வாசி தமிழை சு'வாசி v 0.1
துன்பங்களை
சந்திக்கலாம்
இன்பத்தின் சாரல்
இருந்தால்..
காயங்களை ஆற்றலாம்
கனிவான பேச்சு இருந்தால்..
சோகங்களை விரட்டலாம்
சுமை குறைக்கும் நட்பு
இருந்தால்..
கண்ணீரும் இனிக்கலாம்
தடை போடும் கரம்
இருந்தால்..
பாலை மனதில் பசுமை
தோன்றலாம்
மழையென வாழ்க்கைத்துணை
இருந்தால்..
பாயாசம் வடை பிரியாணி
வறுவல் ரசம் சுவைப்போம்
🐓🐐🐄🐖🕊🐟🐋🦀🍴
🍅🍍🍑🍈🍓🍌🍊🍐🌿
சண்டே வணக்கம் 😬
வாசி தமிழை சு'வாசி v 0.2
அன்பே..
உன் பிறப்பில் தான்
அமைந்தது
என் பிறப்பின் முழுமை
என்றிட ஆசை!
உன்னோடு மொட்டை
மாடியில்
நிலாச்சோறு திண்க ஆசை!
நீ அருந்திய தேனீர்
மீதம்
நான் ரசித்து ருசிக்க
ஆசை!
உன் சுட்டு கைவிரல்
பிடித்து
உன் பாதம் பார்த்து
நடக்க ஆசை!
நீ கதைகள் பல பேசி
கேட்டுகிட்டே
நான் உன் மடியில்
துயில ஆசை!
மழை பெய்யும் போது
ஒரு குடையில் நனையாது
நடக்க ஆசை!
உன் நகம் வெட்டிவிட்ட
உடன்
நான் அதில் மருதாணி
வைக்க ஆசை!
நீ சண்டை போட பின்
செல்லமாய்
நான் சமாதானம் செய்ய
ஆசை!
நான் கவிகள் உனை பற்றி
புணைய
அதை நீ படித்து கேட்க
ஆசை!
தூக்கத்தின் போது
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்
தூங்கிட ஆசை!
நெடுஞ்சாலை பயணத்தில்
மிதிவண்டியில்
உன்னோடு தொலைதூரம் போக
ஆசை!
காமம் தொலைத்திட
இடைவெளி குறைந்திட
உன்னை கண்ணுக்கு
கண்ணாக பார்த்திட ஆசை!
நீ வாழும் காலம் வரை
நானும் வாழ ஆசை!
நீ இறக்கும் தருவாயில்
உனக்காய் நான் இறக்க
ஆசை!!!
வாசி தமிழை சு'வாசி v 0.3
(இன்றைய அரசியல் நிலை
யாரையும் குறிப்பிடுவன
அல்ல)
இரண்டு கட்சி நாட்டுல
இருந்துச்சி
ஒன்றின் பெயர் பொய்
மற்றொன்றின் பெயர்
மெய்
பொய்க்கும் மெய்க்கும்
தேர்தலில் போட்டி
பொய் பிரச்சாரத்தில்
ஆரவாரம் கைத்தட்டல்
விசில் கூட்டம்
மெய் பிரச்சாரத்தில்
காலி நாற்காலிகள்
மக்கள் ஆங்காங்கே
பொய் பிரச்சாரத்தில்
அறிக்கைகளும்
இலவசங்களும்
மெய் பிரச்சாரத்தில்
உண்மைகளும்
சம்பவங்களும்
போட்டி நடந்தது
பொய் வென்றது
மெய் தோற்றது
பொய் ஆட்சியில்
மெய் சிறையில்
சில நாட்கள் பிறகு..
சிறைக்கு பொய்
சென்று மெய்யை
சந்தித்து
மெய்யே உன்னை விடுதலை
செய்கின்றேன்
ஒரே ஒரு பொய் சொல்
என்றது.
மெய் சொன்னது
உண்மை உறங்குகிறது
விழிக்கும் காலம்
வருமென்று.
பொய் நினைத்தது
மெய்யே நீ விழி முடூம்
காலம் வரை களி உருண்டை தான் என்று.!!!
என்ன புரியுது
நன்பர்களே?
வாசி தமிழை சு'வாசி v 0.4
அன்பே..
நீ பார்த்தால்
நான் கண்ணாடி!
நீ பழகினால்
நான் நாய்க்குட்டி!
நீ சிரித்தால்
நான் கிறுக்கு!
நீ பேசினால்
நான் தமிழ்!
நீ அழுதால்
நான் கைக்குட்டை!
நீ அணைத்தால்
நான் தலையணை!
நீ நடந்தால்
நான் காலணி!
நீ சுவாசித்தால்
நான் உயிர்!
நீ திட்டினால்
நான் செல்லம்!
நீ கோபித்தால்
நான் அடிமை!
நீ சிந்தித்தால்
நான் புதுமை!
நீ பாடினால்
நான் இசை!
நீ படுத்தால்
நான் தாய்!
நீ படித்தால்
நான் ஆசான்!
நீ கொடுத்தால்
நான் முத்தம்!
நீ வாங்கினால்
நான் கடனாளி!
நீ செய்தால்
நான் ஆச்சரியம்!
நீ எழுந்தால்
நான் சூரியன்!
நீ குளித்தால்
நான் ஆடை!
நீ ஓடினால்
நான் கடிகாரம்!
நீ முனங்கினால்
நான் மௌனம்!
நீ குடித்தால்
நான் போதை!
நீ ஆடினால்
நான் நடனம்!
நீ அளித்தால்
நான் பரிசு!
நீ நடத்தினால்
நான் யுத்தம்!
நீ அறிந்தால்
நான் செய்தி!
நீ அடித்தால்
நான் உரிமை!
நீ அறைந்தால்
நான் தவறு!
நீ பணிந்தால்
நான் பாசம்!
நீ இகழ்ந்தால்
நான் பாவம்!
நீ புகழ்ந்தால்
நான் டார்லிங்!
நீ தேடினால்
நான் புதையல்!
நீ முறைத்தால்
நான் கைதி!
நீ அசைந்தால்
நான் உடல்!
நீ நினைத்தால்
நான் மகிழ்வு!
நீ நனைந்தால்
நான் ஜலதோஷம்!
நீ தவித்தால்
நான் பரிவு!
நீ அழிந்தால்
நான் எமன்!
நீ தூங்கினால்
நான் கனவு!
நீ அலைந்தால்
நான் தாகம்!
நீ பகைத்தால்
நான் உறவு!
நீ படைத்தால்
நான் அதிசயம்!
நீ மணந்தால்
நான் வாழ்க்கை!
நீ மறந்தால்
நான் கேள்விக்குறி!
நீ வணங்கினால்
நான் குலதெய்வம்!
நீ இருந்தால்
நான் இதயம்
(உன்னிடம்)!
நீ இறந்தால்
நான் நிலம்
(மண்ணிடம்)!
வாசி தமிழை சு'வாசி v 0.5
நேற்று-நடந்தது
இன்று-நடப்பது
நாளை-நடக்கும்
நேற்று-நினைவு
இன்று-நிஜம்
நாளை-கனவு
நேற்று-தெரிந்தது
இன்று-தெரியும்
நாளை-தெரியாது
நேற்று-கருவறை
இன்று-வாழ்க்கை
நாளை-கல்லறை
நேற்று-பெற்றோர்
இன்று-நீ
நாளை-பிள்ளை
நேற்று-சம்பவம்
இன்று-சாதனை
நாளை-சரித்திரம்
நேற்று-ஆரம்பம்
இன்று-பயணம்
நாளை-இறுதிச்சுற்று
நேற்று-தோல்வி
இன்று-விடாமுயற்சி
நாளை-வெற்றி
நேற்று-படி
இன்று-ஏணி
நாளை-நம்பிக்கை
நேற்று-மூடநம்பிக்கை
இன்று-தன்னம்பிக்கை
நாளை-நம்பிக்கை
நேற்று-தோழி
இன்று-காதலி
நாளை-மனைவி
நேற்று-நண்பன்
இன்று-நண்பன்
நாளை-நண்பன்
வாசி தமிழை சு'வாசி v 0.6
தனிமையில் தாயை நினை
அன்பு கிடைக்கும்!
தனிமையில் தந்தையை
நினை
அறிவு கிடைக்கும்!
தனிமையில் உடன்பிறப்பை
நினை
பாசம் வரும்!
தனிமையில் உறவை நினை
குழப்பம் வரும்!
தனிமையில் காதலியை
நினை
கவிதை வரும்!
தனிமையில் எதிரியை
நினை
உன்னுள் பலம் வரும்!
தனிமையில் நண்பனை நினன
உதவும் எண்ணம் வரும்!
தனிமையில் தனிமையை
நினை
தத்துவம் பிறக்கும்!
தனிமையில் இனிமை
காண்போமா!!!!
வாசி தமிழை சு'வாசி v 0.7
கவலைகளை தள்ளு,
கனவு உண்டு, உன்னிடம்.
காதலை தள்ளு,
கடமை உண்டு, உன்னிடம்.
போதையை தள்ளு,
பொறுமை உண்டு,
உன்னிடம்.
பயத்தை தள்ளு,
பாதை உண்டு, உன்னிடம்.
வீறுகொள் கொள்வோம்
தோழர்களே.!!
விருப்பம்போல்
வாழ்ந்திட..!!
வாசி தமிழை சு'வாசி v 0.8
வலிகள் கொடுத்து
பிறந்து...
வலிகள் தாங்கி
பருவமாகி...
வலிகள் பெற
மணமாகி...
வலிகள் ஏற்று
தாயாகி...
வலிகள் கொண்டு
வாழ்ந்து...
வலிகளுடனே காலம்
கடத்தி சருகாகுபவளோ
...................பெண்
...................
பெண்மை மதி அதுவே
ஆண்மையின் நியதி!
வாசி தமிழை சு'வாசி v 0.9
இந்த படிப்பை
கண்டுபுடிச்சது
எவன்டானு" ?
ஆரம்பிச்சு...
இந்த காதலை
கண்டுபுடிச்சது
எவன்டானு" ?
புலம்பி...
"இந்த கல்யாணத்தை
கண்டுபுடிச்சது
எவன்டானு" ?
கோவிச்சு...
"இந்த பணத்த
கண்டுபுடிச்சது
எவன்டானு" ?
யோசிச்சே...விடையில்லா
பல கேள்விகளோடு
முடிந்து போய்
விடுகின்றது நம் வாழ்க்கை.. !
வாசி தமிழை சு'வாசி v 1.0
கடந்து செல்
துன்பத்தை .
கவர்ந்து செல்
நேசத்தை .
கடைந்து எடு
சாமர்த்தியத்தை .
கண்டு பிடி
வித்தையை .
களைந்து விடு
அசிரத்தையை .
காட்டி விடு
அமைதியை .
கலங்கடி
வெற்றி கொண்டு ..
வாசி தமிழை சு'வாசி v 1.1
எங்கள் வாழ்க்கை
உங்கள் உயிர்!
எங்கள் சுவாசமே உங்கள்
மூச்சு!
எங்கள் கனிகளே உங்கள்
ஊட்டச்சத்து!
எங்கள் கிளைகளே உங்கள்
வீடுகள்!
எங்கள் வளர்ச்சியே
உங்கள் வாழ்க்கை!
நாங்கள் எதிரிகளையும்
நேசிப்போம்!
வெட்டி
சாய்ப்பவர்களையும் காப்போம்!
நிழல் கொடுத்து
நிழலாய் நிற்ப்போம்!
மனிதா..
என்னை (மரம் )
வளர்த்திடு
உங்களை நாங்கள்
காப்போம்
Happy Environmental Day🌿
வாசி தமிழை சு'வாசி v 1.2
பயணத்தின் போது..
நடப்போமா?
விழுவோமா?
கவலை கொண்டதில்லை
குருடன் ..
மலரும் போது..
சாவில் சிதறுவோமா?
சன்னதியில் இருப்போமா?
கவலை கொண்டதில்லை பூ
..
விதைத்த போது..
விளைந்திடுமா
வீணாகிடுமா?
கவலை கொண்டதில்லை
உழவனும் ..
தோழர்களே!!!
ஏன் நீ மட்டும்!
நாளை நாளை விடியுமென
உறங்கிக் கொண்டிருக்கிறாய்???
இன்று இன்றே முடியுமென
விழித்தெழு ...
வாசி தமிழை சு'வாசி v 1.3
தோழியே, என்னுள் உன்னை
விவரிக்க வார்த்தைகள்
தேடித்தேடி இதே..
கண்களில்
காட்சியானவள்!
சுவாசத்தின்
கீதமானவள்!
வண்ணத்தின் நிறமானவள்!
வாசலில் கோலமானவள்!
வார்த்தைகளின்
சொல்லானவள்!
கண்ணாடி பிம்பமானவள்!
நிலவின் ஒளியானவள்!
இன்னிசையின்
சுரமானவள்!
சோலைகளின்
பசுமையானவள்!
மலரின் மனமானவள் !
மாலைகளில் மலரானவள்!
விடியலில்
வெளிச்சமானவள்!
சுகமான நினைவானவள்!
நினைவில் நின்றவள்!
உயிரிலே உறைந்தவள்!
உணர்விலே கலந்தவள்! உள்ளத்திலே சுமப்பவள்!
உடலிலே உதிரமானவள்!
மொத்தத்தில், என்..
வாழ்கையின் வரமானவள்
நீயடி !!!
வாசி தமிழை சு'வாசி v 1.4
முடிவுகள் எடுக்க
முந்திக் கொல்லாதே !
முடிவுகள்
எடுப்பதையும்
ஒத்தி போடதே !
முந்திக்கொள்ளும்
முடிவுகள் தரம் இருக்காது
!
ஒத்திபோடும்
முடிவுகளும்
அவமானக்களை தரலாம் !
சரியான நேரத்தில்
எடுக்கப்படும்
முடிவுகளே
வெற்றியை தரும் !!!
முடிவெடு முடித்திடு!
!!!
வாசி தமிழை சு'வாசி v 1.5
எதை எதையோ
வர்ணிக்கிறோம்
நம்மை வர்ணித்தால்??
இதோ கற்பனை..
ஆணின் தலைமுடி,
இலையுதிர் காடு.
பெண்ணின் தலைமுடி,
கொட்டும் அருவி..
ஆணின் தலை,
சுழலும்
குடும்பப்பந்து.
பெண்ணின் தலை,
அடிபடும் மத்தளம்..
ஆணின் முகம்,
சூரியனின்
பிரதிபலிப்பு.
பெண்ணின் முகம்,
நிலாவின் எதிரொலி..
ஆணின் நெற்றி,
எழுத்தும்
தலையெழுத்தும்.
பெண்ணின் நெற்றி,
பக்தி பதிபக்தி..
ஆணின் கண்கள்,
ஆச்சரியம் அதிசயம்.
பெண்ணின் கண்கள்,
அழகும் ஆபத்தும்..
ஆணின் மூக்கு,
முன்னிற்கும்
முன்கோபம்.
பெண்ணின் மூக்கு,
கிளிகளின்
முன்னுருவம்..
ஆணின் காது,
கேட்கும் கேட்காது.
பெண்ணின் காது,
தோடும்
தொங்கட்டானும்..
ஆணின் வாய்,
சாக்கும் போக்கும்.
பெண்ணின் வாய்,
வாக்கும் வாதமும்..
ஆணின் உதடு,
இருவரி முகவரி.
பெண்ணின் உதடு,
வற்றாத தேன்கூடு..
ஆணின் கன்னம்,
தாடியின் ஜோடி.
பெண்ணின் கன்னம்,
மது கிண்ணம்..
ஆணின் கழுத்து,
வெண்சங்கு வெண்கலமும்.
பெண்ணின் கழுத்து,
தாலியும் தங்கமும்..
ஆணின் மார்பு,
வீரத்தின் வெளிப்பாடு.
பெண்ணின் மார்பு,
தாய்மையின் மனதோடு..
ஆணின் மனசு,
கிணற்றுத் தவளை.
பெண்ணின் மனசு,
ஆழத்தின் ஆழம்..
ஆணின் கைகள்,
கொடுக்கும்
கெடுக்கும்.
பெண்ணின் கைகள்,
அடிக்கும் அணைக்கும்..
ஆணின் வயிறு,
உழைப்பின் உயரம்.
பெண்ணின் வயிறு,
உயிரின் ஆதாரம்..
ஆணின் இடை,
நெளிவும் சுளிவும்.
பெண்ணின் இடை,
அபாயகொண்டைஊசி வளைவு..
ஆணின் குறி,
கடவுளின் அடக்கம்.
பெண்ணின் குறி,
வாழ்க்கையின்
தொடக்கம்..
ஆண் பெண்ஆசனவாய்,
உடல் தீமைக்கழிவு..
ஆணின் தொடை,
தாங்கும் எடைமேடை.
பெண்ணின் தொடை,
தாலாட்டும்
சொர்கவாசல்..
ஆணின் கால்கள்,
நடக்கும் நடத்தும்.
பெண்ணின் கால்கள்,
பறக்கும் பரபரக்கும்..
ஆணின் பாதம்,
தேய்யும் ஓய்யும்.
பெண்ணின் பாதம்,
ஓடும் மேகம்..
ஆணின் உடல்,
வன்மையும் மேன்மையும்.
பெண்ணின் உடல்,
மென்மையும் மெய்யும்..
ஆண் பெண் உயிர்,
வலியும் விதியும்..
வாசி தமிழை சு'வாசி v 1.6
அன்னையும் பிதாவும்
என்னைப் பெற்ற
தெய்வங்கள் !
ஆசிரியரும் ஆண்டவனும்
என்னை ஆளாக்கும்
ஏணிகள் !
திறமையும் துணிவும்
வாழ்வை உயர்த்தும்
தூண்கள் !
நேர்மையும்,
பொறுமையும், பண்பும், காதலும்
என் எதிர்கால
நம்பிக்கை தூண்கள்!!!!
எதிர்கொள்
எதிர்வருவதை!!!
வாசி தமிழை சு'வாசி v 1.7
அன்பே..
நீ பாடினால் குயில்
தோற்கும்!...
நீ ஆடினால் மயில்
தோற்கும்!...
நீ பேசினால் கைபேசி
தோற்கும்!...
நீ பார்த்தால் விழி
தோற்கும்!....
நீ மகிழ்ந்தால் மரணம்
தோற்கும்!....
நீ சிரித்தால் சோகம்
தோற்கும்!....
நீ வாதாடினால் மொழி
தோற்கும்!...
நீ அசைந்தால் கலை
தோற்கும்!...
நீ கோபப்பட்டால்
பாற்கடல் தோற்கும்!...
நீ அடிமையானால்
தியானம் தோற்கும்!...
நீ நெருங்கினால்
தைரியம் தோற்கும்!..
நீ நட்பானால் பலவீனம்
தோற்கும்!..
நீ எனதானால் இதயம்
தோற்கும்!!!...
வாசி தமிழை சு'வாசி v 1.8
எழ மறுத்தால்
காலை கதிரவனில்லை!
விழ மறுத்தால்
நீர் வீழ்ச்சியில்லை!
ஒளிர மறுத்தால்
அழகு நிலாயில்லை!
பூக்க மறுத்தால்
கவரும் மலரில்லை!
வீச மறுத்தால்
குளிரும் காற்றில்லை!
சுட மறுத்தால்
எரிக்கும் தீயில்லை!
இயங்க மறுத்தால்
சுழலும் பூமியில்லை!
உழைக்க மறுத்தால்
உன் வாழ்க்கையில்லை!
வாசி தமிழை சு'வாசி v 1.9
அன்பே, நீ..
திட்டினா வார்த்தைகள்
பிடிக்குது..
துப்புனா பண்டங்கள்
ருசிக்குது..
பேசினா மொழிகள்
மணக்குது..
சொன்னா நினைவுகள்
மறக்குது..
தொட்டா நாபிக்கமலம்
தெறிக்குது..
கைபட்டா நரம்புகள்
வெடிக்குது..
கொட்டினா மண்டை
குளிருது..
பார்த்தா மனசு குதிக்குது..
கிள்ளினா உடல்
சிலிர்க்குது..
பிரிந்தா உயிர்
வலிக்குது..
அணைத்தா தேகம்
கரையுது..
அழுதா உள்ளம்
நடுக்குது..
சிரிச்சா சிந்தை
சிணுங்குது..
மொரச்சா அங்கங்கள்
நடிக்குது..
அரைஞ்சா கண்கள்
முழிக்குது..
உரசினா உடம்பே
எரியுது..
மொத்தத்தில்..
நீ இருப்பதால்
என்னுயிர்
இருக்குது.!!!
வாசி தமிழை சு'வாசி v 2.0
தோழா..
இன்று காலை நேரம்
புதியதாய் பிறப்போம்..
புதிய சிறகுகள் வாங்கி
வான வீதிக்கு
வருவோம்..
இதயத்தின் உயரம்
கொண்டு
இமயத்தின் உயரம்
குறைப்போம்..
நட்பெனும் பாலம்
அமைத்து
நலம் பல நாளும்
சேர்ப்போம்..
வாடும் வரியர்களுக்கு
விதியினை மாற்றி,
வாழும் வாழ்க்கை
சுகமென ஆக்கி,
முகவரி தேடும் இளைய
சமுதாயத்திற்கு,
நம்பிக்கையெனும் புதிய
முகவரி தருவோம்!
வாசி தமிழை சு'வாசி v 2.1
****************************
நம் பிறப்பின் போது
நாடி நரம்புகள்
துடிக்க
கனத்த இதயத்துடன்
காலில் பம்பரமாய்
இருப்பவர்..
நம் மூன்று வயதின்
போது
நாம் வாழ்வில் முன்னேற
கான்வென்ட் வாசலில்
கால்கடுக்க பொழுதும்
நின்றவர்..
நம் ஐந்து வயதின் போது
நடுச்சாமத்தில்
அழுதால்
காலம் பாரா எழுந்து
காலில் போட்டு தூங்க
வைத்தவர்..
நம் பத்து வயதின் போது
நாம் படிப்பதை பார்த்து
காண்பவர்
புகழ்ந்தாலும்
காட்டிக் கொள்ளாது
அகம் மகிழ்ந்தவர்..
நம் பதினைந்து வயதின்
போது
நமக்கு நல்லது கெட்டது
பார்த்து
கண்ணும் கருத்துமாய்
யோசித்து
கணக்கு போட்டு
செய்பவர்..
நம் பதினெட்டு வயதின்
போது
நாம் பட்டம் பெற
வேண்டி
கல்வி நிலையங்களில்
அலைந்து
கரண்சி பல செலவழித்து
படிக்க வைத்தவர்..
நம் இருபது வயதின்
போது
நாம் வேலை கிடைக்க
காண்போரை கேட்டு
கல்வி அமைச்சர் வரை
சிபாரிசுக்கு சென்றவர்..
நம் இருபத்திஏழாம்
வயதின் போது
நாம் திருமண
வாழ்க்கையில் நுழைய
கடைசியில்
தன்மானத்தையும் விடுத்து
கல்யாணத்தை சீரும்
சிறப்புமாய் நடத்துபவர்..
நம் முப்பது வயதின்
போது
நாம் சுகம் காண
களைப்பில்லா நம்
பிள்ளைகளை
கண்ணும் கருத்துமாய்
கவனிப்பவர்..
நம் நாற்பது வயதின்
போது
நம் வாழ்க்கையின் பளு
குறைய
கரண்ட் பில் டாக்ஸ்
வீட்டுவரி
காணும் அணைத்தும் தன்
வசம் கொள்பவர்..
நாம் இறக்க நேர்ந்தால்
நம்மை நினைத்தே
கண்ணீர் சிந்தி மீத
காலமும் நாற்காலியில்
சாய்பவர்..
நம்க்காய்
குடும்பத்துக்காய்
தன்னை கரைத்துக்
கொண்டவர்
***********அப்பா***********
வாசி தமிழை சு'வாசி v 2.2
முயல்பவர்
வாழ்க்கையில் முன்னேறுபவர் முயலாதவர்
காரணம் என்றும் உரைப்பவர்!!!
---திருத்தும்குறள்😉
வாசி தமிழை சு'வாசி v 2.3
ஏமாற்றங்களை
ஏமாற்றிவிடலாம் என்று
ஏமாற்றிக் கொள்கிறோம்
நம்மையே!
எதிர்பாராமல் வாழ
கற்றுக்கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்போடு தான்
வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்!
வாழ்க்கை கடினமான பாதை
தான் ஆனால் கடந்து செல்ல முடியாத பாதை அல்ல...
நம்பிக்கையோடு
பயணிப்போம்...!
வாசி தமிழை சு'வாசி v 2.4
"மாறாத அன்பு அம்மாவின்
அன்பு"
என்று திருமணமாகதவன்
சொன்னது !
"மாறாத அன்பு
அப்பாவின் அன்பு"
என்று திருமணமானவன்
சொன்னது ! 😉
வாசி தமிழை சு'வாசி v 2.5
மகன் பார்த்த முதல்
கதாநாயகன் அப்பா!
மகன் அறியும் முதல்
வில்லனும் அப்பா!
மகன் விழும் போது
எழுவோம் என்று நம்பியவர் அப்பா!
மகன் மீது அன்பை
வைத்துக் கொண்டு
எதிரிப் போல்
நடிப்பவர் அப்பா !
மகன் முடியாது என்று
சொன்னால் முடியும் என்று நம்பிக்கையை விதைத்தவர் அப்பா !
மகனிடம் தோற்பதையே லட்சியமாய்
கொண்டவர் அப்பா !
மகன் நடைபயில மகன்
வேகத்துக்கு நடப்பவர் அப்பா !
மகன் ஒடுவதை ஒதுங்கி
நின்று ரசிப்பவர் அப்பா!
மகன் கரம் பிடித்து
முதுமையில் குழந்தைப் போல் நடப்பவர் அப்பா !
அம்மாவின் அன்பை விட
சிறந்த அன்பு உலகில்
இருக்கிறதென்றால்
அது அப்பாவின்
அன்புதான்!!!
காலை வணக்கம்
தந்தையர் தின
வாழ்த்துகள்!!!
வாசி தமிழை சு'வாசி v 2.6
உன் மகனாக..
உன் உயிரால் வரம்
அளித்தாய்,
குழந்தை பருவத்தில்..
உன் மார்பில் உறங்க
வைத்தாய்,
மழலை பருவத்தில்..
உன் மனதில் மாட்டி
வைத்தாய்,
இளமை பருவத்தில்..
உன் அறிவால் சொல்லி
வைத்தாய்,
உழைக்கும்
பருவத்தில்..
நீ என் மார்பில்
உறங்கினாய்,
உன் முதுமை
பருவத்தில்..
என் மகனாக..
தந்தையர் தின
வாழ்த்துகள் 😀
வாசி தமிழை சு'வாசி v 2.7
வேண்டாம்னு
துரத்தினாலும்
தேடி தேடி வரா..
கன்னம் சிவந்தாலும்
முத்த முத்தமா தரா..
காதோரம் வட்டமிட்டு
இசை ரீங்காரம்
செய்றா..
கொஞ்சம் கண்
அசந்தாலும்
அவ போதாதுனு
அவ தோழிகளோடு சேர்ந்து
ரவுசு பண்றா..
என்ன பார்க்கிறிகள்???
கொசுகளின் அட்டகாசம்
😉😉😉😉😋😋😋😜😜
வாசி தமிழை சு'வாசி v 2.8
மூடநம்பிக்கை தொலை,
பிரிவினை போகும்..
உறுதியா இரு,
பயம் போகும்..
உழைக்கனும்னு நினை,
உறக்கம் போகும்..
விடாமுயற்சி எடு,
சோர்வு போகும்..
பணிவு கொள்,
தலைக்கனம் போகும்..
நம்பிக்கை வை,
தோல்வி போகும்..
வாசி தமிழை சு'வாசி v 2.9
சீனப் பெருஞ்சுவரும்
ஒவ்வொரு கல்லாய்
கட்டியதுதான் !
ஒவ்வொரு அடியாய்
அளந்துதானே உலகை அளந்தோம் !
நடந்து பழகித்தானே
நிலவுக்கு போனோம் !
முயற்சியோடு
பயிற்சிதானே
வெற்றிக்கு வழி !
முயல் பயில் வெல்.
வாசி தமிழை சு'வாசி v 3.0
பிறந்த போது ஆடையின்றி
திறந்த மேனியாய்
இருந்தோம்.
வாழ்க்கை எனும்
ஆடையில்
சிக்கி
சின்னாபின்னமாகி
நஞ்சி நசுங்கிபோய்
மகிழ்ந்து மானங்கெட்டு
தவிக்கிறோம்.
மனிதா,
புரிந்துக்கொள்..
நீ இறந்த பின்
ஆடையின்றி
மண்ணில்
புதைக்கப்படுவாய்..
வாசி தமிழை சு'வாசி v 3.1
கடவுளின் உண்டியலில்
பொன்னும் பொருளும்.
ஏழையின் குடிலில்
பசியும்வறுமையும்.
மனிதா..
கடவுள் ,
வேண்டும்னு
கேட்டதுமில்லை!
வேண்டாம்னு
சொன்னதுமில்லை!
அவனுக்கும் சரி!!
உதவிக்கும் சரி!!
வாசி தமிழை சு'வாசி v 3.2
இன்றய இந்தியா!
ஆறு குளங்கள் ஏறினு
எல்லாம் Hyundai Ford வீடுகள் Software companiesனு
நிரம்பி ஆச்சு
நமது நீர்வளம் விவசாய
நிலம் எல்லாம் எங்கே போச்சு..
தாகத்திற்கு Cola Pepsi Drinks ஆச்சு
இளநீர் நீர்மோர்
குடிக்குறது நின்னே போச்சு..
வட்டி அதிகம்னாலும் HDFC Standard charteredனு ஆச்சு
கம்பிரமான கூட்டுறவு
வங்கிகள் எங்கே போச்சு..
Levis Jeans peter England shirt topsனு உடுத்துதல் Modern ஆச்சு
எங்களின் பருத்தி Kadi craft துணிகள் பழசாய் போச்சு..
Adidas Bermudasனு jockeyனு Nightyனு நமது உள்ளாடை ஆச்சு
எங்களின்தாவணிகளும்,
புடவைகளும் வேட்டியும் கயலி எல்லாம் தரமிழந்துப் போச்சு..
பசிக்கு KFC DOMINO'S WANG'Sனு சாப்பிடல் ஆச்சு
நமது பாரம்பரிய கூழ்
களி இட்டிலி மறந்தே போச்சு..
DOVEனு AXE perfumeனு AMWAYனு தரம் உயர்ந்து வாசனை மணக்க ஆச்சு
நம் மஞ்சளும்,
மருதாணியும் பைத்தமாவும் வாசம் இழந்துப் போச்சு..
Valentine's day, friendship dayனு
எல்லாத்துக்கும் திருவிழாகள் ஆச்சு
எங்களின் கோவில்
விழா கல்யாணங்களும் ஊர் விழா கோர்ட்
படிகள் ஏறுகிறபடி போச்சு..
Cricketனு Computer gamesனு இளசு முதல் கிழடு வரை மூழ்கி ஆச்சு
நம் விளையாட்டான
கபடியும், மல்யுத்தமும் ஜல்லிகட்டும் களையிழந்துப் போச்சு..
Dollarsகும் Euroகும் நம் மூளைகள் வெளிநாடுகளில் அடமானத்திற்க்கு
விற்கல் ஆச்சு
நம் நாட்டில் யார்
எக்கேடு கெட்டால் என்னனு போயே போச்சு..
இருப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு ஆசைப்படும்
நமக்கும் நம் அரசியல்
அதிகாரிகளுக்கு எப்போது
புரியும்?
மீனைவிட தூண்டில்
பெரிதென்று!!!!
மாறுமா இந்தியா?
வாசி தமிழை சு'வாசி v 3.3
மவுனம் கொள்வது
மனதில் அமைதி
மாற்றம் வருவது
மனித வாய்ப்பு
அவசரம் கொள்வது
மடமையின் நிலை
ஆத்திரம் கொள்வது
தொலைக்கும் நிம்மதி
மனிதம் என்பது
பண்பின் இருப்பிடம்
அறிவுரை ஏற்பது
தருவது ஆறுதல்
வாழ்த்தி போற்றுவது
குணங்களில் சிறந்தது
நீதியில் நிலைப்பது
நேர்மையின் வெற்றி
தர்மம் செய்வது
பிறர்நலம் காப்பது
கடவுளைக் காண்பது
கருணையின் வடிவில்
வேண்டுவது வாழ்வில்
பணிவும் பரிவும்
வாசி தமிழை சு'வாசி v 3.4
அப்பா..
உனது முகச்
சுருக்கள்களில்
எனது வாழ்க்கை அழகாய்
விரிகின்றது..!!!
என்றும் என்றென்றும்
லவ் யு அப்பா..
வாசி தமிழை சு'வாசி v 3.5
சிரித்து வாழ,
சிந்தித்து வாழ்!
துன்பமற்று வாழ,
இன்பமுற்று வாழ்!
பிறரை மதித்து வாழ,
உன்னை துதித்து வாழ்!
வெற்றியை பெற்று வாழ,
தோல்வியை கற்று
வாழ்!
வாசி தமிழை சு'வாசி v 3.6
கற்க கசடற
வள்ளுவன் கூற்று..
கசடு கற்றால்தான்
அரசியல் கூத்து..
நிற்க அதற்க்கு தக
வள்ளுவன் கூற்று..
தகுதியே இல்லாமல் நிற்பதே
அரசியல் கூத்து..
மூவேந்தர் ஆண்ட
நாட்டில்
மூடர்களாய்
நிற்கின்றோம்.
வாசி தமிழை சு'வாசி v 3.7
திங்கட்கிழமை காலை
இதை சொல்ல சரியா
இருக்கும்..
பணியில் வெற்றி பெற..
1.வேலையில் நேரத்தை
வீணடிக்காதீர்கள்.
2. வேலையில்
முடியும்னு நம்புங்கள்.
3. வேலையில் திறமைகளை
காட்டுங்கள்.
4. வேலை
கொடுத்தவனுக்கு விசுவாசமாக இருங்கள்.
5.வேலையில் புதிய
விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
6. வேலையில் எதற்கும்
சலித்து கொள்ளாதீர்கள்.
7.வேலையை
முழுவதுமாய் நேசியுங்கள்.
8. வேலையை எப்படி
செய்ய வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.
9. வேலையை ஈடுபாடுடன்
செய்தால் தோல்வி யோசிக்கும் வெற்றி நேசிக்கும்.
10.உங்கள்
திறமைக்கும், மனநிலைக்கும்,
பொருத்தமான வேலையை
தேர்ந்துஎடுத்தால் எப்பொழுதும் வெற்றி உங்களுக்குத்தான்.
வாசி தமிழை சு'வாசி v 3.8
வாழ்க்கையை அறிந்திடு!
அடக்கமாய் நடந்திடு!
ஆசையை அளவிடு!
பேராசையை கைவிடு !
சாதிசமயங்களை
களைந்திடு !
அகத்தூய்மை காத்திடு!
புறத்தீங்கை
தவிர்த்திடு !
பகுத்தறிவை
முன்னிறுத்திடு
பயனுறவே வாழ்ந்திடு
பலன்களை அடைந்திடு !
முன்னோரை நினைத்திடு !
முதியோரை வணங்கிடு!
முன்மாதிரியாக
வாழ்ந்திடு !
ஏன் என்றால் ...
கருவாகி உருவாகி
தருவாகி எருவாகி
மறையும் தருணமே
நமது வாழ்க்கை..!!!
வாசி
தமிழை சு'வாசி v 3.9
யாருக்கும் கிடைக்காத
வாழ்க்கை நம்மிடம்..
எப்படியும் வாழ்ந்தே
ஆகவேண்டிய வாழ்க்கை..
அதை ஏன்
புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன்
நொந்துபோய்
வாழ்கின்றாய் !
அதை ஏன்
வெறுத்துகொண்டு
வாழ்கின்ற
ாய் !
அதை ஏன்
தப்பிக்கப்
பார்க்கிறாய் !
அதை ஏன்
அழுதுகொண்டு
வாழ்கின்றாய் !
மகிழ்ச்சியாகத்தான்
வாழ்ந்துபாரேன் !
இது உன் வாழ்க்கை
ஆனந்தமாக வாழ்..
வாசி தமிழை சு'வாசி v 4.0
வாழ்க்கையில் சிரிக்க
பழகு,
வாழ்க்கை சிறக்கும்!
சிரித்துக் கொண்டே வாழ
பழகு,
வாழ்க்கை மேன்மை
அடையும்..!
நீ வாழும் போது
சிரிக்க மறந்துவிட்டால்,
நீ இறந்த பின்
உன்னை நினைத்து
உன் மண்டை ஓடு சிரிக்கும்..!!!
வாசி தமிழை சு'வாசி v 4.1
WhatsApp இல்லாம போனா?
Morning விடியாது,
Night தூங்காது
Chat செய்யாது,
Forward ஓடாது
Status பார்க்காது,
Group சேராது
Commit ஆகாது,
Comment போடாது
Job நிற்காது,
Time வீணாகாது
Torture இருக்காது,
Future தோற்காது
😉
வாசி தமிழை சு'வாசி v 4.2
: கபாலி டீம் மனு
கோர்ட்
உத்தரவு
169
வெப்சைட்கள் தடை
மற்ற
தயாரிப்பாளர்களின் படம்?
இரண்டு
வாரம் ஹவுஸ்புல்
ஆன்லைனில்
சீட் தெரியும்
புக்கிங்
செய்ய முடியாது
பிளாக்கில்
சக்கைபோட?
தாதாவுக்கும்
மகிழ்ச்சி
தானுவுக்கும்
மகிழ்ச்சி
ரஞ்சித்துக்கு
மகிழ்ச்சி
ரசிகனுக்கு
நெருப்புடா?
மதி
இழந்த
மாந்தர்க்கு
தெரியுமா?
மறைமுக
வர்த்தகம்??
கபாலிக்கே
வெளிச்சம்..
பாலாபிஷேகம்
செய்யும்
பாமரனே
யோசி???
No comments:
Post a Comment