
எதிர்வருபவைகளை
எதிர்த்து
முன்னேறி ஓடு..!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.6
வாடியது போதும்
வருவது வரட்டும்
வரிசையில் இருப்போம்
வந்ததை ஏற்போம்
வாராததை வரவேற்ப்போம்
வாழப் பழகுவோம்
ஹா ஹா ஹா ஹா....!!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.7
நேற்று விதை
இன்று நீர்
(நீரை
வார்த்துக் கொண்டே இரு )
நாளை விருட்சமாகும்👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.8
வெற்றி தருவதோ வெறும் பரிசு!
தோல்வி ஆக்கிடும் உனை புதுசு!
தோற்றால் அலசு உனை அலசு!
உன் ஆற்றல்
ஆர்ப்பரிக்கும்!!!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 1.9
அவள்..
கன்னம் கனரா வங்கி.!
கண்கள் கரூர் வைஸ்யா.!
பற்கள் பஞ்சாப் நேசனல்.!
இடுப்பு இந்தியன் ஓவர்சீஸ்.!
இதழ்கள் இந்தியன் வங்கி.!
மெல்லிடை மெர்க்கன்டைல் வங்கி.!
முத்து சிரிப்போ முத்ரா வங்கி.!
பார்வை பாரத ஸ்டேட் வங்கி.!
தேகம் தேனா வங்கி.!
மொத்தத்தில்
சில நாட்களாக
சில்லரைக்காக
என்னை காக்க
வைத்த வங்கி
ஊழியர் அவள்.😬
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.0
நேற்றில் இருந்து
நாளையை யோசிப்பவன்
வெற்றி பெற இயலாது!
இன்றில் இருந்து
நாளையை நோக்குபவன்
நிச்சயம் வெற்றி பெறுவான் !!
நாளை இன்றாகலாம்
இன்று நாளையாகாது
புரிந்தா சரி!!!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.1
என் வாழ்க்கையில்
புயலாய் வந்தவள்,
நானோ அவள்
நினைவால் சீரழிந்து
கொண்டிருக்கின்றேன்.
"தானே" "நீலம்" "நாடா"
வரிசையில் மற்றுமொரு
புயல் வந்தால் அதற்க்கு அவள்
பெயரை சூட்டுங்கள்...
அவள் நினைவு என் மனக் கரையை கடக்கட்டும்...
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.2
அன்பே உன்னை
பார்க்கும் முன்னால்,
"வாய்விட்டு சிரிச்சா
நோய்விட்டு போகும்"
பார்த்த பின்போ
நீ ஒவ்வொரு முறை
சிரிக்கும் போது
"வாய்விட்டு சிரிச்சா
காதல்நோய் வந்து சேருதடி"..
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.3
எட்டிப்பார் வெற்றியின்
முகம் தெரியும் !
தட்டிப்பார் வெற்றியின்
தாழ் திறக்கும் !
முட்டிப்பார் தோல்வியின்
முகம் உடையும் !
மோதிப்பார் தோல்வியும்
தோற்றிடும் உன்னிடம் !
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.4
உன்
வாழ்க்கையின்
திறவுகோல்
உன்னிடமே
உண்டு..
நீ
சரியாய்
திறப்பதும்
திறக்காமல்
விடுவதும்
உன்
விருப்பம்..
இப்படிக்கு
உன்
அறிவு..
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.5
தோழா..
தோல்வியை கொன்னுப் போடு
வெற்றியை நெஞ்சில் போடு
உலகம் உன் பெயர் சொல்ல நடை போடு!!!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.6
பிறப்பிற்க்கு ஒரு வழி
நடப்பதுக்கு பல வழி
மரணத்தில் எவ்வழி
யாரறிவார் அவ்வழி…!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.7
சச்சினாக,
தோனியாக,
ரஜினியாக,
அஜீத்தாக,
கலாமாக,
காமராஜராக,
MGR ஆக,
ஜெஜெ வாக,
பாரதியாக,
மோடியாக,
கிரண் பேடியாக,
அம்பாணியாக,
அம்போனியாக,
டாடாவாக,
பிர்லாவாக,
ஏன் உன்
தம்பி தங்கை போலாக
கூட உன்னால் ஆகாது..
நீ நீயாக இரு
நிச்சயம் சாதனை பட்டியலில்
நீ இடம்பிடிப்பாய்..!!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.8
மண்ணில் போகும்
மனித உடல் நாம்,
மாற்றம் ஒன்றே
உலகின் நியதி
மரித்துப்போதல்
இயற்கையின் நீதி..
எதையும் கருத்தில் கொண்டு
கடமையை செய்!
கனவில் கூட என்றும்
நன்மையே செய்!
புரிதல் கொண்டு
புதுமை கண்டு
புவியின்மீது
பதித்துச்செல்
உன் பாதம் ரெண்டு..!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 2.9
அச்சம் உன்னை அச்சுறுத்தும் முன்,
அதை மென்று தின்றுவிடு !
பதற்றம் உன்னை கொல்லும் முன்,
பதற்றத்தை நீ கொன்று விடு !
லட்சியம் உன்னை அலட்சியம் செய்யும் முன்,
இலட்சியத்தை நீ அடைந்து விடு !
வாழ்க்கை உன்னை வெறுக்கும் முன்,
வாழ்க்கை நீ வென்றுவிடு !
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.0
எனக்கு மட்டும்
ஏன் இப்படி
என்று நினைப்பதை விட
என்னால்தான் இப்படி
என்று நினைத்தாலே எப்போதும் எங்கும்
எதிலும் ஜெயம் நிச்சயம்..!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.1
காதல் வாழ்க்கை
மோடி மாதிரி..
சும்மா வானத்துலயே
பறக்கிற மாதிரி தெரியும்...
நட்பு வாழ்க்கை
ஜெயலலிதா மாதிரி
என்ன நடக்குமுனு
உனக்கே தெரியாது...!
கல்யாண வாழ்க்கை
மன்மோகன் சிங் மாதிரி..
எதுவுமே எங்கேயும்
பேச முடியாது...!😜
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.2
ஒரே நகைச்சுவையை
திரும்பி திரும்பி
சொல்லவோ பார்க்கவோ
நேரிட செய்தால்
சிரிப்பை குறைத்து
கொண்டு மொக்கை
என்று கூறும் மனிதா,
என்றோ நடந்த
துன்பத்தை மட்டும்
ஏன் நினைத்து நினைத்து
தினமும் கவலையும்
வேதனையும் கொள்கின்றாய்...?
சிந்திப்பாய் மனிதா...!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.3
ஒருவனுக்கு கிடைக்கும் வாய்ப்பு
மற்றொருவனுக்கு அமையும் ஆப்பு
இந்த நாகரிக வாழ்க்கையில்..!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.4
நோக்கம் இல்லாத வாழ்க்கை,
எந்தவொரு
ஆக்கத்தையும் உனக்கு தராது..!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.5
நீ தோற்றுப் போவதாக
நினைத்தால் இந்த உலகம்
நினைவில் வைத்துக்கொள்ள
முடியாத அளவுக்கு
பலமுறை தோற்று போ,
ஆனால்
நீ அவர்கள் மனதில்
நிற்கும்படி ஒருமுறையாவது
நி வென்றுவிடு👍😊
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.6
உலகத்துக்கே தெரியும்
உதிர்வது நிச்சயமென்று
உணர்ந்து
உன்னிருப்பை நிலைநாட்டு
உணர்த்துவது பூக்கள்...!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.7
அடிமேல் அடி எடுத்து வை..
நம்பிக்கையோடு எதிலும் போராடு..
சாதனை கூட ஒரு நாள்
உனது தோள் மீது
அமர்ந்து இருக்கும்..
நீயும் இருப்பாய்
சாதனையாளர் பட்டியலில்.. 👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.8
உனக்கு கிடைக்கும் இன்பமும்
உனக்கு கிடைக்கும் துன்பமும்
உனக்கு கிடைக்கும் நேரத்தை
எப்படி செலவு செய்கின்றாய்
என்பதை பொறுத்ததே.!☺
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.9
தோழா..
உன் வெற்றிகளை காலடியில் வைத்துக்கொள் ...
தலைமேல் வைத்தால் அது உன்னை
அமிழ்த்துவிடும்...
காலடியில் வைத்தால் அது உன்னை தூக்கி விடும்
....
வணக்கம் Dr. / Mr. / Ms. V 3.9
ஏய் நிலவே..
என்னவள் போல் நீ
அழகில்லை என்பதால் தேய்கின்றாயோ?🌒
அல்ல
என்னவள் முகம் போல்
வட்டமாகிவிட வளர்கின்றாயோ?🌖
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.0
தோழா..
வரும் தோல்விகளை
சிந்தையில் போட்டு வை,
அது சந்தையில் விழாது
உன்னை தடுத்து விடும்..
கிடைக்கும் வெற்றிகளை
காலடியில் போட்டு வை,
அது மேலும் மேலும்
உன்னைஉயர்த்தி விடும்..
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.1
வாழ்க்கையில்..
தாய் - ஒரே தெய்வம்
தந்தை - குடும்ப சுமைதாங்கி
அக்கா - இன்னொரு தாய்
அண்ணன் - வழி நடத்துபவன்
தம்பி - கை கலப்பவன்
நண்பன் - கை கொடுப்பவன்
தங்கை - முதல் மகள்
காதலி - இன்பத்தில் துன்பம்
மனைவி - துன்பத்தில் இன்பம்
மகள் - பாசத்தின் எல்லை
மகன் - ஆஸ்திக்கு தொல்லை
...
மரணம் - நிம்மதியான உறக்கம்
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.2
பலரில் ஒருவனாவாதும்
சிலரில் ஒருவனாவதும்
விதியல்ல நண்பா
நம் நம்பிக்கை 👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.3
வாழு !
உனக்காய் வாழு!
உன் உயர்வுக்காய் வாழு!
உறவுக்கும் உயிருக்கும் வாழு!
உலகின் உயர்வுக்காகவும் வாழு!.
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.4
உன்னில்..
தயக்கம் இருந்தால்
வெற்றி கிடையாது!
இயக்கம் இருந்தால்
தோல்வியே கிடையாது!
தடைகளை தாண்டு
விடைகளை தேடு! 👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.5
இருக்கிற போதும் சரி
இழக்கிற போதும் சரி
இயல்பாய் இரு அது போதும்
இடம் பிடிப்பாய்
இருக்கும் தரவரிசையில்..👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.6
இயலாது என்றே
இருக்காதே முயலாது,
இரைப்பை காலியானால்
இயல்பாய் இருக்க
இயலாது உன்னால்..
இரு நம்பி(க்கையோடு)
இவ்வுலகம் தம்பி உன்னோடு👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.7
உடம்பை மட்டும் வளர்க்காதே
உன்னுள் நம்பிக்கையையும் வளர்
யானை சொல்கிறது..
காப்பவனை காப்பாற்று
நன்றியோடு இரு கற்றுதந்தது
நாய் சொல்கிறது..
குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி சொல்கிறது..
வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை சொல்கிறது..
அதிகாலை எழுந்திடு
அனுதினம் சுறுசுறுப்பாய்
சேவல் சொல்கிறது..
ஒற்றுமையாய் பழகு
கிடைத்ததை பகிர்
காகம் சொல்கிறது..
நட்போடு தொடர்ந்து
நாளும் நடந்திடு
எறும்பு சொல்கிறது..
இப்படி
மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய
பல செய்தி மிருகங்களிடம் உண்டு
ஆனால்
மனிதன் அதை மறந்து
மிருகம் என்ற போர்வையில்
அழைகின்றான்..
👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.8
படிப்பு என்பது
பாதை
பாதம் என்பது
நம்பிக்கை
முடியும் என்பதே
முன் வைக்கும் அடி
முடியாது என்பது
இறக்கும் நொடி👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 4.9
தோழா..
உன் வரவுக்காய் இந்த
உலகமே காத்திருக்கு
உன் ஒவ்வொரு நாளும்
உன் வெற்றிக்குரிய நாளே
உன் அச்சம் தவிர்
உண்மையில்
உலகை ஆழப்பிறந்தவன் நீ!!!
👍😬
வணக்கம் Dr. / Mr. / Ms. V 5.0
ஐ போனில் பண்ண முடியாது
ஆன்ட்ராய்டில் உன்ன முடியாது
வின்டோசை தின்ன முடியாது
பானத்தையே குடிக்க முடியாது
பதவியால் புடிக்க முடியாது
பசியில்லா நடிக்க முடியாது
விஞ்ஞானம் வளரட்டும்
விவசாயி தளரக்கூடாது
விவசாயம் துறந்த
விவசாயியை மறந்த
நாடு உருப்படாது.
நினைவில் வை மனிதா.!!!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 5.1
விழுந்தால் யார்க்கும்
தெரியாது எழுவது
முக்கியமல்ல..!
விழுந்தால் யாவரும்
ஆச்சரியப்படும் படி எழுவதே
முக்கியம்..!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 5.3
பெண்ணே...
உன் அலங்காரம்
அரங்கேறும் அலாங்காநல்லூர்
உன் வீட்டுவாசலே
தரிசிக்கும் வாடிவாசல்
உன் மஞ்சள்முகம்
மயக்கும் மஞ்சுவிரட்டு
உன் செவ்வாய் சொல்ல
நடக்கட்டும் சல்லிக்கட்டு
உன் கண் அசைவால்
திமிருகிறேன் கட்டிளம்
காளையாக நான்.🐄
வணக்கம் Dr. / Mr. / Ms. V 5.4
இன்று
உன்னால் ஆகும்..
நாளை
உன் நாளாகும்..!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 5.6
தோற்றுப் போன
உன்னை கழற்று
வெல்லப் போகும்
உன்னை உடுத்து
கல்லாய் மாறு
சிற்பி தேடு
சிலை கொடு
விலை பேசு
கலையாகு
முடியாதென்பதை கொலையாக்கு
1/26/17, 10:51 AM - Dr. அன்பரசு: மொழிச் சுதந்திரமில்லை!
தண்ணீர் வழங்க திராணியில்லை!
மீனவ பாதுகாப்பில்லை!
கச்சத்தீவை மீட்கும் துணிவில்லை!
தனி ஈழத்தை
ஆதரிக்கும் தைரியமில்லை!
உள் வெளி நாட்டு
கயவர்களுக்கு கம்பளம் விரித்து!
அணுஉலை, மீத்தேன்
நீயுட்ரினோ என
தமிழகத்தை கூறுபோடும்
இந்திய குடியரசு
இனியும் எதற்காய் நமக்கு!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 5.7
பெயர் மாற்றி
இடம் மாற்றி
வழிபாடு மாற்றி
பயனில்லை
சிந்தையை மாற்று
சிறப்பாய் வாழ்க்கையில்!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 5.8
பிறந்தால்
இறப்பது
இயற்கை!
இடையில்
ஆடுகின்றான்
தான்
மனிதன்
என்பதை
மறந்து...!😉
வணக்கம் Dr. / Mr. / Ms. V 5.9
உன் மேல் வை நம்பிக்கை
உடன்கட்டை ஏறும் மூட நம்பிக்கை!
உயர்வு தரும் உன் தன்னம்பிக்கை
உதரி ஓடும் அவநம்பிக்கை!
வணக்கம் Dr. / Mr. / Ms. V 6.0
பழையது கழிய
வெள்ளை அடித்தோம்
இருள் நீங்க
வெளிச்சம் கொடுத்தோம்
நீருக்குள் நிதம்
மூழ்கியெழுந்து
கழுவிவிட்டோம் நம்
புறஅழுக்குகளை...!
அகஅழுக்குகள்...? 😉
வணக்கம் Dr. / Mr. / Ms. V 6.1
முயற்சி செய்
முன்னேற முயற்சி செய்..!
போட்டி போடு
வென்றிட போட்டி போடு..!
நோக்கி நகர்ந்திடு
இலக்கை நோக்கி நகர்ந்திடு..!
இன்றே முயற்ச்சிக்க துணிந்திடு..!
தடை வந்தால் தகர்த்திடு...!
தடுமாறி விழுந்தாலும் முயற்சி செய்ய
நினைத்திடு..!👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 6.2
பொறாமை பொசுங்கட்டும்
நயவஞ்சகம் நசுங்கட்டும்
தீமைகள் தீரட்டும்
தோல்வி தோற்கட்டும்
உண்மை உயரட்டும்
பூமி பூக்காடாகட்டும்
புன்னகை பூக்கட்டும்
மனிதநேயம் மலரட்டும்
மக்கள் மகிழட்டும்
வணக்கம் Dr. / Mr. / Ms. V 6.3
தோல்விச்
சருகுதனை
தூரமாக்கு
தோள்களில்
நம்பிக்கையை
பாரமாக்கு
துன்பச்
சுமைகளை
தூளாக்கு
துடிக்கும்
திறமைதனை
பாதையாக்கு
தலை
நிமிர்ந்து
நின்றிட
தமிழை
உன்னில்
அணிந்திடு
தடைகளை
நீ
தாண்டிட
தன்
நம்பிக்கைதனை
உண்டிடு…
வா முயற்சி செய்
வசப்படும்
வானமும் கூட! 👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 6.4
தோழா..
நம்பிக்கை கொண்டு
நில் இமயம் போல்
எவரெஸ்ட் கூட உன்
இடுப்பளவாக தான் தெரியும்..!
👍
வணக்கம் Dr. / Mr. / Ms. V 6.5
உலகத்து பூக்கள் மொத்தம்
உன் புன்சிரிப்பு!
உலகின் ஸ்வரம் மொத்தம்
உன் பேச்சு!
உலகின் கார்மேகம் மொத்தம்
உன் கார் கூந்தல்!
உலகின் அதிசயம் மொத்தம்
உன் படைப்பு!
உலகின் நீதி மொத்தம்
உன் வாதம்!
உலகத்தின் விடியல் மொத்தம்
உன் முகமலர்ச்சி!
உலகின் அழகு மொத்தம்
உன் அழகு!
உலகின் காதல் மொத்தமும்
உனக்கே சமர்ப்பணம்!!
வணக்கம் Dr./Mr./Ms. V 8.5
நேற்று வாடிவாசல்
போராடினோம்!
இன்று நெடுவாசல்
போராடுகின்றோம்!
நாளை உன் வீடு வாசல்
போராடுவாய்!
போரடித்த தமிழர்கள்
போராட வேண்டிய அவல நிலை..!
( தோழா..
வளம் நிறைந்த நாடு
வந்தோரை வாழ வைத்த தமிழ்நாடு
Engineering medical தான்
படிப்புனு நம்ம மண்டைய
கழுவி கழுவி
தொடச்சி எடுத்துட்டாங்க.
இன்று நம் ஆதார தொழில் விவசாயதிற்கும்
ஆளில்லை
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்புனு
நம் வளத்தை வச்சு
நம் இளமையை சுரண்டி
கொண்டிருக்கும் இன்றைய
கம்பெனிகள்.
H1B/Green holder தடை
Software no vacancy
Automobile no vacancy
நினைத்துப்பார்
என்னவாகும் என்று?
தண்ணீரை உறிஞ்சிட்டான்
விவசாயத்தை தடுத்துட்டான்
வளங்களை சுரண்டிட்டான்
பண்புகளை மறக்கடிசிட்டான்
இப்படியே போனா
நாளை ?
நாளைய சந்நிதி?
.........
)
வணக்கம் Dr./Mr./Ms. V 8.6
வாழ்க்கை ஒரு..
வாய்ப்பு
வசப்படுத்து.
அழகு
அதிசயத்துப்பார்.
சவால்
சந்தித்துவிடு.
சோதனை
மீண்டு எழு.
தீரச்செயல்
துணிந்து செய்.
துயரம்
தோற்க்கடி.
பாடம்
படித்துவிடு.
பாடல்
பாடிப்பார்.
பணி
முடித்துவிடு.
கனவு
உணர்ந்திடு.
போராட்டம்
போர்தொடு.
சத்தியம்
நிறைவேற்று.
வரம்
வாழ்ந்துவிடு.
வணக்கம் Dr./Mr./Ms. V 8.7
பெண்கள் நிலவுதான்
ஆண்கள் வானமாய் இருப்பதால்!
பெண்கள் பூக்கள்தான்
ஆண்கள் வண்டாய் இருப்பதால்!
பெண்கள் சிலைகள்தான்
ஆண்கள் உளியாய் இருப்பதால்!
பெண்கள் தெய்வங்கள்தான்
ஆண்கள் பக்தர்களாய் இருப்பதால்!
பெண்கள் கண்கள்தான்
ஆண்கள் இமைகளாய் இருப்பதால்!
பெண்கள் அக்னிதான்
ஆண்கள் தீத்துகளாய் இருப்பதால்!
பெண்கள் ஒளிதான்
ஆண்கள் மெழுகுவர்த்தியாய் இருப்பதால்!
பெண்கள் பத்ரகாளிதான்
ஆண்கள் அரகர்களாய் இருப்பதால்!
ஆக்கம் அழித்தல் பெண்!
உருவாக்கம் ஊக்கம் ஆண்!
பெண்ணில்லா ஆணில்லை!
ஆணில்லா பெண்ணில்லை!
இரண்டில்லா வாழ்வில்லை!
மகளிர் தின வாழ்த்துகள்!!!
வணக்கம் Dr./Mr./Ms. V 8.7.1
ஆயிரம் என்ன
கோடானுகோடி
பூக்களின் அழகையும்
தோற்கடிக்கும் ஒரே பூ
எதிர் வரும் பெண் பூ.!
மகளிர் தின வாழ்த்துகள்!!!
வணக்கம் Dr./Mr./Ms. V 8.7.2
பிறந்த போது
பெற்றோர்களைநேசித்து..
வளரும் போது
உடன் பிறப்புகளை நேசித்து..
படிப்பின் போது
கல்வியை நேசித்து..
வாழ்க்கையை கற்றுக்கொள்ளும் போது
நண்பர்களை நேசித்து..
திருமணம் போது
கணவனை நேசித்து..
குடும்பம் நடத்தும் போது
புகுந்த வீட்டை நேசித்து..
அம்மா என்ற இடத்தை
அடைந்த போது
பிள்ளைகளை நேசித்து..
பாட்டியான போது
பேர பிள்ளைகளை நேசித்து..
முதுமையின் போது
உலகத்தையும்,தனிமையும் நேசித்து...
.......
இப்படி நேசித்து நேசித்து
வாழக்கையை ஒரு
சாதனை பயணமாய்
மாற்றும் ஒவ்வொரு
பெண்ணும் சாதிக்க
பிறந்தவர்கள்..!
மகளிர் தின வாழ்த்துகள்!!!
வணக்கம் Dr./Mr./Ms. V 8.8
வகிடு தலை எங்கே
பிண்ணிய கூந்தல் எங்கே
மல்லிகை மணம் எங்கே
மஞ்சள் முகம் எங்கே
நெற்றி குங்குமம் எங்கே
மையிட்ட புருவம் எங்கே
கருவிழி பார்வை எங்கே
மின்னும் மூக்குத்தி எங்கே
பறிக்கும் சிரிப்பு எங்கே
கன்னக் குழி எங்கே
தலைகுனிய வெட்கம் எங்கே
குலுங்கும் கைவளை எங்கே
பாம்பு நடை எங்கே
சறுக்கும் இடை எங்கே
மிடுக்கும் உடை எங்கே
தாவணி பாவாடை எங்கே
அச்சம் பயிர்ப்பு எங்கே
எங்கே எங்கே எங்கே!?
இப்படிப்பட்ட பெண்கள்
எங்கே எங்கே எங்கே!?
வணக்கம் Dr./Mr./Ms. V 8.9
படித்தோம்
கற்றோம்
தேர்வெழுதினோம்.. கல்வி பாடம்!
தேர்வெழுதி
கற்று
படிப்போம்.. வாழ்க்கை பாடம்!
வணக்கம் Dr./Mr./Ms. V 9.0
தாஜ்மஹால்
உலக அதிசயமாம்
போங்கடா
நீங்களும் உங்க அதிசமும்
அது ஒரு தனி மனிதனின்
சுயநல வெளிப்பாடு 😡
பாருங்கடா
தமிழ்நாட்டு கல்லணை
காலத்தை வென்றுநிற்கும்
பொதுநல வெளிப்பாடு..😀
தமிழன்டா😎
வணக்கம் Dr./Mr./Ms. V 9.1
மழை வர
மரம் வேண்டும்
மணம் வர
மலர் வேண்டும்
உணர்வு வர
உள்ளம் வேண்டும்
மகிழ்ச்சி வர
மனஅமைதி வேண்டும்
பதவி வர
பணிவு வேண்டும்
உயர்வு வர
உழைப்பு வேண்டும்
வணக்கம் Dr./Mr./Ms. V 9.2
இளைஞனே ! என்றுமே
எழுச்சி நீ கொள் !
இனிவரும் காலங்கள்
உனதென்று சொல்!
பாரது போற்றிடும்
கல்வியைக் கல் !
யாரது தூற்றினும்
எதிர்த்து நீ நில்!
எதிர்ப்பினில் வாழ்ந்தாலும்
உலகையே வெல்!
புதிராகும் வாழ்வதைப்
புரிந்து நீ செல் !👍
வணக்கம் Dr./Mr./Ms. V 9.4
தோழா..
பூ போனால்
பூங்கா உனக்காக காத்திருக்கு.
பூங்கா போனால்
விண்மீன் உனக்காக காத்திருக்கு.
விண்மீன்களும் போனால்
வானம் உனக்காக காத்திருக்கு.!
தோல்வியை விட்டு
வெற்றியைப் படி
நாளை உனதே.!
வணக்கம் Dr./Mr./Ms. V 9.5
காக்கை போட்ட எச்சத்தில்
கனிமரம் முளைக்கலாம்..
பலர் சாப்பிட்ட மிச்சத்தில்
பலவுயிர் பிழைக்கலாம்..
வாரி வழங்கும் சொச்சத்தில்
வரியோர்கள் வாழலாம்..
மனிதா...
எளிதாக எதையும்
எண்ணிவிடவேண்டாம் !
வணக்கம் Dr./Mr./Ms. V 9.6
நீல வான் அழகு
நிலவு அதில் அழகு
நட்சத்திரங்கள் அழகு
நாளும் காலை அழகு
இளஞ்சூரியன் அழகு
புல் பனித்துளி அழகு
கொண்டை சேவல் அழகு
கூவும் குயில் அழகு
தோகைமயில் அழகு
மழலைமொழி அழகு
புள்ளிமான் அழகு
இயற்கை எழில் அழகு
ஓடும் நதியழகு
பச்சை மலையழகு
வீசும் தென்றல் அழகு
வானவில்லின் வண்ணமழகு
என்னவளை பார்க்காதவரை😍
வணக்கம் Dr./Mr./Ms. V 9.7
மேடோ, பள்ளமோ
நடந்து பார்....
தோல்வியோ, வெற்றியோ
முயன்று பார்....
வாழ்வோ, சாவோ
வாழ்ந்து பார்....
வணக்கம் Dr./Mr./Ms. V 9.8
வாழ்க்கையில் தேடல் ப(ய)ணம் !
வாழ்க்கையில் தேவை ப(ய)ணம் !
வாழ்க்கையில் எல்லாம் ப(ய)ணம் !
வாழ்க்கையில் வேண்டும் ப(ய)ணம் !
வாழ்க்கையில் ஓட்டம் ப(ய)ணம் !
வாழ்க்கையில் விருப்பு ப(ய)ணம் !
வாழ்க்கையில் நிம்மதி ப(ய)ணம் !
வாழ்க்கையில் தொல்லை ப(ய)ணம் !
வாழ்க்கையில் எல்லை ப(ய)ணம் !
வாழ்க்கையின் முடிவில் ப(ய)ணம் !!
வணக்கம் Dr./Mr./Ms. V 10.0
வண்ணங்கள் ஒழுங்காய்ச்
சேர்ந்தால் தான்,
வானவில்...!
எண்ணங்கள் ஒழுங்காய்
இருந்தால் தான்,
வாழ்க்கை...!
வணக்கம் Dr./Mr./Ms. V 9.9
எத்தனை தடைகள் வந்தாலும்
நதிகள் தன் பாதையை
மாற்றி இலக்கை நோக்கி
பயணித்து கடலோடு தான்
சங்கமிக்கும்.
(டிசம்பர் வெள்ளம் மாதிரி 😜)
அதுபோல..
செல்லும் வழியெங்கும்
எத்தனை தடைகள் வந்தாலும்
நதியைப் போல
வாழக் கற்றுக் கொள்வோம்! 👍
வணக்கம் Dr./Mr./Ms. V 10.1
வந்தா ஏத்துகிறது ஒரு
வகை.
வராட்டா விடுவது ஒரு
வகை.
வருமானு ஏங்குறது ஒரு
வகை.
வந்தா வேண்டாங்கிறது ஒரு
வகை.
வரலைனா சாடுவது ஒரு
வகை.
வந்தும் விட்டுவிடுவது ஒரு
வகை.
வரலைனா பெறுவது ஒரு
வகை.
வாழ்க்கை பல
வகை
வாழ
வழியா இல்லை.
வணக்கம் Dr./Mr./Ms. V 10.2
எங்கும் எதிலும்
எந்த உத்திரவாதமும்
நாளை
நமக்கு இல்லாதபோது
நாம் ஏன்
பொய்யோடும்,
பொறாமையோடும்,
பகையோடும்,
பாவத்தோடும்,
தீங்கோடும்,
திமிறோடும்
நம் வாழ்க்கையை
நாம் வாழவேண்டும்!
அர்த்தமுள்ள வாழ்க்கையை
வாழ்வோமே!!!👍
வணக்கம் Dr./Mr./Ms. V 10.3
அவள்..
கண்கள் தொட்டு இருக்கும் !
கன்னம் தொட்டு இருக்கும் !
காதுமடல் தொட்டு இருக்கும் !
கள்இதழ் தொட்டு இருக்கும் !
கார்கூந்தல் தொட்டு இருக்கும் !
காதலை கேட்டு இருக்கும் !
கண்ணீர் தாங்கி இருக்கும் !
கனவை வாங்கி இருக்கும் !
தூக்கம் வாங்கி இருக்கும் !
மனதை நிச்சயமாய் புரிந்து இருக்கும் !
அவள் "தலையணை "
என்றும்
என் "அரியணை".
வணக்கம் Dr./Mr./Ms. V 10.4
மரத்தின் இலைகள்
உதிர்வது தற்கொலையல்ல,
விழுந்தாலும் மக்கி
மரத்துக்கு உரமாவோமென்ற
நம்பிக்கை.. !
சிந்தி மனிதா சிந்தி!
வணக்கம் Dr./Mr./Ms. V 10.5
பிறரிடம் இருந்து பெறும்
கைத்தட்டலை விட
பலர் செய்யும் வீண்
அதட்டலை விட
ஒரு சிலர் திட்டல்
உன்னை முன்னேற்றும்!
வணக்கம் Dr./Mr./Ms. 10.6
ஒரு பக்கம்..
குடித்த குடிமகன்களின்
தள்ளாட்டம்
இன்னொரு பக்கம்..
குடிநீர் இன்றி மக்களின்
போராட்டம்
இன்றைய நிலைமை
இரண்டு பேரும் நடுத்தெருவில்..!
வணக்கம் Dr./Mr./Ms. 10.7
தோழா..
இல்லாததை நம்பி
இருக்கும் காலத்தை
இழந்துவிடாதே,
இருக்கும் காலத்தில்
இயன்றதைச் முயன்று செய்
இறந்த பின்னும்
இருப்பாய் பலர்
இதயத்தில் நிலைப்பாய்..!
வணக்கம் Dr./Mr./Ms. 10.8
பறவையை போல்
சுதந்திரமாய்
பறந்து சிறகடிக்க ஆசை
என்ன செய்ய
இப்பிறவி பெண்ணாய்
பிறந்தேன் சிறகொடிந்தது ஆசை!
வணக்கம் Dr./Mr./Ms. 10.9
பகைவனையும்
போற்று
ஏனெனில்
உன்னுள்
உறங்கிய
திறமையை
உனக்கே
உணர்த்தி
உன்னை
உலகிற்கு
அறிமுகப்படுத்தியவன்
அவன்தானே!
வணக்கம் Dr./Mr./Ms. 10.10
தொடரும் காலடிகளால்
புதிதாய் கிடைத்திடும் பாதைகள்..
தொடராத போது
அழிந்திடும் பழையதும்..!
தொடர் முயற்சி
பின் தொடர் வெற்றி.!
வணக்கம் Dr./Mr./Ms. V 10.11
நீரின்றி,
நிலமின்றி,
நிதியின்றி,
நிவாரணமும்மின்றி,
நிற்குது விவசாய கூட்டம்.
நிலை மாற வேண்டுமொரு கூட்டம்!
நிற்போம் விவசாயிகளுக்கு துணை!
வணக்கம் Dr./Mr./Ms. V 10.12
நம்ம வாழ்க்கை
எண்ணெயில் பொரித்தெடுத்த
பெரிய அப்பளம் போல்,
பார்க்க அழகுதான்
ம்ம் யாரோ வருத்தெடுக்க
இன்பத்தில் சில விரிசல்
துன்பத்தில் பல விரிசல்
இப்படி உடைந்தே தின்று
மென்று கழியுது காலம்.
இருந்தும் மௌசு குறையல...
வணக்கம் Dr./Mr./Ms. V 10.13
சுட்டெரித்தால்தான்
சூரியன் !
ஒளிர்ந்தால்தான்
நிலவு !
மிதிபட்டால்தான்
பானை !
உதைபட்டால்தான்
கால்பந்து !
சத்தம்போட்டால்தான்
இடிமின்னல் !
தீக்குளித்தால்தான்
சொக்கத்தங்கம் !
வலிதாங்கினால்தான்
சிலை !
ஓடிக்கொண்டிருந்தால்தான்
நதி !
.......
அனுபவப்பட்டால்தான்
வாழ்க்கை!
தோழா..ஏங்காதே
வெற்றிவரை தூங்காதே..
வணக்கம் Dr./Mr./Ms. V 10.14
காவிரி தண்ணீர் விவசாயதிற்கு கேட்டோம்
கர்நாடகம் தரல நீதிமன்றத்தை மதிக்கல!
கிருஷ்ணா குடிநீர் தர கேட்டோம்
கிட்டவந்தும் வந்ததா வரலயானு தெரியல!
கேரளம் அணை கட்டியே தீருவேனு
பாலாறு பாடு தீர்ந்த பாடில்ல!
இல்லையேனு மீன்பிடிக்க கடலுக்கு போனா
இலங்கைகாரன் இருப்பதை கொண்டு தடுக்கறான்!
நானா நீயா சண்ட நாற்காலிக்கு
நம்ம தமிழ்நாட்டுல தரம் தன்மானம் இழந்து!
கல்லால் அடிப்பான் துப்பாக்கியால் சுடுவான்
ஏனெனில் தமிழன் கொன்றாலும் தின்றாலும் கேட்க நாதியில்லை!
நீட்தேர்வு கல்பாக்கம் அனுஉலை ஆதார் சல்லிக்கட்டு
மீத்தேன் அய்டுரோகார்பன் இப்படி நம்மை
சுரண்டும் மத்திய அரசாங்கம்!
தட்டி கேட்க தமிழக அரசும் இல்ல!
தடை செய்ய சட்டங்களும் வரல!
தாரைவார்க்க நாங்களும் ரெடியில்ல!
திருப்பி அடிப்போம் இளைஞர்கள் மெல்ல!
திரும்பி பார்க்கும் உலகம் வெல்ல!
Save farmers
Save nature
Save culture
Save tamil
Save tamilnadu
👍
Hi sir,your blog is awesome.
ReplyDelete.சூப்பர், அருமையான பதிவுகள்.