Wednesday, October 11, 2017

Romance Kavithai Versions

ரொமான்ஸ் 😉 V 0.1

அன்பே.. நட்பே..

நகம் இழந்தபோது
விரலாய் இருக்கிறாய்..
விரல் இழந்தபோது
கையாய் இருக்கிறாய்..
கை இழந்தபோது
தோளாய் இருக்கிறாய்..
தோள் இழந்தபோது
உடலாய் இருக்கிறாய்..
உடல் இழந்தபோது
உயிராய் இருக்கின்றாய்..
என் உயிர் போகும் வேளை
உன் உயிரை மாய்த்துக் கொள்கின்றாய்..

உறவை உணர்ந்தேன்
உன்னதம் அறிந்தேன்😃👍

: ரொமான்ஸ் 😉 V 0.2

விழி இல்லாதபோது
வழி எதற்கு? ?
கண்கள் இல்லாதபோது
கனவு எதற்கு? ?
இரக்கம் இல்லாதபோது
இதயம் எதற்கு? ?
உணர்வு இல்லாதபோது
உடை எதற்கு? ?
உயிர் இல்லாதபோது
உடல் எதற்கு? ?
....
....
அன்பே நீ இல்லாதபோது
நான் மட்டும் எதற்கு? ?😪


 ரொமான்ஸ் 😉 V 0.3

அன்பே..

நீ என்னை வெறுப்பாய் பார்த்தாலும்
எனது அன்பின் அளவு குறைவதில்லை..

நீ என்னை கோபமாய் திட்டினாலும்
எனது அன்பின் நிலை குலைவதில்லை..

நீ என்னை காக்க வைத்தாலும்
எனது அன்பின் உண்மை மாறுபடுவதில்லை..

நீ என்னை கடந்து சென்றாலும்
எனது அன்பின் தடம் மாறுவதில்லை..

உனக்காய் நானும்
எனது அன்பும்..😞


ரொமான்ஸ் 😉 V 0.4

பிறவி கலைஞன்
பிறவி கவிஞர்
பிறவி அறிஞன்
பிறவி அரசர்
.......

அதுபோல்

அன்பே நீ என்

பிறவி தேவதை 👰😍


 ரொமான்ஸ் 😉 V 0.5

Email ல இணைந்து
Orkut ல ஆராய்ந்து
Facebook ல பார்த்து
Whatsapp ல வளர்ந்து
OS என்னில்
Softwareரா நுழைஞ்சிட்ட
Hardwareகளை அக்கு அக்கா பிரிச்சிட்ட
மனச Hack பண்ணி
Mind'a crash செஞ்சி
Crack ah அலைய வச்சிட்ட..

Virus பெண்ணே😳



 ரொமான்ஸ் 😉 V 0.6

இரவில் வந்த
கனவு நீ..
கண்களில் பார்க்கும்
வெட்கம் நீ..
செவியில் கேட்கும்
இசை நீ..
சிந்தையில் கிடைக்கும்
அறிவு நீ..
சுவாசத்தில் கலந்த
ஆக்ஜிஷன் நீ..
இதழில் இருக்கும்
சிரிப்பு நீ..
மனதை பறிக்கும்
கவிதை நீ..
கைகளில் நீளும்
ரேகை நீ..
உடம்பில் ஓடும்
உதிரம் நீ..
நடையில் வரும்
வழிகாட்டி நீ..
விடியலில் தோன்றும்
கதிரவன் நீ..

இப்பொழுது என்னை எனக்கே
அறிமுகம் செய்கின்றாய் நீ..
வழித் துணை
வாழ்க்கை துணை ஆவது எப்பொழுது??😍☺


 ரொமான்ஸ் 😉 V 0.7

அன்பே!!!

இதுவரை..
இருந்தாய் என் உள்ளத்தோடு..

இனி..
இருப்பேன் உன் நினைவுகளோடு..
😞😪


 ரொமான்ஸ் 😉 V 0.8

அன்பே!!!

நீ நானாக முடியாது

நான் நீயாக முடியாது

நாம் நாமாக இருப்போம்...

அன்பே!!!


ரொமான்ஸ் 😉 V 0.9

அன்பே!!!

பிரம்மன் படைக்கும் காவியமல்ல நீ,
என் மனதில் வரைந்த ஓவியம் நீ!!!

இசைக்கலைஞன் அமைக்கும் இசையல்ல நீ,
என் மதியை மீட்டும் ராகம் நீ!!!

கவிஞர்கள் எழுதும் கவிதையல்ல நீ,
என் ஒரு வரி ஹைக்கூ நீ!!!

சினிமா ஒப்பனை கதாநாயகி அல்ல நீ,
என்றும்
என் வாழ்க்கை கதையின் நாயகி நீ!!!


ரொமான்ஸ் 😉 V 1.0

வருந்துகின்றேன்..
கண்ணீர் வடிக்கின்றேன்..
நீ என்னை பிரிந்ததற்காக அல்ல,
உன்னை உண்மையில் புரிந்தவனை பிரிந்ததற்காக!!!


ரொமான்ஸ் 😉 V 1.0

இரவில் வந்து உலாவி
பயமுறுத்தினால் அதை பேய் என்பார்கள்...
என் கனவில் வந்து தூங்கவிடாமல் துன்புறுத்தும் என்னவள்
மோகினியா??
இல்லை
தேவதையா??
😳😉😴


ரொமான்ஸ் 😉 V 1.2

கண்ணில் மையிட்டாய்
களவுகள் செய்திட்டாய்
பார்வையில் படர்கிறாய்
பசியில் பகிர்கிறாய்
வாசத்தில் மிளிர்கிறாய்
சுவாசத்தில் நிறைக்கிறாய்
உறவில் உறைகின்றாய்
உள்ளத்தில் கரைகின்றாய்
மௌனங்களால் சிறையிட்டாய்
மனதினில் நுழைந்திட்டாய்
மதியினை மாற்றினாய்
விதியினை ஏற்றினாய்
ஏக்கத்தில் ஏமாற்றினாய்
தூக்கத்தில் துரத்தினாய்
கனவில் கதைக்கிறாய்
நினைவில் வதைக்கிறாய்

என்னுள் வாழ்கின்றாய்
என்னை ஆள்கின்றாய்




ரொமான்ஸ் 😉 V 1.2

கண்ணில் மையிட்டாய்
களவுகள் செய்திட்டாய்
பார்வையில் படர்கிறாய்
பசியில் பகிர்கிறாய்
வாசத்தில் மிளிர்கிறாய்
சுவாசத்தில் நிறைக்கிறாய்
உறவில் உறைகின்றாய்
உள்ளத்தில் கரைகின்றாய்
மௌனங்களால் சிறையிட்டாய்
மனதினில் நுழைந்திட்டாய்
மதியினை மாற்றினாய்
விதியினை இயற்றினாய்
ஏக்கத்தில் ஏமாற்றினாய்
தூக்கத்தில் துரத்தினாய்
கனவில் கதைக்கிறாய்
நினைவில் வதைக்கிறாய்

என்னுள் வாழ்கின்றாய்
என்னை ஆள்கின்றாய்
என்னையே உருமாற்றினாய்!!!


ரொமான்ஸ் 😉 V 1.3

அன்பே!!! உன்னை

கண்களால் Scan செய்தேன்..
இதயத்தில் Print செய்தேன்..
உயிரோடு Xerox செய்தேன்..

மொத்தத்தில் நீ எனது Content
நான் வெறும் Machine


ரொமான்ஸ் 😉 V 1.4

அன்பே நீ என்..
கண்களின் காந்தக்காரி

உயிரின் உரிமைக்காரி

இதயத்தின் இளவரசி


ரொமான்ஸ் 😉 V 1.4

கார் கூந்தல் உடையவளே..
மயில் கொண்டை உடையவளே..
மீன் கண்கள் உடையவளே..
வில் புருவம் உடையவளே..
கிளிமூக்கு உடையவளே..
தேன் இதழ் உடையவளே..
குயில் குரல் உடையவளே..
பிள்ளை மொழி உடையவளை..
சங்கு கழுத்து உடையவளே..
நொறுக்கும் நெஞ்சம்  உடையவளே..
பூவின் இதயம் உடையவளே..
கொடி இடை உடையவளே..
வாழைத்தண்டு கால்கள் உடையவளே..
அன்ன நடை உடையவளே..
வானவில் வண்ணம் உடையவளே..
இயல்பாய் இயற்கையை உடையவளே..

வாழ்க என்னவளே!!!
என்னில் உடையவளே!!!


ரொமான்ஸ் 😉 V 1.5

பெற்றேடுக்காத தாய் நீ..
மீசை இல்லாத தகப்பன் நீ..
பெறாமல் பெற்ற பிள்ளை நீ..
நன்கு புரிந்த தோழியும் நீ..
மகிழ்ச்சியில் திளைக்கும் ஆனந்தம் நீ..
விழியில் வழியும் கண்ணீர் நீ..
உடம்பில் ஓடும் உதிரம் நீ..
உயிரில் கலந்த உணர்வும் நீ..
அன்பே!!!
நான் வாழ போகும் வாழ்க்கையே நீ!!!


ரொமான்ஸ் 😉 V 1.6

நீ/நான் நாணம் கொண்டு
மறைவாக உரைத்த
அந்த வாக்கியம்? ??

நான்/நீ ஞானம் கொண்டு
நிறைவாக உறைந்த
அந்த வாக்கியம்???

???

???

???

???



?

?

?


?


?




?



??

?
???


?



???

???

??



??



??

???



???


???



??


??

"என் செல்லம்ம்ம்ம்ம்ம்ம்......"


ரொமான்ஸ் 😉 V 1.7

சிறுக்கியாய் எனை சின்னா பின்னமாக்குகிறாய்!!
பொறுக்கியாய் எனை பொறுக்குகிறாய்!!
மோகினியாய் எனை மோகம் கொள்கிறாய்!!
பேய்யாய் எனை பேதலிக்கிறாய்!!
காட்டேரியாய் எனை காணாசெய்கிறாய்!!
கள்ளியாய் எனை களவாடுகிறாய்!!
மொத்தத்தில்..
அரக்கியாய் எனை ஆள்கிறாய்!!


 ரொமான்ஸ் 😉 V 1.8

மஞ்சள் நிறத்தழகி..
கார் கூந்தலழகி..
கெண்டை கண்ணழகி..
கிளி மூக்கழகி..
ஸ்ட்ராபெரி உதட்டழகி..
சங்கு கழுத்தழகி..
சந்தனகட்டை உடலழகி..
குயில் பேச்சழகி..
மயில் நடையழகி..
என்னவள் ...
என்றும் பேரழகி! !!!


ரொமான்ஸ் 😉 V 1.9

Photon கொண்டு உன் விழி தாக்கியதில்
Electron என்னுள் குதிக்குதடி..

Hydrochloric acidடாய் குடலில்
நீ சுரக்க பசியே இல்லையடி..

Insomniaவாக
நீ இருக்க தூக்கமும் போகுதடி..

உன் மேல் உள்ள நினைவால்
எனக்கு Amnesia வந்ததடி..

Hydrogen peroxideடாய் இருந்து கொண்டு
என் மனதை சுத்தம் செய்தாயடி..

உனை படிக்க நினைத்து
Science தெரிந்து கொண்டேனடி..

ஆமா என்று சொல்லி Medicine கொடு
இல்லை Comaவில் என்னை தள்ளிவிடு!!!

ரொமான்ஸ் 😉 V 2.0

All known mathematics 1+2=3
i.e., number 1 +
number 2 =
number 3

My own mathematics
நீ(U)+நான்(Me)=(Luv)அன்பு, பாசம், நேசம், காதல், ஊடல் Etc.
i.e., one letter நீ +
two letter நான் =
three letter luv..


 ரொமான்ஸ் 😉 V 2.1

கடலை சேரும் நதி போல்..
பூமியை சேரும் மழை போல்..
மலரை சேரும் மணம் போல்..
தாய்யை சேரும் சேய் போல்..

அன்பே உனையே சேரும் எனதுயிர்!!!


ரொமான்ஸ் 😉 V 2.2

மொழியின் அகராதி நீ
உன் மௌனம் அறிந்தவன் நான்!!

வற்றாத கடல் நீ
தீராத தாகம் நான்!!

செதுக்கும் சிற்பி நீ
தாங்கும் கற்கள் நான்!!

மயக்கும் இசை நீ
இயக்கும் ஸ்வரம் நான்!!

பூஜ்ஜிக்கும் கடவுள் நீ
ஒலிக்கும் சுப்ரபாதம் நான்!!


ரொமான்ஸ் 😉 V 2.3

அன்பே..
நீ வாழும் வரை
மரணம் என்பது எனக்கில்லை,
நீ இறந்தால் நான்
வாழ்வதில் எந்த  அர்த்தமும் இல்லை..

வாழ்வதாய் இருந்தால்
கொடு பல கோடி ஜென்மம்!!!
இல்லையேல்
இடு ஒரு சின்ன சாபம்! !!


ரொமான்ஸ் 😉 V 2.4

இன்று இரவு
கனவாக வந்து
என்னவளாய் மாறி
என் இதயத்தில்
குடி கொள்!!

இல்லையேல் காலை
காற்றாக மாறி
நாசி வழி
என் மூச்சையும்
எடுத்து செல்!!!


ரொமான்ஸ் 😉 V 2.5

அனைவரையும் கடிக்கும் எறும்பு
உன்னை மட்டும் முத்தமிடுகிறதே
நீ என்ன இனிப்புமூட்டையா???
அனைவரின் பசியை தூண்டும்
நாவில் எச்சிலை கூட்டும்
நீ என்ன மூடி வச்ச பிரியாணியா???
அனைவரும் படிக்க முற்படும்
தேனீர் குடிக்க நேரிடும்
நீ என்ன பெஞ்சு டீ கடையா???
அனைவரின் கண் பட
என் நெஞ்சமோ புண்பட
நீ என்ன மட்டிகூஸன் ரெஸ்டாரண்டா???


அன்பே நீ என்னவளா???

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...