சுருக் நறுக் V 0.0
இந்த சுதந்திர நாட்டில்
'சு'-வை திருடி விட்டு
'தந்திர'மாக பலர் உலாவுகின்றனர்?
வாழ்க சுதந்திர இந்தியா😜
சுருக் நறுக் V 0.1
உனக்கும் ஓர் மரணம்
எங்கோ எழுதப்பட்டிருக்கிறது..!!!
நினைவில் கொள் மனிதா
தலைகால் புரியாமல் ஆடாதடா..!!!
சுருக் நறுக் V 0.2
கடைசி மரங்கள் வரை வெட்டி
கழிவுகளை எல்லாம் நதியில் கலந்து
காற்றை விலைக்கு வாங்கி வைத்தாலும்
கரண்சியை சாப்பிட முடியாது மனிதா
சுருக் நறுக் V 0.3
அன்று..
5தில் வளையாதது
50தில் வளையாது..
இன்று..
500ல் முடியாதது
50000தில் முடியும்..
(இலஞ்சம்😜)
சுருக் நறுக் V 0.4
நீக்கிடு பிழை
நாளும் உழை
நம்பிக்கை அழை
நனைத்திடு மழை
சுருக் நறுக் V 0.5
சிற்பியின் முயற்சி சிலை
சிலந்தியின் முயற்சி வலை
சிந்தையின் முயற்சி கலை
சீற்றத்தின் முயற்சி அலை
கற்களின் முயற்சி மலை
பூக்களின் முயற்சி மாலை
மணலின் முயற்சி பாலை
விடியலின் முயற்சி காலை
அனைத்தும் முயற்சிகளின் பரிமாணங்களே..
தோல்விகளை வெல்வோமே,
மகிழ்ச்சியினை கொள்வோமே..!!
சுருக் நறுக் V 0.6
தேடி தேடி தோல்விகளை
தோற்கடித்தாலும்,
ஒருநாள்..
தோற்றுப்போவாய்
தேடிவரும்
மரணத்தை....!!!
சுருக் நறுக் V 0.7
உனது பிழைப்பு..
உன் உழைப்பால்
இருக்க வேண்டுமே தவிர,
பிறர் வெறுப்பால்
இருக்கக் கூடாது..!!!
சுருக் நறுக் V 0.8
நீ வரைந்தால் ஓவியம்
நீ எழுதினால் கவிதை
நீ செதுக்கினால் சிற்பம்
நீ விதைத்தால் பயிர்
நீ சமைத்தால் உணவு
நீ கற்பித்தால் பாடம்
நீ கற்றுக்கொண்டால் வாழ்க்கை
மொத்தத்தில்....
உன்னை..உனக்கே
எடுத்து காட்டும் கண்ணாடிதான் இந்த வாழ்க்கை.....
சுருக் நறுக் V 0.9
எதிர்பார்ப்பது நட்பில்லை...
நட்போ எதையும் எதிர்ப்பார்பதில்லை...
சுருக் நறுக் v 1.0
பிரச்சினைகளை
பிரித்தெறி....
இன்னல்களை
இடித்துதள்ளு....
தடைகளை
தகர்த்தெறி....
பகைமையை
பலவீனப்படுத்து....
துன்பங்களை
துடைத்துவிடு..
கலக்கத்திற்கு
கல்லறைகட்டு..
சங்கடங்களுக்கு
சமாதிகட்டு..
தோல்விக்கே
தோல்விகொடு....
வெற்றியும்
தோல்வியும்
வேறு வேறு இல்லை....
வெற்றியின்
தொடக்கமே
தோல்விதான்....
நம்பிக்கைகொள்
நாளை நமதே...!!
சுருக் நறுக் V 1.1
தற்காலிக விடுப்பு - மூளைக்கு.
தற்காலிக மரணம் - உடலுக்கு.
கொட்டாவி சங்கு ஊதிக் கொண்டே தூங்குவோமா...
கனவுகள் இலவசம்!!!
சுருக் நறுக் V 1.2
விடு முயற்சி
தொடா வெற்றி
விடா முயற்சி
தொடர் வெற்றி
சுருக் நறுக் v 1.3
லைப் டைம் Validity
Full டாக் டைம்
மனைவி To கணவன் - FREE
மனைவி To her friends & relatives - UNLIMITED
மனைவி To கணவன் relatives - LIMITED
1GB GOLD free
மனைவி ஒரு All Gen சிம்!
சுருக் நறுக் V 1.4
முயற்சிக்காதவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்
முயற்சித்தவன் எடுத்துக்காட்டாய் இருக்கிறான்.
சுருக் நறுக் V 1.5
உன் குறைகளை தவறாமல்
உன்னிடம் சொல்பவனும்..
தன் குறைகளை சொன்னால்
தன்மையோடு ஏற்பவனும் தான்..
உண்மையான நண்பன்
மட்டுமல்ல!
நல்ல மனிதனும் ஆவான்!
சுருக் நறுக் V 1.6
தோல்விகள்
யார் கண்களுக்கும்
தெரியாது ...
ஆனால்
வெற்றியை
நிர்ணயிப்பது அதுவே ...
சுருக் நறுக் V 1.7
காட்டில்,
ஐந்தறிவு
மிருகங்களின்(இயற்கை)
நடமாட்டம்..!
நாட்டில்,
ஆறறிவு
மிருகங்களால்(மனிதர்களால்)
அட்டூழியம் 😉😥..!
சுருக் நறுக் V 1.8
எல்லா முயற்சிகளும் வெற்றியில் முடிவதில்லை..
ஆனால் ஏதோ ஒரு முயற்சியால்தான்
வெற்றியடைய முடிகிறது.
ஆகவே முயற்சிகளை முடிக்காதீர்..!!!
சுருக் நறுக் V 1.8
விழுதலும்
அழுதலும்
எழுதலும்
மகிழ்தலும்
இந்த சுழற்ச்சிதான் வாழ்க்கை!!!
சுருக் நறுக் V 1.9
காதலி
காலமும்வலி
தாய்மை
தாய்(தான்)மெய்
சுருக் நறுக் V 2.0
தூங்கிக் கிடந்தது போதும்,
தாங்கிப் பிடித்ததும் போதும்,
ஏங்கித் தவித்ததும் போதும்,
வாங்கிக் கொண்டதும் போதும்..
இனி எதிலும்
ஓங்கி உயர்ந்திட பார்ப்போம் தோழர்களே..!!
பிறப்பால் ஆண்பால் பெண்பால் அன்பால் தாய்ப்பால்
பிறகு நான் குடித்தது
பசும் பால்
தந்தை தந்தது
அறிவுப்பால்
ஆசான் போதித்தது
ஒழுக்கத்துப்பால்
பள்ளி அளித்த
படிப்பால்
நான் எழுதுகிறேன்
கவிப்பால்
நான் புத்துணர்வு பெற்றது
என் நட்பால்
அவர்கள் காட்டும் அன்பால்
எனை நானும் மறேந்தேன் என்பால்
குடும்பத்தின் புனிதத்தை
அறிந்தேன் உறவால்
என்னுடன் சேர்ந்தது
ஒரு பெண்பால்
பின் எங்கள் திருமணத்தால்
நான் உணர்ந்தது காமத்துப்பால்
எண்களின் கலப்பால்
உருவானது மழலைப்பால்
அனைவரையும் மகிழ்விப்பேன்
என் சிரிப்பால்
யாவரும் பெருமை கொள்வர்
என் நற்பண்பால்
இந்த அழகான வாழ்விற்கு
நன்றி நவில்கிறேன் அவன்பால்
சுருக் நறுக் V 2.1
வாழ்க்கையில் முன்னேற இதோ பத்து...
1. பொறுப்பாய் நடந்து கொள்
2. தவறுகளை தடுத்து திருத்து
3. வழிகாட்டு மற்றோர்க்கு
4. கொடை ஏழைகளுக்கு கொடு
5. இடறல்களை இன்முகத்துடன்
சந்தி
6. இருப்பதை வைத்து வாழ்
7. வாழ்வை இன்முகத்துடன் பார்
8. எப்பொழுதும் மகிழ்ச்சியாய்
இரு
9. நாளும் பயனுள்ளவற்றை அறி
10. நம்மை படைத்த பெற்றோரை து(ம)தி.
சுருக் நறுக் V 2.2
நெஞ்சில் துன்பம்
நெருங்குகையில்
நொறுங்கிவிடாமல்
நெருங்கிச்செல் நேசித்தவரை
நெகிழட்டும் உள்ளம்
நெடிய நட்பை பார்த்து
நொடிந்து கொள்ளும் உறவுகளுக்கு மத்தியில்....
சுருக் நறுக் V 2.3
இதுவரை..
உன் வாழ்க்கையில்
நடந்ததற்கு யார் காரணமென தெரியாமல் போகலாம்.!
ஆனால்
இனி...
உன் எதிர்காலத்திற்கு
நீதான் காரணமாக இருக்கவேண்டும்.!
சுருக் நறுக் v 2.4
யாரை வாழ்க்கையில் அவசியம் என கருதுகிறோமோ
அவர்கள்
நம் நினைவுகளில் மட்டுமே..!
நமக்காக வாழ்வதில்லை. !!
யாரை வாழ்க்கையில் அவசியமில்லை
என்று நினைக்கிறோமோ
அவர்கள்
நமக்காக வாழ்கிறார்கள்.
எல்லாம் காலத்தின் தீர்மானம்.
சுருக் நறுக் V 2.5
மரியின் மைந்தன்
மனிதரில் புனிதன்.!
உயர் குடியில் பிறந்தும்
சிறு குடிசை விரும்பியன்.!
ஒரு கன்னம் வீங்கியும்
மறு கன்னம் காட்டியவன்.!
சிலுவை சுமந்து
சாட்டை தாங்கியன்.!
பாவத்தின் சம்பளம் - அகோர மரணம்
யூதர்களே அதற்கு உதாரணம்..!
உலக அமைதி விரும்பிய மகான்..!
கலகம் செய்து காரியம் முடிப்பதை
கர்த்தர் தினத்தில் காவு கொடுப்போம்
பகிர்ந்து வாழ்வோம்
உலகம் முழுதும்
விழாக் கோலம் பூனும்
ஏசு பிராணின்
பிறந்த நாள் இன்றன்றோ..!
Merry Christmas 🎅🏻🎊🎉🎁🎄
சுருக் நறுக் V 2.6
நவீன பக்தி 😜
அர்ச்சனைக்கு பின்
(பஞ்சா)அமிர்தம்
பிரார்த்தனைக்கு பின்
பிரியாணி..
தொழுகைக்கு பின் தொடகறி பிரியாணி..
சுருக் நறுக் V 2.7
காடுகளை அழித்தோம்,
மழை இல்லை..
கழனிகளைக் களைந்தோம்,
விளைச்சல் இல்லை..
கனிகளை துறந்தோம்,
ஆரோக்கியம் இல்லை..
ஏரிக்குளங்களை முடக்கினோம்,
உண்மை வளர்ச்சி இல்லை..
உண்மை
உழைப்பினை
மறந்தோம்!
வாழ்வில்
வளம் இல்லை..
இயற்கைதனை எதிர்த்தோம்,
இன்பம் இல்லை..!
இவைகளை உணர்ந்து மாற்றம் செய்தால்,
என்றும் வாழ்வில் துன்பம் இல்லை..!
சுருக் நறுக் V 2.8
உலகம் சுற்றும்
மனித விமானம்
உலகெங்கும் சுற்றுகிற ஒரே விமானம்
"பிரதமர் நரேந்திர மோடி"😜😜
சுருக் நறுக் V 2.9
யாவும் இழந்த பிறகு தான் தெரிந்து கொள்கிறோம்
இப்படித்தான் வாழ வேண்டும்,
இதுதான் வாழ்க்கை என்று..!!!
சுருக் நறுக் V 3.0
கல்வி கொண்டு காலம் கழிப்போம்
அறிவு கொண்டு ஞானம் கொடுப்போம்
செவி கொண்டு சொல் செய்வோம்
கண் கொண்டு காட்சி செய்வோம்
மனம் கொண்டு மனம் வளர்ப்போம்
உழைப்பு கொண்டு உடல் வளர்ப்போம்
இயற்கை கொண்டு இயற்கை வளர்ப்போம் 😀
சுருக் நறுக் V 3.1
பெண்ணே..
உனது கண் அசைவுகளில்,
எனது காலம் நகர்கிறது..😊
சுருக் நறுக் V 3.2
வலி கொடுத்து வாழாதே..!
வழி கொடுத்து வாழ்..!
சுருக் நறுக் V 3.3
பெற்றோர் வழிகாட்டியாய்
கணவன் படகாய்
மனைவி துடுப்பாய்
16 வகை செல்வங்களை ஏற்றிக்கொண்டு
வாழ்க்கை எனும் நதியினில் ஓட்டிக் கொண்டு
கரை சேர்வதே இனிய இல்லறம்
இந்த சுதந்திர நாட்டில்
'சு'-வை திருடி விட்டு
'தந்திர'மாக பலர் உலாவுகின்றனர்?
வாழ்க சுதந்திர இந்தியா😜
சுருக் நறுக் V 0.1
உனக்கும் ஓர் மரணம்
எங்கோ எழுதப்பட்டிருக்கிறது..!!!
நினைவில் கொள் மனிதா
தலைகால் புரியாமல் ஆடாதடா..!!!
சுருக் நறுக் V 0.2
கடைசி மரங்கள் வரை வெட்டி
கழிவுகளை எல்லாம் நதியில் கலந்து
காற்றை விலைக்கு வாங்கி வைத்தாலும்
கரண்சியை சாப்பிட முடியாது மனிதா
சுருக் நறுக் V 0.3
அன்று..
5தில் வளையாதது
50தில் வளையாது..
இன்று..
500ல் முடியாதது
50000தில் முடியும்..
(இலஞ்சம்😜)
சுருக் நறுக் V 0.4
நீக்கிடு பிழை
நாளும் உழை
நம்பிக்கை அழை
நனைத்திடு மழை
சுருக் நறுக் V 0.5
சிற்பியின் முயற்சி சிலை
சிலந்தியின் முயற்சி வலை
சிந்தையின் முயற்சி கலை
சீற்றத்தின் முயற்சி அலை
கற்களின் முயற்சி மலை
பூக்களின் முயற்சி மாலை
மணலின் முயற்சி பாலை
விடியலின் முயற்சி காலை
அனைத்தும் முயற்சிகளின் பரிமாணங்களே..
தோல்விகளை வெல்வோமே,
மகிழ்ச்சியினை கொள்வோமே..!!
சுருக் நறுக் V 0.6
தேடி தேடி தோல்விகளை
தோற்கடித்தாலும்,
ஒருநாள்..
தோற்றுப்போவாய்
தேடிவரும்
மரணத்தை....!!!
சுருக் நறுக் V 0.7
உனது பிழைப்பு..
உன் உழைப்பால்
இருக்க வேண்டுமே தவிர,
பிறர் வெறுப்பால்
இருக்கக் கூடாது..!!!
சுருக் நறுக் V 0.8
நீ வரைந்தால் ஓவியம்
நீ எழுதினால் கவிதை
நீ செதுக்கினால் சிற்பம்
நீ விதைத்தால் பயிர்
நீ சமைத்தால் உணவு
நீ கற்பித்தால் பாடம்
நீ கற்றுக்கொண்டால் வாழ்க்கை
மொத்தத்தில்....
உன்னை..உனக்கே
எடுத்து காட்டும் கண்ணாடிதான் இந்த வாழ்க்கை.....
சுருக் நறுக் V 0.9
எதிர்பார்ப்பது நட்பில்லை...
நட்போ எதையும் எதிர்ப்பார்பதில்லை...
சுருக் நறுக் v 1.0
பிரச்சினைகளை
பிரித்தெறி....
இன்னல்களை
இடித்துதள்ளு....
தடைகளை
தகர்த்தெறி....
பகைமையை
பலவீனப்படுத்து....
துன்பங்களை
துடைத்துவிடு..
கலக்கத்திற்கு
கல்லறைகட்டு..
சங்கடங்களுக்கு
சமாதிகட்டு..
தோல்விக்கே
தோல்விகொடு....
வெற்றியும்
தோல்வியும்
வேறு வேறு இல்லை....
வெற்றியின்
தொடக்கமே
தோல்விதான்....
நம்பிக்கைகொள்
நாளை நமதே...!!
சுருக் நறுக் V 1.1
தற்காலிக விடுப்பு - மூளைக்கு.
தற்காலிக மரணம் - உடலுக்கு.
கொட்டாவி சங்கு ஊதிக் கொண்டே தூங்குவோமா...
கனவுகள் இலவசம்!!!
சுருக் நறுக் V 1.2
விடு முயற்சி
தொடா வெற்றி
விடா முயற்சி
தொடர் வெற்றி
சுருக் நறுக் v 1.3
லைப் டைம் Validity
Full டாக் டைம்
மனைவி To கணவன் - FREE
மனைவி To her friends & relatives - UNLIMITED
மனைவி To கணவன் relatives - LIMITED
1GB GOLD free
மனைவி ஒரு All Gen சிம்!
சுருக் நறுக் V 1.4
முயற்சிக்காதவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்
முயற்சித்தவன் எடுத்துக்காட்டாய் இருக்கிறான்.
சுருக் நறுக் V 1.5
உன் குறைகளை தவறாமல்
உன்னிடம் சொல்பவனும்..
தன் குறைகளை சொன்னால்
தன்மையோடு ஏற்பவனும் தான்..
உண்மையான நண்பன்
மட்டுமல்ல!
நல்ல மனிதனும் ஆவான்!
சுருக் நறுக் V 1.6
தோல்விகள்
யார் கண்களுக்கும்
தெரியாது ...
ஆனால்
வெற்றியை
நிர்ணயிப்பது அதுவே ...
சுருக் நறுக் V 1.7
காட்டில்,
ஐந்தறிவு
மிருகங்களின்(இயற்கை)
நடமாட்டம்..!
நாட்டில்,
ஆறறிவு
மிருகங்களால்(மனிதர்களால்)
அட்டூழியம் 😉😥..!
சுருக் நறுக் V 1.8
எல்லா முயற்சிகளும் வெற்றியில் முடிவதில்லை..
ஆனால் ஏதோ ஒரு முயற்சியால்தான்
வெற்றியடைய முடிகிறது.
ஆகவே முயற்சிகளை முடிக்காதீர்..!!!
சுருக் நறுக் V 1.8
விழுதலும்
அழுதலும்
எழுதலும்
மகிழ்தலும்
இந்த சுழற்ச்சிதான் வாழ்க்கை!!!
சுருக் நறுக் V 1.9
காதலி
காலமும்வலி
தாய்மை
தாய்(தான்)மெய்
சுருக் நறுக் V 2.0
தூங்கிக் கிடந்தது போதும்,
தாங்கிப் பிடித்ததும் போதும்,
ஏங்கித் தவித்ததும் போதும்,
வாங்கிக் கொண்டதும் போதும்..
இனி எதிலும்
ஓங்கி உயர்ந்திட பார்ப்போம் தோழர்களே..!!
பிறப்பால் ஆண்பால் பெண்பால் அன்பால் தாய்ப்பால்
பிறகு நான் குடித்தது
பசும் பால்
தந்தை தந்தது
அறிவுப்பால்
ஆசான் போதித்தது
ஒழுக்கத்துப்பால்
பள்ளி அளித்த
படிப்பால்
நான் எழுதுகிறேன்
கவிப்பால்
நான் புத்துணர்வு பெற்றது
என் நட்பால்
அவர்கள் காட்டும் அன்பால்
எனை நானும் மறேந்தேன் என்பால்
குடும்பத்தின் புனிதத்தை
அறிந்தேன் உறவால்
என்னுடன் சேர்ந்தது
ஒரு பெண்பால்
பின் எங்கள் திருமணத்தால்
நான் உணர்ந்தது காமத்துப்பால்
எண்களின் கலப்பால்
உருவானது மழலைப்பால்
அனைவரையும் மகிழ்விப்பேன்
என் சிரிப்பால்
யாவரும் பெருமை கொள்வர்
என் நற்பண்பால்
இந்த அழகான வாழ்விற்கு
நன்றி நவில்கிறேன் அவன்பால்
சுருக் நறுக் V 2.1
வாழ்க்கையில் முன்னேற இதோ பத்து...
1. பொறுப்பாய் நடந்து கொள்
2. தவறுகளை தடுத்து திருத்து
3. வழிகாட்டு மற்றோர்க்கு
4. கொடை ஏழைகளுக்கு கொடு
5. இடறல்களை இன்முகத்துடன்
சந்தி
6. இருப்பதை வைத்து வாழ்
7. வாழ்வை இன்முகத்துடன் பார்
8. எப்பொழுதும் மகிழ்ச்சியாய்
இரு
9. நாளும் பயனுள்ளவற்றை அறி
10. நம்மை படைத்த பெற்றோரை து(ம)தி.
சுருக் நறுக் V 2.2
நெஞ்சில் துன்பம்
நெருங்குகையில்
நொறுங்கிவிடாமல்
நெருங்கிச்செல் நேசித்தவரை
நெகிழட்டும் உள்ளம்
நெடிய நட்பை பார்த்து
நொடிந்து கொள்ளும் உறவுகளுக்கு மத்தியில்....
சுருக் நறுக் V 2.3
இதுவரை..
உன் வாழ்க்கையில்
நடந்ததற்கு யார் காரணமென தெரியாமல் போகலாம்.!
ஆனால்
இனி...
உன் எதிர்காலத்திற்கு
நீதான் காரணமாக இருக்கவேண்டும்.!
சுருக் நறுக் v 2.4
யாரை வாழ்க்கையில் அவசியம் என கருதுகிறோமோ
அவர்கள்
நம் நினைவுகளில் மட்டுமே..!
நமக்காக வாழ்வதில்லை. !!
யாரை வாழ்க்கையில் அவசியமில்லை
என்று நினைக்கிறோமோ
அவர்கள்
நமக்காக வாழ்கிறார்கள்.
எல்லாம் காலத்தின் தீர்மானம்.
சுருக் நறுக் V 2.5
மரியின் மைந்தன்
மனிதரில் புனிதன்.!
உயர் குடியில் பிறந்தும்
சிறு குடிசை விரும்பியன்.!
ஒரு கன்னம் வீங்கியும்
மறு கன்னம் காட்டியவன்.!
சிலுவை சுமந்து
சாட்டை தாங்கியன்.!
பாவத்தின் சம்பளம் - அகோர மரணம்
யூதர்களே அதற்கு உதாரணம்..!
உலக அமைதி விரும்பிய மகான்..!
கலகம் செய்து காரியம் முடிப்பதை
கர்த்தர் தினத்தில் காவு கொடுப்போம்
பகிர்ந்து வாழ்வோம்
உலகம் முழுதும்
விழாக் கோலம் பூனும்
ஏசு பிராணின்
பிறந்த நாள் இன்றன்றோ..!
Merry Christmas 🎅🏻🎊🎉🎁🎄
சுருக் நறுக் V 2.6
நவீன பக்தி 😜
அர்ச்சனைக்கு பின்
(பஞ்சா)அமிர்தம்
பிரார்த்தனைக்கு பின்
பிரியாணி..
தொழுகைக்கு பின் தொடகறி பிரியாணி..
சுருக் நறுக் V 2.7
காடுகளை அழித்தோம்,
மழை இல்லை..
கழனிகளைக் களைந்தோம்,
விளைச்சல் இல்லை..
கனிகளை துறந்தோம்,
ஆரோக்கியம் இல்லை..
ஏரிக்குளங்களை முடக்கினோம்,
உண்மை வளர்ச்சி இல்லை..
உண்மை
உழைப்பினை
மறந்தோம்!
வாழ்வில்
வளம் இல்லை..
இயற்கைதனை எதிர்த்தோம்,
இன்பம் இல்லை..!
இவைகளை உணர்ந்து மாற்றம் செய்தால்,
என்றும் வாழ்வில் துன்பம் இல்லை..!
சுருக் நறுக் V 2.8
உலகம் சுற்றும்
மனித விமானம்
உலகெங்கும் சுற்றுகிற ஒரே விமானம்
"பிரதமர் நரேந்திர மோடி"😜😜
சுருக் நறுக் V 2.9
யாவும் இழந்த பிறகு தான் தெரிந்து கொள்கிறோம்
இப்படித்தான் வாழ வேண்டும்,
இதுதான் வாழ்க்கை என்று..!!!
சுருக் நறுக் V 3.0
கல்வி கொண்டு காலம் கழிப்போம்
அறிவு கொண்டு ஞானம் கொடுப்போம்
செவி கொண்டு சொல் செய்வோம்
கண் கொண்டு காட்சி செய்வோம்
மனம் கொண்டு மனம் வளர்ப்போம்
உழைப்பு கொண்டு உடல் வளர்ப்போம்
இயற்கை கொண்டு இயற்கை வளர்ப்போம் 😀
சுருக் நறுக் V 3.1
பெண்ணே..
உனது கண் அசைவுகளில்,
எனது காலம் நகர்கிறது..😊
சுருக் நறுக் V 3.2
வலி கொடுத்து வாழாதே..!
வழி கொடுத்து வாழ்..!
சுருக் நறுக் V 3.3
பெற்றோர் வழிகாட்டியாய்
கணவன் படகாய்
மனைவி துடுப்பாய்
16 வகை செல்வங்களை ஏற்றிக்கொண்டு
வாழ்க்கை எனும் நதியினில் ஓட்டிக் கொண்டு
கரை சேர்வதே இனிய இல்லறம்
No comments:
Post a Comment