அடடே V 5.7.1
வீறு கொண்டு எழுந்திடு !!
வியர்வை சிந்தி உழைத்திடு !!
தடைகளை நீ தாண்டிடு !!
தவருகளை நீ திருத்திடு !!
கோபத்தை அழித்திடு !!
கொள்கையை நீ வகுத்திடு !!
காலத்தை நீ கணித்திடு !!
கற்பனையை நீ வளர்த்திடு !!
சோதனையை நீ தாங்கிடு !!
சோர்வை நீ தவிர்த்திடு !!
சிந்தித்து செயல்படு!!
சிறப்பாய் நீ வாழ்ந்திடு !!
உண்மைக்கு உதவிடு !!
உதவிக்கு தோள்கொடு !!
பொறுமையில் உயர்ந்திடு !!
பொறுப்பாய் உணர்த்திடு !!
தாய் தந்தையை மதித்திடு !!
தவறாமல் காத்திடு !!
கடவுளை வணங்கிடு !!
கடமையை செய்திடு !!
உறுதியா உழைத்திடு !!
உண்மையா உயர்ந்திடு !!
அடடே V 5.8
அன்பே..
நீயில்லா வாழ்க்கை
நிலவில்லா வானம்!
மரமில்லா வனம்!
நதியில்லா ஓடம்!
நீரில்லா குடம்!
மழையில்லா பூமி!
பூஜையில்லா சாமி!
தீயில்லா தீபம்!
வரமில்லா சாபம்!
சிறகில்லா பறவை!
கண்ணில்லா பார்வை!
திசையில்லா காற்று!
நிலையில்லா ஊற்று!
கனவில்லா தூக்கம்!
அளவில்லா துக்கம்!
நரகமான உலகம்!
கேலியான சமூகம்!
ஊமையான ஊர்!
உயிரில்லா உடல்!
அடடே V 5.9
வாழும் வாழ்க்கை
அரிது என்பதால்
கிடைக்கும் நேரத்தை
விரயம் செய்யாதே!
வெற்றியின் ஆசை
பெரிது என்பதால்
என்றும் உனது
முயற்சியை கைவிடாதே!!
அடடே V 6.0
வெறும் HTML நான்
என் பெயரே Language
அடையாளம் Markup தான்
CSS ஆக என்னுள் வந்தாய்
பல வர்ணங்களை தூவினாய்
சில மாற்றங்களை புரிந்தாய்
JavaScript கொண்டு இயக்கினாய்
என்னவெல்லாம் எனக்காக யேசித்தாய்
உனக்கு மட்டுமே Client ஆக இருந்தேன்
JSPயை புதிதாய் சேர்த்தாய்
நீ Serverரிடம் பேசு என
சொன்னாய்
இல்லை முடியாது என கூறுகையில்
என்னை Servletடம் அடைத்து விட்டாய்
மீட்பாயா? இல்லை மீள்வேனோ?
நினைவில் கொள் எத்தனை
தொழில்நுட்பம் வந்தாலும்
நான் நான்தான்
உன்னை நினைத்து ஏங்கும்
நான் நான்தான்!
பெண்ணே நீ மட்டும்
ஏன் மாற மறுக்கிறாய்???
அடடே V 6.1
பக்திப் பிடியில்
சிவா சிவானு அலைந்தேன்!
பித்தம் பிடித்தபடி
சிவனேன்னு இருந்தேன்!
சிவந்து கன்னம் காட்டி
என் எண்ணம் சிவக்க வைச்சா!
சிவனை சிந்திக்க மறந்து,
பைத்தியம் பிடித்தபடி
சிவசிவனு சிவப்பணு
செல் சொல்ல அலையுறேன்!
சிரித்து சரி செயய்வாளோ?
இல்ல சிரித்தே என்னை
சவம் செய்வாளோ?
அடடே V 6.2
தோழா !
துயரை
தூக்கிலிடு!
துன்பத்தை
தூக்கி போடு !
துக்கத்தை
தூர வீசு!
சோகத்தை
துரத்தி விடு!
தேவையற்றதை
தூர்வாரு!
இரத்தமெல்லாம்
சுத்தமாக்கு !
நரம்பெல்லாம்
இறுக்கி முறுக்கு !
மூளைக்கு
வேலை புகட்டு !
வெற்றிக்கு
இலக்கு காட்டு!
புன்னகையுடன்
பூவுலகம் சுற்று!
வெற்றியுடன்
வீர நடை ஏற்று !
அயற்சியை களை !!
முயற்சியில் விளை !
இளைஞனே ! எழுந்து வா!!
இருகரம் ! இணைந்து வா!!
அடடே V 6.3
நண்பா நீ என்..
அவசர உதவி 108.
ஆறாம் அறிவு.
இயங்ககும் இதயம்.
ஈடுஇணையற்ற பொக்கிஷம்.
உயிரின் ஓசை.
ஊன்சோறு உடம்போடு.
எண்ணத்தின் வெளிப்பாடு.
ஏக்கத்தின் தேவை.
ஐயத்தின் தீர்வு.
ஒப்பனையில்லா அகம்.
ஓய்ந்தாலும் நிற்காத கடிகாரம்.
ஔடதமாய் எல்லா நேரம்.
அஃது நண்பா நீ "நான்".
அடடே V 6.4
உன் நண்பர்கள்..
அருகில் இருந்தால்
நிழலாய் வை!
தொலைவில் இருந்தால்
நினைவில் வை!
உள்ளத்தில் நீ இருக்கும்படி
நிஜமாய் வை!
அடடே V 6.5
க'ண்ணும் கருத்துமாய்
இருப்பவன்!
கா'லை வார நினைக்காதவன் !
கி'ழமை ஏதும்
பார்க்காதவன்!
கீ'ழே விழ விடாதவன்!
கு'ழந்தை போல் பார்பவன்!
கூ'ப்பிட்டால் ஓடி
வருபவன்!
கெ'ட்டதை விடாதவன்!
கே'ட்டதை செய்பவன்!
கை'கள் பற்றி விடாதவன்!
கொ'டி நட்பில் நாட்டியவன்
!
கோ'டி கொட்டினாலும்
கிடைக்காதவன் !
கௌ'ரவமாய் சொல்வேன் என்
நண்பனவன்.!
அடடே V 6.6
பெற்றவர்கள் பெற்ற
கடன் தீர்ந்ததாக
கூட எண்ணலாம்!
உடன் பிறப்புகள் விட்டுக்
கொடுக்காமல் போகலாம்!
கட்டிய மனைவி செவி
மடுக்காமல் போகலாம்!
பெற்ற பிள்ளைகள்
கூட கைவிட்டு விடலாம்!
ஆனால்
உற்ற நண்பன்
உண்மையான நண்பன்
ஒரு போதும்
உன்னை
கை விடமாட்டான்!
நீ தவறுகள் செய்ய
அனுமதிக்க மாட்டான்!
நீ தவறினால் தவறாமல்
தாங்கி நிற்பான்!
உன்னை விட்டு விலகாது
உடனிருக்கும் உன்
பிரதிபலிப்பு!
" உன் நண்பனே"
அடடே V 6.7
ஜடமாய் இருந்தேன் நான்
Portable object எனக்கு
Object orientation சொல்லி
கொடுத்தால் அவள்.
Simple language தான்
அதனை சொல்லி
கொடுத்ததன் மூலம்
என்னை முழு
மனிதனாக மாற்றினாள்.
I feel secured but still
My case was sensitive?.
So architectureர மாத்தி
Robust ஆளான என்னையே
Neutral ஆக்கிட்டா!.
Disturb பண்ணியே என்ன
Distributed மாத்திட்டா!.
என்னை ஏங்கவிட்டு
Platform independent ஆக
இருந்தவனை அவள்
Platformல அலைய வச்சுட்டா.
என்ன செய்ய
வாழவா? சாகவா?
(வாழ்வோடு
ஜாவாவா?)
அடடே V 6.9
தோழா..
துயரை துரத்துடா!
தூற்றுவோரை ஒதுக்குடா!
சோம்பலை போக்குடா!
நீயே நாட்டின் இதய துடிப்புடா!
உன்னையே செதுக்குடா!
இலட்சியம் கொள்ளடா!
இளமையை இயக்குடா!
நம்பிக்கை ஏத்துடா!
இலக்கில் மோதுடா!
இமயம் தொடுடா!
வெற்றிகொடி நிறுத்துடா!
அடங்கா நெருப்புடா நீ !!!
மகிழ்ச்சி 😊
அடடே V 6.8
அவளின் ஒரு செல்லஅடி
சொல்லிவிடும் அன்பை..
அவளின் ஒரு துளி கண்ணீர்
சொல்லிவிடும் பாசத்தை..
அவளின் ஒரு தாலாட்டு
சொல்லிவிடும் தாய்மடியை..
அவளின் ஒரு அரவணைப்பு
சொல்லிவிடும் மாற்றத்தை..
அவளின் ஒரு முத்தம்
சொல்லிவிடும் காதலை.
அவளின் ஒரு ஸ்பரிசம்
சொல்லிவிடும் காமத்தை..
அவளின் ஒரு பதற்றம்
சொல்லிவிடும் அக்கறையை..
அவளின் ஒரு விரல் கோர்வை
சொல்லிவிடும் நட்பை..
அவளின் ஒரு தவிப்பு
சொல்லிவிடும் நேசத்தை..
அவளின் ஒரு கேள்வி
சொல்லிவிடும் அறிவியலை..
அவளின் ஒரு தேடல்
சொல்லிவிடும் தேவையை..
அவளின் ஒரு பிரிவு
சொல்லிவிடும் தாக்கத்தை..
அவளின் ஒரு சந்திப்பு
சொல்லிவிடும் காலத்தை..
அவளின் ஒரு வார்த்தை
சொல்லிவிடும் ரகசியத்தை..
அவளின் ஒரு பார்வை
சொல்லிவிடும் அர்த்தத்தை..
அவளின் ஒரு புன்னகை
சொல்லிவிடும் ஆயுளை..
அவளின் ஒரு நம்பிக்கை
சொல்லிவிடும் வாழ்க்கையை..
அவளின் ஒரு புள்ளி
சொல்லிவிடும் நானே
முற்றுப்புள்ளி என்று..!!!😍
அடடே V 7.0
என்தான் நம் சில
எதிர்பார்ப்பு
ஏமாற்றம் தரும்
என்று மூளைக்கு தெரிந்தும்,
ஏன் இந்த பாழாய் போன மனம்
எதிர்பார்த்து நம்மை
ஏங்கவிட்டு வலிகள்தந்து
ஏனோ காயபடுத்துகிறதோ??
நற் சிந்தனை கொல்வோம்!
நலம் மனம் காப்போம்!
அடடே V 7.1
வார்த்தைகள் இருந்தும்
கிடைக்காது போனால்
தாய்மொழி இருந்தும்
வாய் பேசாத மலடி நீ!
வார்த்தைகள்
வந்து விழ
மீண்டும் மீண்டும்
கர்ப்பம் தரித்து
கவிதைகளை பெற்றேடுப்போர்
தாய் நான்!.
அடடே V 7.1
அ'வளும் நானும்..
ஆ'தாமும் ஏவாளும்!
இ'ரவும் இருளும்!
ஈ'ரமும் மழையும்!
உ'டலும் சதையும்!
ஊ'னும் உயிரும்!
எ'மனும் எருமையும்!
ஏ'டும் எழுத்தும்!
ஐ'யமும் சந்தேகமும்!
ஒ'ருவனும் ஒருத்தியும்!
ஓ'சையும் சத்தமும்!
ஔ'வையும் நெல்லியும்!
அஃ'து
அவளும் நானும்!!
அடடே V 7.2.1
தோட்டாவை எதிர்த்து
பெற்ற சுதந்திரத்தை
டாட்டாவிற்கு கொஞ்சம்
பீட்டாவிற்கு கொஞ்சம்
அம்பாணிக்கு கொஞ்சம்
அதானிக்கு கொஞ்சம்
பாபாராம்தேவ்க்கு கொஞ்சம்
பரமசிவ ஈஷாக்கு கொஞ்சம்
பேடியம்க்கு கொஞ்சம்
எல்லா பேமண்டுக்கு கொஞ்சம்
சாமிக்கு கொஞ்சம்
ஆசாமிக்கு கொஞ்சம்
ருபாநோட்டுக்கு கொஞ்சம்
பன்னாட்டுக்கு கொஞ்சம்
அவனவன்பாட்டுக்கு கொஞ்சம்
இப்படி கொஞ்சம் கொஞ்சமாய்
இருப்பதை எல்லாம்
விற்றுக்கொண்டு
ஒன்றும் இல்லா
அடித்தட்டு மக்களை
அசைத்து பார்த்து
கொண்டிருக்கிறார்கள்.
அடடே V 7.2.2 🇮🇳
இன்று இந்தியாவின்
சுதந்திர தினம்!
கிடைக்கட்டும் சுதந்திரம்..
குழந்தைகளுக்கு கல்வியில்
சாக்லெட்டில் அல்ல!
பெண்களுக்கு ஆட்சியில்
ஆடையில் அல்ல!
ஆண்களுக்கு ஆளுகையில்
அடிமையில் அல்ல!
இளைஞர்களுக்கு பாதையில்
போதையில் அல்ல!
உடன்பிறப்புகளுக்கு அன்பில்
அகந்தை அல்ல!
அறிஞர்களுக்கு கண்டுபிடிப்பில்
கண்டுகொள்ளாமல் அல்ல!
கலைஞர்களுக்கு கலையில்
கவலையில் அல்ல!
அரசியல்வாதிகளுக்கு செயல்பாட்டில்
அவர்பாட்டில் அல்ல!
விவசாயிக்கு கடன்தொல்லையில்
கடனுக்காக அல்ல!
பெற்றோர்களுக்கு குடும்பசுமையில்
பணசுமையில் அல்ல!
எழுத்தாளர்களுக்கு கருத்தில்
கழுத்தறுப்பில் அல்ல!
சந்தை ஏற்றத்தில்
சரிவில் அல்ல!
பொருட்கள் தரத்தில்
தரகரிடத்தில் அல்ல!
முதியோர்களுக்கு மருத்துவத்தில்
முதியோர்இல்லத்தில் அல்ல!
சுதந்திர தின வாழ்த்துகள்
வந்தே மாதரம்.🇮🇳🇮🇳🇮🇳
அடடே V 7.2.3 🇮🇳
இரண்டு பேர் வாகனத்தில்
மூன்று பேர் போகலாம்..
அளவின்றி பேருந்தில்
தொங்க வைத்து ஓட்டலாம்..
சாலைகளில் ஓரத்தில்
சிறுநீரும் கழிக்கலாம்..
வாகனத்தில் சீறிப்பாய்ந்து
விபத்தை ஏற்படுத்தலாம்..
இடது வலது இல்லாமல்
வண்டி ஓட்டலாம்..
கண்டபடி கட்சிகள்
தாவலாம் துவக்கலாம்..
கிடைக்குற சந்துபொந்துல
என்னானாலும் பண்ணலாம்..
வரதட்சணை கொடுத்து
பெண்ணை விற்கலாம்..
விவசாய நிலத்தை
வீடா கட்டலாம்..
தொழிற்சாலை கழிவுநீரை
குடிநீரில் கலக்கலாம்..
அட்மிஷன்னு போனா
டோனேஷன்னு கேட்கலாம்..
காசில்லா பலரிருக்க
காணிக்கை பல செலுத்தலாம்..
வெள்ளையாய் போட்டுகிட்டு
கொள்ளையாய் அடிக்கலாம்..
பெண்ணியம் பேசலாம்
கண்ணியம் மறக்கலாம்..
புகைத்தல் கேடென்பான்
புகையிலை விற்பான்..
அடிபட்டு விழுந்தாலும்
கண்டும்காணா போகலாம்..
தன் வீடு மக்கள்னு
சுயநலம் பேணலாம்..
ஊழல் செய்தாலும்
தைரியமாக நடக்கலாம்..
இFiling பண்ணியே
கைரேகை தேயலாம்..
கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம்
சூடம் காட்டலாம்..
குப்பைதொட்டி தவிர
எங்கும் குப்பை போடலாம்..
இலஞ்சம் வாங்காதீர்னு
பணம் கொடு(கேட்)க்கலாம்..
எப்படி வேண்டுமானாலும்
நடக்கலாம் இருக்கலாம்..
சுதந்திர இந்தியாதானே..
வந்தே மாதரம்
சுதந்திர தின வாழ்த்துகள் 🇮🇳
அடடே V 7.2.4 🇮🇳
Assamனா தேயிலை
Arunachal pradeshனா சூரியோதயம்
Andra Pradeshனா குச்சுப்புடி
Andamanனா தீவு கடற்கரை
Biharனா நலந்தா போஜ்புரி
Chattisgarhனா பட்டு கோஷா
Chandigarhனா கட்டிடகலை
Daman diuனா கடற்கரை
Delhiனா இந்தியா கேட்
Dadra haveliனா நகைகள்
Gujaratனா வியாபாரம்
Goaனா கடற்கரை
Haryanaனா குஸ்தி
Himachal pradeshனா ஆப்பிள்
Jammu kasmirனா அழகு
Jharkhandனா எஃகு
Karnatakaனா தோட்டம்
Keralaனா கதகளி புட்டு மீன்
Lakshadweepனா ஓய்வு
Manipurனா நடனம்
Megalayaனா மழை
Mizoramனா பேம்புநடனம்
Madhyapradeshனா போகா வைரம்
Maharastraனா பாலிவுட்
Nagalandனா நெசவு
Odishaனா கற்சிலை
Pondiனா ஆரோ தண்ணி
Punjabனா வீரம் கோதுமை
Rajastanனா சலவை கற்கள்
Sikkimனா மூலிகை
Tripuraனா மீன்
Telanganaனா பிரியாணி
Tamilnaduனா பரதநாட்டியம் பாரம்பரியம்
Uttrapradeshனா தாஜ்மஹால்
Uttarakhandனா லிட்சி
West bengalனா பாடகர்கள்
மொத்தத்தில்
Indiaனா மாஸ்
அடடே 7.3
அனுதினமும்
அனு அனுவாய்
அவள் நினைவுகள் என்னை
அழ வைத்துப் பார்க்கிறது
ஆமாம் 😢
அழ வைத்துப் பார்க்கிறது
அன்று நான் தோற்று போனேன்
அவளை மீண்டும் வெல்வேன்
ஆமாம் ஓர் நாள் நிச்சயம்
அவளை வெ(கொ)ல்வேன்🔪😜
மரணமெனும்
ஆயுதம் கொண்டு..!
அடடே V 7.4
மின்வெட்டு
தொலைக்காட்சி எடுக்கல
மடிக்கணினி கோளாறு
இணையம் இயங்கலை
கைப்பேசி பழுது
தொடுதிரை செயலிழப்பு
தொலைத்தொடர்பு துண்டிப்பு
மேற்படி சொன்னவற்றில்
ஏதேனும் நடந்தால்
நம் நவீன வாழ்க்கை
அன்றைய நாள் முழுதும்
ஒடிந்து போனதாக எண்ணும்
இன்றைய தலைமுறைகள்!?
அடடே V 7.5
அன்பே..😍
உன் அன்பு
வேண்டும் எனக்கு
நிறுத்திவிடாதே !
உன் மடி
வேண்டும் எனக்கு
மறுத்து விடாதே !
உன் கரங்கள்
வேண்டும் எனக்கு
எடுத்து விடாதே !
உன் துணை
வேண்டும் எனக்கு
துரத்தி விடாதே !
உன் எண்ணம்
வேண்டும் எனக்கு
குறைத்து விடாதே !
உன் தடம்
வேண்டும் எனக்கு
தடுத்து விடாதே !
உன் தோள்
வேண்டும் எனக்கு
நகர்ந்து விடாதே !
உன் நிழல்
வேண்டும் எனக்கு
சென்று விடாதே!
நீ மட்டும்
வேண்டும் எனக்கு
வெறுத்து விடாதே!
அடடே V 7.6
அன்பே...😍
என் இதயத்தில்
துடிப்புள்ள தலைவி நீ!
என்னை செய்வதில்
புரட்சித் தலைவி நீ!
என் உடையில்
தங்க தலைவி நீ!
என் நடையில்
சிங்கத் தலைவி நீ!
என் உரைநடையில்
சங்கத்தமிழ் தலைவி நீ!
என்னை ஆயூம்கலைகளில்
காவியத் தலைவி நீ!
என்னை சிந்திப்பதில்
சீர்திருத்த தலைவி!
என்னை கண்டுகொள்வதில்
கண்ணியத் தலைவி!
என் பாசத்தில்
கருணை தலைவி நீ!
என்னுள்ளம் ஆளுகையில்
சேனைத் தலைவி நீ!
என் சிரிப்பில்
குழந்தை தலைவி நீ!
நம் கெமிஸ்டிரியில்
அறிவியல் தலைவி நீ!
உலகஅழகில் அடியே
நீதான் என் தலைவி நீ!!
அடடே V 7.7
அன்பே..😍
அமிழ்தினும் சுவையவள் நீ
தேனினும் இனியவள் நீ
பாலினும் தூயவள் நீ
மலரின் மென்மை நீ
மனதில் மேன்மை நீ
நட்பில் உதாரணம் நீ
வான் நிலா நீ
தேன் பலா நீ
பூவில் குறிஞ்சி நீ!
கோபத்தில் நெரிஞ்சி நீ!
கருணையில் தெரேசா நீ!
நேசத்தில் ரோசா நீ!
படிப்பில் கதை நீ!
படைப்பில் கவிதை நீ !
கனவு தேவதை நீ!
எண்ணத்தில் உயர்ந்தவள் நீ !
எழுத்தில் ஆயுதம் நீ !
ஆச்சரியத்தின் உச்சம் நீ !
அறிவின் மிச்சம் நீ !
அழகின் எச்சம் நீ !
சோதிக்க வந்தவள் நீ!
சாதிக்க பிறந்தவள் நீ !
என்னவள் நீ ! என்னகம் நீ!!
அடடே V 7.8
மாணவனே! உன்
மனக்கிணற்றில்,
மானாவாரி சாதனைகள்
மக்கி கொட்டி கிடக்கிறது,
மனசு வைச்சு
முயற்சி எனும்
பாதாளக் வாளியை வீசு,
அகப்படும், சாதனை
முத்துக்கள் பல கைவசம்!👍
அடடே
V 7.9
நடந்தேன்
வானை பார்த்தேன்
அவள் முகம்!
மயங்கினேன்
கீழே விழுந்தேன்
அவள் மடி!
முழித்தேன்
உருண்டு புரண்டேன்
அவள் போர்வை!
அயர்ந்தேன்
இமைகள் மூடினேன்
அவள் தாலாட்டு!
உறங்கினேன்
நினைவில் மூழ்கினேன்
அவள் கனவு!
விழித்தேன்
சூரியன் கண்டேன்
அவள் கண்கள்!
மிளிர்ந்தேன்
தேகம் ஒளிர்ந்தேன்
அவள் தீண்டல்!
அலைந்தேன்
நிலை குலைந்தேன்
அவள் தேடல்!
அணிந்தேன்
பாதம் பணிந்தேன்
அவள் சரணம்!!😍😍😍
அடடே V 8.0
கவலை ஏனடா? அதை விடு
வாழ்க்கையே கலக்கல்தானடா..
சோம்பல் ஏனடா? அதை விடு
வாழ்க்கையே ஆம்பல்தானடா..
சோகம் ஏனடா? அதை விடு
வாழ்க்கையே சோதிக்கதானடா..
கோபம் ஏனடா? அதை விடு
வாழ்க்கையே கோலம்தானடா..
சுயநலம் ஏனடா? அதை விடு
வாழ்க்கையே நலம்தானடா..
கௌரவம் ஏனடா? அதை விடு
வாழ்க்கையே கொஞ்சம்தானடா..
வாழ்க்கையை வாழ்ந்துதான்
பாரடா..!
No comments:
Post a Comment