வாசி யோசி !! V 0.1
தொடக்கத்தை நிலைபடுத்து!!
முடிவை தெளிவுபடுத்து!!
அறிவை கூர்படுத்து!!
சிந்தனையை கனபடுத்து!!
தோல்வியை சரிபடுத்து!!
முயற்சியை அதிகபடுத்து!!
உன்னை அறியபடுத்து!!
வாழ்வை மேம்படுத்து!!
சொர்க்கம் நம் கையில்👍😁
வாசி யோசி !! V 0.4
முயன்றால்..
முழு நிலவையும் கையில் மறைக்கலாம்!!
உதவினால்..
ஊரே ஒருநாள் உறவாக நிற்க்கும்!!
பயின்றால்..
பாரில் உனக்கென பாதை அமையலாம்!!
மதித்தால்..
மங்கா வாழ்வை விரைந்து அடையலாம்!!
நம்பினால்..
நாளை உலகம் உன்னை நாடலாம்!!
வாசி யோசி !! V 0.5
ஜனனம் எனும்
பிறவி எடுத்த நாம்..
வீரம் எனும்
விருட்சம் கொண்டு,
மதி எனும்
மகிழ்ச்சி கொண்டு,
சிரிப்பு எனும்
சிறகு கொண்டு,
இருள் எனும்
மேகம் நீக்கி,
வாழ்க்கை எனும்
வானில் என்றும்,
நட்சத்திரங்களாய் நாம்
நாளும் ஜொலிப்போம்!!!
வாசி யோசி !! V 0.7
நவீன பெண்களின்
நவீன பழமொழிகள்..
அகத்தின் அழகு அலங்காரத்தில் தெரியும்
வாசி யோசி !! V 0.7
வாசித்து கொண்டே இருக்கத்தான்
வாய்..
யோசித்து கொண்டே
இருக்கத்தான்
மூளை..
நேசித்து கொண்டே இருக்கத்தான்
இதயம்..
முயற்சித்து கொண்டே இருக்கத்தான்
மூக்கு..
ருசித்து கொண்டே இருக்கத்தான்
நாக்கு..
பசித்து கொண்டே இருக்கத்தான்
வயிறு..
தேடி கொண்டே இருக்கத்தான்
கண்கள்..
ஓடி கொண்டே இருக்கத்தான்
கால்கள்..
உதவிக் கொண்டே இருக்கத்தான்
கைகள்..
உழைத்து கொண்டே இருக்கத்தான்
விரல்கள்..
வாசி யோசி !! V 0.8
அனுபவமிக்க தாத்தா பாட்டி
அன்பான அம்மா அப்பா
அறிவான குருமார்கள்
அக்கறையான அக்கா தம்பி
அரவணைக்கும் உறவினர்கள்
அனைத்துமான நண்பர்கள்
அமைந்தால் கிடைத்த வரம்!
அமச்சுகிட்டா வாழ்க்கையே வரம்!
வாசி யோசி !! V 0.9
உதடிற்கும்
உள்ளத்திற்கும்
இடையே உள்ள தூரத்தை குறை??
இல்லையேல்
வாய் வார்த்தைக்கும்
வாழ்வியலுக்கும்
இடையே கடப்பதிலேயே ஆவாய் நீ இறை..
வாசி யோசி !! V 0.8
நம் நாட்டில்..
கழுத்தில்
கத்தி வைத்து
பணம் பறிக்கும்
திருடர்கள் ஒருபுறம்😪
உடம்பில்
கத்தி வைத்து
பணம் பறிக்கும்
மருத்துவர்கள் ஒருபுறம்😭
வாழ்க்கைக்கே
கத்தி வைத்து
பணம் பறிக்கும்
கல்வியாளர்கள் ஒருபுறம்..
உயிருக்கே
கத்தி வைத்து
பணம் பறிக்கும்
முதலீட்டாளர்கள் ஒருபுறம்..
ம்ம்ம்ம்
இலவசங்களை கட்டணமாக்கி விட்டு
கட்டணங்களை இலவசமாக்கி
அரசியல் நடக்கிறது💀
உருப்பட்டுறும்!!!
வாசி யோசி !! V 1.1
ஊடல் தேடல்
ஆடல் பாடல்
முயற்சி பயிற்சி
தோல்வி வெற்றி
எதிர்பார்ப்பு ஏமாற்றம்
காதல் காவியம்
பிரிவு உறவு
பாசம் பந்தம்
சந்தோஷம் சோகம்
இல்லா வாழ்க்கை கசக்கும்..
இன்பமும் துன்பமும்
நிறைந்தது தான் வாழ்க்கை!!!
வாசி யோசி! V 1.3
கொட்டி கொடுப்பதற்கே அன்பு
தட்டி கொடுப்பதற்கே நட்பு
வெட்டி எடுப்பதற்கே தங்கம்
எட்டி பறிப்பதற்கே மனசு
வாட்டி வதைப்பதற்கே மனசாட்சி
ஊட்டி வளர்பதற்கே தமிழ்
மாட்டி தவிப்பதற்கே காதல்
போட்டி போடுவதற்கே அறிவு
பேட்டி எடுப்பதற்கே சர்ச்சை
காட்டி மகிழ்வதற்கே கருணை
முட்டி முயல்வதற்கே தோல்வி
கூட்டி கொடுப்பதற்கே ஈகை
நீட்டி வாழ்வதற்கே வாழ்க்கை!!!
வாசி யோசி! V 1.4
பெண்ணின்..
கையில் புரளும் கோடிகளுக்கு மதிப்பு உண்டு,
அவளுக்கு???
கையில் குலுங்கும் வளைக்கும் மதிப்பு உண்டு,
அவளுக்கு???
நெற்றியில் ஆடும் சுட்டிக்கு மதிப்பு உண்டு,
அவளுக்கு???
கழுத்தை அலங்கரிக்கும் நகைகளுக்கு மதிப்பு உண்டு,
அவளுக்கு???
உடல் கொடுக்கும் காமத்திற்க்கு கூட மதிப்பு உண்டு,
அவளுக்கு???
வயிற்றில் சுமக்கும் பிள்ளைக்கு மதிப்பு உண்டு,
அவளுக்கு???
உயிர் இல்லாத பொருள்களுக்கு மதிப்பு உண்டு,
அவளுக்கு???
ஆண்களே..
ஆறறிவு ஆணாதிக்கதிற்கு அல்ல,
சிந்தியுங்கள்!!
பெண்ணியம் காப்போம்!!
பெண்மை மதிப்போம்!!
வாசி யோசி !! V 1.5
நண்பா..
முடியாத துவக்கம் நீ..
முடியும் உறவும் நீ..
கிடைக்காத வார்த்தை நீ..
கிடைத்த கருவறை நீ..
கருவிழியில் பிறந்தவன் நீ..
வரும்வழியில் தொடர்பவன் நீ..
மலரும் நினைவும் நீ..
மலராத பூவும் (நட்பு) நீ..
வாசி யோசி !! V 1.6
அசதியில் உறக்கம்
வசதியில் இரக்கம்
பிணியில் மருந்து
பணியில் ஈடுபாடு
வறுமையிலும் உறவு
இயலாமையில் துணிவு
பசியில் உணவு
ருசியில் பகிர்வு
தோல்வியில் பயிற்சி
வெற்றியில் முயற்சி
துயர்வில் நட்பு
உயர்வில் பணிவு
இவையனைத்தும் வாய்த்தால்
வாழ்க்கையாகும் சொர்க்கம்
இல்லாவிடில் வாழ்ந்தும்
வாழ்க்கை நரகம்..
வாசி யோசி !! V 1.7
அறிவை தீட்டு
ஆகாயம் வசப்படும்
நம்பிக்கையை கூட்டு
நிலவை தொடலாம்
முயற்சியால் முட்டு
நட்சத்திரமாய் ஜொலிக்கலாம்
வாசி யோசி !! V 1.9
எதுவும் நடக்கலாம்
எப்படியும் இருக்கலாம்
ஏளனமாய் பார்க்கலாம்
எட்டிக்கூட உதைக்கலாம்
துவளாமல்..
எதிர்த்து கொண்டே இரு..
எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது!!!
வாசி யோசி !! V 2.0
வெட்டினாலும் நிழல் தருவது
மரத்தின் இயல்பு..
தோண்டினாலும் இடம் தருவது
நிலத்தின் இயல்பு..
வடித்தாலும் தண்ணீர் தருவது
ஊற்றின் இயல்பு..
பருவம் பொய்த்தாலும் மழை தருவது
மேகத்தின் இயல்பு..
மாசுபடுத்தினாலும் ஓயாமல் வீசுவது
காற்றின் இயல்பு..
என்ன செய்தாலும் தன்மை மாறாதது
நெருப்பின் இயல்பு..
ஆனால்..
மனிதனின் இயல்பு? ??
இயற்கையை நேசிப்போம்
இயற்கையை காப்போம்
வாசி யோசி !! V 2.1
கவனம் சிதற வேணா,
காரியத்தில் கவனம் வேணும்..
கலக்கம் ஏதும் வேணா,
காலம் போற்ற வேணும்..
அழுது புலம்ப வேணா,
ஆகாயம் தொட வேணும்..
பயந்து சாக வேணா,
பாய்ந்து சீற வேணும்..
ஓய்ந்து ஒடுங்க வேணா,
ஒருகை பார்க்க வேணும்..
6/17/2015, 9:54 PM - Anbu: பயந்தா
முன்னேற்றதிற்கு இடமில்லை
துணிந்தா
பின்னேற்றதிற்கு இடமில்லை
பயின்றா
தடுமாற்றத்திற்கு இடமில்லை
முயன்றா
ஏமாற்றத்திற்கு இடமில்லை
நம்பிக்கை இருந்தா
தோல்விக்கு இடமில்லை
தன்னம்பிக்கை இருந்தா
வெற்றிக்கு தடையில்லை
வாசி யோசி !! V 2.2
கண்ணில் கனிவு
பார்வையில் பாசம்
உதட்டில் சிரிப்பு
சொல்லில் நேர்மை
இதயத்தில் அன்பு
எழுத்தில் உண்மை
கொடுப்பதில் தருமம்
நடையில் பணிவு
உடையில் எளிமை
செயலில் உறுதி
பணியில் கடமை
குணத்தில் பண்பு
எண்ணத்தில் தெளிவு
முடிவில் நீதி
இவைகள் இருந்தா
நீதான் Hero
வாசி யோசி !! V 2.3
அம்மா திட்டினா
அழுகையோடு அன்பும் வரும்..
அப்பா திட்டினா
கோபத்தோடு பொருப்பு வரும்..
உடன்பிறப்பு திட்டினா
ஆத்திரத்தோடு உரிமை வரும்..
நண்பன் திட்டினா
ரோஷத்தோடு ஆறுதலும் வரும்..
மனைவி திட்டினா
கொஞ்சலோடு கெஞ்சலும் வரும்..
காதல்ல திட்டினா
ஈகோவோடு மோதலும் வரும்..
வேலைல பாஸ் திட்டினா மட்டும்
கடமை உணர்ச்சிக்கு பதில் சிரிப்புதான் வருது???
ஏன்???
வாசி யோசி !! V 2.4
தன்னலமில்லா தலைவன்
பாசத்தில் வள்ளல்
நேசிப்பில் கள்ளன்
கோபத்தில் குழந்தை
கண்டிப்பில் பகைவன்
வழிகாட்டுதலில் ஊன்றுகோல்
அறிவில் ஆசான்
இரக்கத்தில் இறைவன்
ஈகையில் ஈசன்
பாதுகாப்பில் காவலன்
அரவணைப்பில் தாய்!!!
அன்புள்ள அப்பா,
நீதான் என் ஹீரோ
நீயில்லையேல் என்றும் நான் ஜீரோ!!!
Father's day wishes...
வாசி யோசி !! V 2.5
தந்தையே
உன் வயிற்றில்
சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம்
சுமந்தாய்
உன் நெஞ்சினில்..
கருவறை
மட்டும்தான்
உனக்கில்லை
தாயென்று சொல்ல
உன்னை..
உன்னை மறந்தாய்
உறக்கம் தொலைத்தாய்
உழைத்தாய்
களைத்தாய்
வேர்வையில்
குளித்தாய்
நாங்கள் வாழவே
நலமாய்...
வலிகள்
எம்மைத்தாக்கினால்
வலிப்பதென்னவோ
உனக்கல்லவா..
துயரங்களால்
எம் விழி
நனைந்தால்
துடைப்பது
உன் விரல்களல்லவா..
சோதனையானாலும்
வேதனையானாலும்
தோல் கொடுக்கும்
தோழன்
நீயல்லவா...
உன்னைப்போற்ற
ஓர் நாள்
மட்டும் போதுமா...
அனுதினமும்
போற்றப்படவேண்டும்
உன் புகழ்
பூவுலகம்
வாழும் காலம் வரை...!
வாசி யோசி !! V 2.6
என்னடா வாழ்க்கை இதுவென்று
சலித்துக் கொள்ளாதே,
இளைஞனாய் இருந்தாலும் இயலாதவனாவாய்!!
என் வாழ்க்கை இதுதானென்று
உறுதியாய் இரு
முதுமை கிழடு ஆனாலும் இளைஞனாவாய்!!!
வாசி யோசி !! V 2.7
தொட்ட வெற்றிகளை
விலக்கிவிடு..
தழுவும் தோல்விகளை
சேமித்துவை,
பெரும் வெற்றி உன்னை
தேடி வரும்..
வாசி யோசி !! V 2.8
நம்பிக்கை பிறர் மீது இருந்தால்,
உன் தன்னம்பிக்கை குறையலாம்..
தன்னம்பிக்கை உன்னிடம் இருந்தால்,
பிறர் மீது குறை கூறுவது குறையலாம்..
உன்னை ரசி
உலகை ரசிப்பாய்..
உலகை ரசி
உலகையே ஆள்வாய்!!!!
வாசி யோசி !! V 2.9
அவளை உரச ஆசைப்பட்டே,
வாழ் நாளை கரைக்கிறேன்.. சோப்பு
அவளை காக்க நினைத்தே,
துப்பாக்கியாய் நெற்றிக்கண் சிவந்து நிற்கின்றேன்..பொட்டு
அவளின் அழகுக்கு அழகு சேர்க்க,
No comments:
Post a Comment