Wednesday, October 11, 2017

PADINGA RASIPEENGA KAVITHAI VERSIONS

படிங்க ரசிப்பீங்க!! V 0.1

நாடு எங்கே போகுது???

மளிகை பொருள் வாங்கு இல்லை Q
மதுக்கடைல தவங்கிடக்குது Q

தாடி வச்சவன ஆசாமிங்கிறான்
குடுமி வச்சவன சாமி'ங்கிறான்

பெண்ணியம் பற்றி ஒரு பக்கம் பேசுறான்
பெண்ணை கண்டால் உடனே  கண்ணியம் இழக்கிறான்

வண்டில எதுக்கோ ராக்கெட்டா பறக்குறான்
வா வானு 108ட்ட கூடவே அழைக்குறான்

ஆங்கிலேயன் அடிமைதனம் என்றோ போயாச்சு
அவன் விட்ட மது மாது உபயோக பொருள்னு அடிமை மோகம் தீரல

சாமானியர்கள் சாணக்கியர்களின் காலம் போயாச்சி
சகுனி குடும்ப அரசியல் என்ற நிலையாச்சி

விலைபொருள் போதைபொருள் பெண் என்றாச்சு
விளையும் பயிரை கிள்ளும் காமுகன் நாடாச்சு

சாதிகள் ஒழியனும்னு மேடைக்கு மேடை சொல்லுறான்
சாதி பார்த்து மதம் பார்த்துதான்  காதல் கல்யாணம் பண்ணுறான்

இலவசமா எதஎதையோ சொல்லி குடுக்கிறாங்க
கொடுக்க வேண்டிய கல்விய காசு கேட்டு மறுக்கிறாங்க

கேளிக்கை வாடிக்கையாகி போச்சு
கேவலம் கேள்வியாகி போச்சு

உணர்வுகளை இழந்து மனிதன் நிற்கிறான்
உலகம் மறந்து உலாவி திரிகிறான்

நாடு எங்கே போகுது???

படிங்க ரசிப்பீங்க!! V 0.2

சுகமென நினைத்து,
காலமும் சுமக்கிறாய்..

உன்னை தேய்த்து,
என்னை வளர்க்கிறாய்..

அன்பை மறைத்து,
அறிவை புகட்டினாய்..

கவலைகளை மறந்து,
மகிழ்வை கற்றுத்தந்தாய்..

வலியை உணர்ந்து,
உழைக்க சொன்னாய்..

முன்னே முறைத்து,
பின்னே பெருமை பேசுவாய்..

வழிகாட்டியாய் இருந்து,
வழி நடத்தினாய்..

சொற்க்கள் தந்து,
அர்த்தங்கள் அறியவைத்தாய்..

ஆயிரம் பேர் இருந்தாலும்,
அப்பா போல் இருக்க முடியாது..

தந்தையை தந்து
கற்களாய், மண்ணாய், மரங்களாய் ஆனானோ கடவுள்..

தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம்
அவர் கையெழுத்தே உன் தலையெழுத்து அவர் சொல்லே உன் மந்திரம்

ஒரு நாள் அவர் இல்லாமல் போகலாம்
இருக்கும் போது அவரை
மதிப்போம்
துதிப்போம்
போற்றுவோம்
காப்பாற்றுவோம்


படிங்க ரசிப்பீங்க!! V 0.3

சோதனையிலிருந்து கண்ணீர்

கண்ணீரிலிருந்து தெளிவு

தெளிவிலிருந்து அனுபவம்

அனுபவத்திலிருந்து இலட்சியம்

இலட்சியத்திலிருந்து வெற்றி

வெற்றி கிட்டுமோ இல்லையோ
இதுதான் மனித தத்துவம்! !!!

படிங்க ரசிப்பீங்க!! V 0.5

நிலம் மழை பொழிந்தாலும்
நிலா இருண்டு போனாலும்
விதை பின்னே முளைத்தாலும்
விண்ணில் தோட்டம் அமைந்தாலும்
பூமியில் நட்சத்திரங்கள் தோன்றினாலும்
பூலோகமே தலைகீழாக நின்றாலும்
கடிகாரம் பின்னோக்கி சுழன்றாலும்
கடல் நீர் கவிழ்ந்தாலும்
காதல் திருமணத்தில் முடிந்தாலும்
எது எப்படி ஆனாலும்
என்றைக்கும் நட்பு நட்புதாங்க!!!

மாறவே மாறாது😆


படிங்க ரசிப்பீங்க!! V 0.6

பணம் போனால் சம்பாதிச்சுரலாம்,
மானம் போனா??

மலர்முகம் வாடினா மலர்ந்திடும்,
மனிதமனம் போனா??

மறதியால் கெட்டா திருந்திடலாம்,
மதி போனா??

தயிர் திரிஞ்சா மாத்திக்கலாம்,
உயிர் போனா??

பல் போனா முளைக்கும்,
சொல் போனா??

இரணம் வந்தா ஆறிடும்,
குணம் போனா??

கை இல்லாட்டா வாழ்ந்திடலாம்,
தன்னம்பிக்கை போனா??

மனம், குணம், மானம்,
சொல், மதி, உயிர்,
தன்னம்பிக்கை
இல்லாதவன் மனிதனா??


படிங்க ரசிப்பீங்க!! V 0.8

உள்ளே இருக்கும்
தண்ணீரை இளநீராக்கும்
தென்னை!!!

உள்ளே செல்லும்
காற்றை இசையாக்கும்
மூங்கில்!!!

உள்ளே ஏற்க்கும்
நீரை மழையாக்கும்
மேகம்!!!

உள்ளே தென்படும்
தன்னம்பிக்கையை வெற்றியாக்கும்
முயற்சி!!!

உள்ளே இருக்கும்
எண்ணங்களையே வாழ்க்கையாக்கும்
மனசு!!!

உள்ளே போகும்
உணவையே(நல்ல) மருந்தாக்கும்
உடல்!!!

உலகின் நிகழ்வுகள்
அனைத்தும் இயற்கையே!!!!!


படிங்க ரசிப்பீங்க!! V 0.9

உலகின் மிகக் கூர்மையான ஆயுதம் வார்த்தை

உலகில் பல செயல்களை செய்யும் சிறந்த ஒரே டூல் கைகள்!!!

உலகின் மிக சிறந்த ஆட்டோமொபைல் நம் கால்கள்!!!

உலகின் மிகப்பெரிய இடம் சிறுஇதயம்

உலகிலேயே மிகநீளமாக வளரும் அற்புதம் கூந்தல்!!!

உலகின் வற்றாத ஜீவநதி கண்ணீர்!!!

உலகில் அதிக காந்தம் உற்பத்தி ஆகுமிடம் கண்கள்!!!
உலகில் மிகச்சிறந்த தொழில்நுட்பம் வயிறு!!!

உலகின் மிக பாதுகாப்பான தங்குமிடம் தாயின் கருவறை!!!

உலகில் எல்லா நோய்களுக்கும் அதிசய வகை மருந்து சிரிப்பு!!!

உலகின் மிக பெரிய தொழிற்சாலை உடல்(Place to live by us)!!!

உலகின் மிகச்சிறந்த தலைவன் மூளை!!!

உலகின் மிகப்பெரிய அதிசயம் மனிதன்


படிங்க ரசிப்பீங்க!! V 1.0

மிதிப்பதை மற
மதிப்பதை அறி

கெடுப்பதை மற
கொடுப்பதை அறி

பணத்தை மற
பண்பை அறி

கனவை மற
கடமை அறி

நடத்தை மற
நட்பை அறி

முகநூல் மற
பாடநூல் அறி

உதாசனிப்பு மற
உன்னை அறி

மதம் மற
மனிதம் அறி


படிங்க ரசிப்பீங்க!! V 1.1

உறங்கிடு
முழித்திடு
கழித்திடு
குளித்திடு
சாப்ட்டிடு
சென்றிடு
உழைத்திடு
உண்றிடு
உழைத்திடு
திரும்பிடு
விளையாடிடு
மகிழ்ந்திடு
குலாவிடு
திளைத்திடு
பசியாறிடு
உறவாடிடு
தூங்கிடு.குட் நைட்


படிங்க ரசிப்பீங்க!! V 1.2
எறிவிட விருப்பு இருந்தால்
ஏணிப்படியும் ஆகும் வானம்!!!
என்னடாஇதுனு நீ சலித்தால்
எல்லாமே ஆகும் சோகம்!!!

நனவாகும் நீ நினைத்தால்
நிறைவேறா கனவுகளும்!!!
நிகழ்வுகள் அனைத்தும் இனிதாகும்
நினைத்தால் வாழ்வு நலமாகும்!!!


படிங்க ரசிப்பீங்க!! V 1.3

குழந்தைய கிள்ளுறவன்
தொட்டிலையும் ஆட்டுறான்

பணம் இருக்கிறவன் கிட்ட மனமில்ல
மனம் இருக்கிறவன் கிட்ட பணமில்ல

படிச்சவன் ஆகுறான் தொழிலாளி
படிக்காதவன் தான் முதலாளி

வேண்டுறப்ப கிடைப்பதில்லை
இருக்குறப்ப தேவையில்லை

பொருள் வைத்திருப்பவனுக்கு அறிவில்ல
அறிவு இருப்பவனிடம் பொருளில்ல

நேசிச்சவங்கல கண்டிப்பா  பிரியறோம்
பிடிக்கலனாலும் பலரிடம் நேசிப்பதாய்  நடிக்கிறோம்

காயங்கள் பல நேருது
காலங்கள் அதை மாற்றுது

கெடுப்பவன் உச்சதுல இருக்கான்
கொடுப்பவன் முச்சந்தியில நிக்குறான்

என்ன உலகம்...
என்ன வாழ்க்கை...


படிங்க ரசிப்பீங்க!! V 1.4

மனம் ஆகும் கழிப்பறை,
கண்டதை நீ உள்ளே இட்டால் 😤
மனம் ஆகும் பூந்தோட்டம்,
நல்லதை நீ உள்ளே விதைத்தால் 👍

மனசு பத்திரம் 😜


படிங்க ரசிப்பீங்க!! V 1.5

நட்பிற்குள்..
அன்பும் வம்பும் அழகு
சிரிப்பும் அழுகையும் அழகு
ஆட்டமும் பாட்டமும் அழகு
சொல்லும் செயலும் அழகு
ஊடலும் கூடலும் அழகு
உறவும் உரிமையும் அழகு
பரிவும் பாசமும் அழகு
கேலியும் கிண்டலும் அழகு
விட்டுக்கொடுப்பதும் விடைகொடுப்பதும் அழகு
நட்பிற்குள் இப்படி யாவும் அழகு! !!!!!!


படிங்க ரசிப்பீங்க!! V 1.6

ஒரு உலகம்
ஒரு வானம்
ஒரு பூமி
ஒரு நிலா
ஒரு சூரியன்
ஒரு படைப்பு
ஒரு உயிர்
ஒரு சொல்
ஒரு மந்திரம்
ஒரு கோவில் (அப்பா)
ஒரு விளக்கு
ஒரு தீபம்
ஒரு ஒளி
ஒரு தெய்வம் (அம்மா)

தெய்வங்கள் தின வாழ்த்துக்கள்


படிங்க ரசிப்பீங்க!! V 1.8

மழைல நெனஞ்சா
துவட்ட
அன்னையின் முந்தானை!!!

சளி பிடிச்சா
தடுக்க
அன்னையின் சுக்குடீ!!!

காய்ச்சல் வந்தா
நிறுத்த
அன்னையின் அரவணைப்பு!!!

உடம்பு வலிச்சா
போக
அன்னையின் ஒத்தடம்!!!

வயிறு சரியில்லனா
சரிக்கட்ட
அன்னையின் கசாயம்!!!

தனிமைல தவிச்சா
தீர
அன்னையின் பாசம்!!!

சோகம் நேர்ந்தா
போக்க
அன்னையின் சிரிப்பு!!!

தளர்ந்து நின்றா
ஊக்கம்
அன்னையின் சொல்!!!

அன்னை என்றும் ஒரு படிக்காத டாக்டர்..
அன்னை உபயோகிக்கும் சமயலறை ஒரு ஆஸ்பிடல்..
அன்னையின் அஞ்சறைப்பெட்டி மெடிசன்ஸ்..

வந்த, வரும், வரப்போகும் நோய்களுக்கெல்லாம் ஒரேநிலை மருந்து..அன்னை


படிங்க ரசிப்பீங்க!! V 1.9

பெண்ணே,
சாதம் வடித்தது போதும்
சபிப்பவர்களை
சாகவும் அடி..

பெண்ணே,
தூசி துடைத்தது போதும்
துரத்துபவர்களை
துப்பாக்கியால் சுடு..

பெண்ணே,
பாசம் காட்டியது போதும்
பழிப்பவர்களை
பந்தாடு..

பெண்ணே,
அழுது புலம்பியது போதும்
அடிமை படுத்துபவர்கள் மேல்
அணுகுண்டு போடு..

பெண்ணே,
துணி துவைத்தது போதும்
தூண்டிலிபவர்களை
துரத்தி அடி..

பெண்ணே,
கனிவாய் இருந்தது போதும்
காமுகர்களை
காணா பிணமாக்கு..

பெண்ணே,
நட்பில் அளவு கொள்
கற்பில் தெளிவு கொள்
ஆணுக்கு பெண் நிகர் அறிந்து கொள்


படிங்க ரசிப்பீங்க!! V 2.0

நாளைய உலகம்
சிறிய கற்பனை..

செயற்கை உணவுகளை
உட்கொள்ளும் மனிதர்கள்..

தண்ணீர் கேட்டு
அலையும் மனிதர்கள்..

Oxygen குழாயுடன்
அலையும் மனிதர்கள்..

நின்று கொண்டே
தூங்கும் மனிதர்கள்..

மருத்துவம் தெரியாத
நோய்களுடன் மனிதர்கள்..



படிங்க ரசிப்பீங்க!! V 2.0

நாளைய உலகம்
சிறிய கற்பனை..

செயற்கை உணவுகளை
உட்கொள்ளும் மனிதர்கள்..

தண்ணீர் கேட்டு
அலையும் மனிதர்கள்..

Oxygen குழாயுடன்
அலையும் மனிதர்கள்..

நின்று கொண்டே
தூங்கும் மனிதர்கள்..

மருத்துவம் தெரியாத
நோய்களுடன் மனிதர்கள்..

மொபைல்கிட்ட மட்டும்
பேசும் மனிதர்கள்..

வயல்வெளியை படத்தில் மட்டுமே
பார்க்கும் மனிதர்கள்..

குளிக்க முடியாமல்
துடைத்துக்கொள்ளும் மனிதர்கள்..

ஆணா பெண்ணா
தெரியாத மனிதர்கள்..

வெயிலே நிழலாய்
நிற்க்கும் மனிதர்கள்..

நீதிமன்றத்தை வாய்தா மன்றமாகிய
வழக்கு மனிதர்கள்..

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
அவசரப்படும் மனிதர்கள்..

கற்பனை நிஜமாகும்
காலம் வெகுதூரம் இல்லை..
சிந்தியுங்கள் மனிதர்களே..


No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...