தமிழன் பாடல்
*****************
பல்லவி
*********
இருக்கு இருக்கு
எங்களுக்கு பெருமை இருக்கு!
விலக்கு விலக்கு
எங்களை எதிர்ப்பதை விலக்கு!
நொறுக்கு நொறுக்கு
தீயவர்களை அறவே நொறுக்கு!
கலக்கு கலக்கு
உலகையே தமிழால் கலக்கு!
சரணம் 1
***********
விஞ்ஞானிகளும் ஆச்சரியப்படும்
பஞ்சாங்கம் இருக்கு!
நோய்களும் பயந்தோடும்
மருத்துவம் இருக்கு!
இலக்கணம் இலக்கியம்
ஆயிரம் இருக்கு!
தலைகணம் இல்லை தலையில் கணம் இருக்கு!
உனக்கு எனக்கு
எதுக்கு வழக்கு வழக்கு!
நமக்கு கிடக்கு
பெருமை கொட்டி கிடக்கு!
முறுக்கு முறுக்கு
தமிழன்னு மீசைய முறுக்கு!
சரணம் 2
************
உலகிற்கே அறிவியல்
அறிவிச்சதா இருக்கு!
உலகப்பொதுமறைக்கு ஈடு
ஏதாவது இருக்கு!?
உலகிற்கே பூஜ்யம்
மதிப்பெண் போட்டதா இருக்கு!
உலகின் முதல் மூத்த குடி
தமிழன்னு இருக்கு!
உனக்கு எனக்கு
எதுக்கு வழக்கு வழக்கு!
நமக்கு கிடக்கு
பெருமை கொட்டி கிடக்கு!
முறுக்கு முறுக்கு
தமிழன்னு மீசைய முறுக்கு!
சரணம் 3
************
கதிர்அறுத்து போரடித்த
கதையும் இருக்கு!
கழுத்தறுத்தவன் கதை முடித்த
கதையும் இருக்கு!
கல்லணை கல்வெட்டு
பெருமை இருக்கு!
கற்க்காலமே தமிழ் பேசிய
கர்வம் இருக்கு!
உனக்கு எனக்கு
எதுக்கு வழக்கு வழக்கு!
நமக்கு கிடக்கு
பெருமை கொட்டி கிடக்கு!
முறுக்கு முறுக்கு
தமிழன்னு மீசைய முறுக்கு!
மனம் திறந்து V 0.1
ஒரு முறை பார்வை வீசு போதும்!
ஒரு வார்த்தை பேசு அதுவே போதும்!
ஒரு புன்னகை செய்திடு போதும்!
ஒரு குறுஞ்செய்தி அனுப்பு போதும்!
ஒரு தடவை பெயர் கூறு போதும்!
ஒரு தவறிய அழைப்பு கொடு போதும்!
ஒரு சொல் சொல்லி திட்டு போதும்!
ஒரு செல்ல கொட்டு போதும்!
ஒரு முறை முறைத்து பார் போதும்!
ஒரு கடைக்கண் பார்வை போதும்!
ஒரு சுண்டு விரல் காட்டு போதும்!
ஒரு ம்ம்ம்ம் சொல்லு போதும்!
இதில் ஏதாவது ஒன்று செய் போதும்!
அது வேற ஒன்றும் இல்லை
அன்பே😍😍😍
நான் உயிர் வாழத்தான்!!!
மனம் திறந்து V 0.2
உலகத்தில் அட
உனது இல்லத்தில்
உன்னைச்சுற்றி
ஓராயிரம் இன்னல்கள்
சூழ்ந்து இருக்கலாம்
சுழன்றும் இருக்கலாம்
அது
உன்னை குடி கொள்ளும்முன்
உன் மனம் திறந்து பார்!?🤔
மனம் திறந்து V 0.3
அன்பே...😍
முதல் முறை பார்த்தேன்
தூக்கம் இழந்தேன்,
மீண்டும் பார்த்தேன்
பசி மறந்தேன்,
மீண்டும் பார்த்தேன்
நடை மாறினேன்,
மீண்டும் பார்த்தேன்
செயல் தடுமாறினேன்,
மீண்டும் பார்த்தேன்
உடல் மெலிந்தேன்,
மீண்டும் பார்த்தேன்
வயதை இழந்தேன்,
மீண்டும் மீண்டும்
மீள முடியாது
காதல் கேட்டேன்? உனது
கல்மனம் மௌனம் ஆனது
(அவள்
வருங்கால கல்லறை கூட மௌனமானது)
மீண்டுவிட செய்வாயா?
இல்லை
மாண்டுவிட சொல்வாயா?
மனம் திறந்து V 0.4
இருக்கும் போது
இல்லாததை தேடுறதும்
இல்லாத போது
இருப்பதை தேடுறதும்
கிடைக்குறப்ப
கிடைக்காதற்கு ஏங்குறதும்
கிடைக்கலனா
கிடைச்சவனிடம் புலப்புவதும்
முடியாததற்காக மனம்
முயற்சிப்பதும்
முடியும் என்பதை
முயலா அலட்சியப்படுத்துவதும்
என
வாழ்வது தான்
வாழ்க்கையோ?!🤔
மனம் திறந்து V 0.5
தோழா...
உன் மனமே
உனக்கு அரசன்..
உன் மூளையே
உனக்கு தளபதி..
உன் எண்ணங்களே
உனக்கு நண்பர்கள்..
உன் இரத்தமே
உனக்கு டானிக்..
உன் சோம்பலே
உனக்கு எதிரி..
உன் நரம்பே
உனக்கு தூண்..
உன் சதைகளே
உனக்கு கோட்டை..
எதற்கும் கலங்காதே மனமே..
யாருக்கும் பயப்படாதே மனமே..
உன் செயலே
உனக்கு வெற்றி..!
மனம் திறந்து V 0.6
உன்னை பற்றி சொல்பவர்கள்
ஆயிரம் சொல்லட்டும்!
உன்னை சுற்றி சூழ்ச்சிகள்
ஏராளம் நிகழட்டும்!
உன் நெற்றியில் வியர்வை
வர உழைதுபார்!
அதுவே
உன் வெற்றியாக அமையும்👍
மனம் திறந்து V 0.7
அன்பே உன் பெயர் நான்..
எழுத
கவிஞரின் கவிதையானது!
படிக்க
கல்வியாளரின் பாடமானது!
வைக்க
கலைஞனின் தலைப்பானது!
பாட
கண்ணதாசனின் காவியமானது!
வாசிக்க
மாணிக்கவாசகரின் பாடலானது!
இசைக்க
இசைஞானியின் இசையானது!
கூப்பிட
செல்ல பெயரானது!
உச்சரிக்க
செம்மொழி தமிழானது!😍😍😍
மனம் திறந்து V 0.8
உனது கூந்தல்
சீரணிமிட்டாய்!
உனது கன்னம்
ஜவ்வுமிட்டாய்!
உனது கண்கள்
கடலைமிட்டாய்!
உனது உதடு
தேன்மிட்டாய்!
உனது பற்கள்
சீரகமிட்டாய்!
உனது பேச்சு
நெய்மிட்டாய்!
உனது நெஞ்சு
பஞ்சுமிட்டாய்!
உனது கழுத்து
நுங்குமிட்டாய்!
உனது கோபம்
புளிப்புமிட்டாய்!
உனது இடை
ஜெல்லிமிட்டாய்!
உனது கால்கள்
குச்சிமிட்டாய்!
உனது முகம்
தேங்காய்மிட்டாய்!
உனது வண்ணம்
ஆரஞ்சுமிட்டாய்!
மொத்தத்தில்
நீ மிட்டாய் தொழிற்சாலை!!
சுவைக்க நான்😎 ரெடி
அன்பே நீ?😍
மனம் திறந்து V 0.9
பிறந்த போது
தாயின் கைப்பிடியில்..
வளரும் போது
தந்தையின் கைப்பிடியில்..
விடலையின் போது
தம்பிகளின் கைப்பிடியில்..
வகுப்பின் போது
ஆசானின் கைப்பிடியில்..
படிப்பின் போது
நட்பின் கைப்பிடியில்..
பருவத்தின் போது
காதலின் கைப்பிடியில்..
வேலையின் போது
தலைமையின் கைப்பிடியில்..
மணத்தின் போது
மங்கையின் கைப்பிடியில்..
அன்று முதல்
இல்லாள் கைப்பிடியில்..
கைகள் மாறவில்லை
நம்பிக்கையும் குறையவில்லை
இறுதியில் அனைவரும்
மண்ணின் கைப்பிடியில்..!
மனம் திறந்து V 1.0
நம்பிக்கை உன்னுயிர் மூச்சு!
தன்னம்பிக்கை உன் வளர்ச்சி!
பயிற்சி உன் பாடம்!
முயற்சி உன் திறமை!
கடின உழைப்பு உன் நேர்மை!
சிக்கனம் உன் சேமிப்பு!
தோல்வி உன் காதல்!
வெற்றி உன் வாழ்க்கைத்துணை !👍
மனம் திறந்து V 1.1
நிலவை அழகென்று சொன்னால்,
உன் முகத்தை என்ன சொல்ல?
மலர்கள் அழகென்று சொன்னால்,
உன் வண்ணத்தை என்ன சொல்ல?
அருவிகள் அழகென்று சொன்னால்,
உன் சிரிபொலி என்ன சொல்ல?
கார்மேகம் அழகென்று சொன்னால்,
உன் கூந்தலை என்ன சொல்ல?
மீன்கள் அழகென சொன்னால்,
உன் கண்களை என்ன சொல்ல?
மாங்கனி அழகென்று சொன்னால்,
உன் கன்னத்தை என்ன சொல்ல?
கொய்யா பழத்தை அழகென்று சொன்னால்,
உன் உதட்டை என்ன சொல்ல?
வலம்புரி சங்கினை அழகென்று சொன்னால்,
உன் கழுத்தினை என்ன சொல்ல?
வளைந்து நெளிந்து செல்லும் நதியினை அழகென்று
சொன்னால்,
உன் கொடியிடையினை என்ன சொல்ல?
இந்த உலகமே அழகென்று சொன்னால்,
அன்பே😍😍😍
என் உலகம் நீ உன்னை என்ன சொல்ல?!
மனம் திறந்து V 1.2
6 அடி நீளம் அளந்து
5 அடி ஆழம் வெட்டி
4 பேர் கொண்டு வர
3 அடி அகலம் செய்து
2 பேர் கீழே இறக்கி
1 ஒருவராய் மண்ணை போட
அர்த்தமற்று போன
உடல்
மண்ணோடு மண்ணாக போகும்,
அர்த்தமுள்ள நீ வாழ்ந்த வாழ்க்கை
மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும்!!
மனிதனின் மறுஉருவம் பாடல்
**********----***********
பல்லவி
*********
வாழ்க்கையில் தினம் தினம் போராட்டம்
வாழவே பணம் மனம் போராட்டம்
ஆடி போராடி நம்மை தொலைத்தோமடா
நாடி எதையோ தேடி வாழ்வை இழந்தோமடா
என்னத்த சொல்ல இது நாடா சுடுகாடா?
சரணம்
************
ஓடா தேய்யுது வயித்துக்காக ஒரு கூட்டம்
ஓடோடி உழைக்குது பொருளுக்காக ஒரு கூட்டம்
உயிரையும் பறிக்குது நகைக்காக ஒரு கூட்டம்
இடையில் பிடுங்கி பொழைக்குது ஒரு கூட்டம்
கூட்டம் போட்டு மேடை கூட்டம் போட்டு
கூத்தடிக்குது ஒரு கூட்டம்
கொள்ளை அடிக்குது ஒரு கூட்டம்
சரணம்
*************
பசி பட்டினி பஞ்சம்னு அலையுது ஒரு கூட்டம்
செய்த பாவம் கழுவ திரியுது ஒரு கூட்டம்
சினிமா மால் ட்ரிட்னு மகிழுது ஒரு கூட்டம்
தண்ணி தம்மு ஆட்டம் சூதாட்டம்னு ஒரு கூட்டம்
நுட்பம் இருக்கு மேலும் தொழில்நுட்பம்
இருக்கு
தீரல எதுவும் இன்னும் மக்கள் பாடு
திண்டாட்டம்
மனம் திறந்து V 1.3
கண்கள் மட்டும் இருக்கிறது!
காட்சிகள் இல்லை..
செவிகள் மட்டும் இருக்கிறது!
ஒலி இல்லை..
உதடுகள் மட்டும் இருக்கிறது!
உச்சரிப்பு இல்லை..
இதயம் மட்டும் இருக்கிறது!
இயக்கம் இல்லை..
கைகள் மட்டும் இருக்கிறது!
அசைவுகள் இல்லை..
கால்கள் மட்டும் இருக்கிறது!
நடை இல்லை..
உடல்மட்டும் இருக்கிறது!
உணர்வுகள் இல்லை..
துவாரம் மட்டும் இருக்கிறது!
சுவாசம் இல்லை..
மூளை மட்டும் இருக்கிறது!
செயல் இல்லை..
காரணம் அன்பே 😍
என்னோடு நீ இல்லை..😢
மனம் திறந்து V 1.4
சந்தன மரத்தை எப்படி
வெட்டி போட்டாலும்
அதன் மணம் போவதில்லை!
சிங்கம் எதுக்கு எப்படி
சினுங்கினாலும் பதுங்கினாலும்
அதன் குணம் மாறுவதில்லை!
கரும்பு எங்கு எப்படி
வளர்ந்தாலும் காய்ந்தாலும்
அதன் சுவை தீருவதில்லை!
வாழை எங்கு எப்படி
வெட்டினாலும் நட்டாலும்
அதன் துளிர் நிற்பதில்லை!
எறும்பை நீ எப்படி
கலைத்தாலும் தடுத்தாலும்
அதன் தொடர்ச்சியை விடுவதில்லை!
அது போல்
தோழா நீ எங்கு பிறந்து
இருந்தாலும் வாழ்ந்தாலும்
தடை வந்தால்
உன் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்
மாறாது இருந்தால்
வெற்றியோடு இருப்பாய்!!👍
மனம் திறந்து V 1.5
வலிகள் இல்லாமல் பிரசவம் இல்லை!
வலிகள் இல்லாமல் வழிகள் இல்லை!
வலிகளை தாங்கிக் கொள்!
வலிகள் இல்லாமல் வாழ்க்கையில்லை!
வலிகளை உன் முயற்சிக்கு!
வலிகளோடு முயற்சி செய்!
தோழா!
நன்கு சிந்தி
பலமுறை சிந்தி
ஆழமாய் சிந்தி
வலிகள் இல்லாமல் வெற்றியில்லை!!
வலிகளை தாங்கி வெற்றி வாகை சூடு!!!
கணினி கிறுக்கனின் காதல் பாடல்
---------------------------------------------
பல்லவி
---------------
மனதோடு மனம் சேர
என்னுள் Enter ஆனவளே!
உயிரோடு தினம் வாழ
என்னுள் Register ஆனவளே!
கண்ணியா வந்தவளே! கணினியா ஆனவளே!
Dataவா நிறைந்தவளே! Virusஅ பிடித்தவளே!
Save me save me save me
கொஞ்சம் என்னை Save me!
Have me have me have me
Heartல் என்னை Have
me!
சரணம்
----------------
Refresh press பண்ணா Fresh
இரத்தம் ஓடுதடி!
Numlock press பண்ணா எண்ணம் Lock ஆகுதடி!
Backspace press பண்ணா Body
language மாறுதடி!
Spacebar press பண்ணா டாஸ்மாக் Bar தோனுதடி!
உனது கைகள் கீகளை மீட்ட
Pressure அதிகம் காட்ட
Esc press pannu இல்லாட்டா
Ctl alt deleteடு.
Save me save me save me
கொஞ்சம் என்னை Save me!
Have me have me have me
Heartல் என்னை Have
me!
சரணம்
---------------
Whatsapp install பண்ணா நீதான் DP status!
Skypeல பேச போனா நீதான் Call voice!
Facebookல Post பண்ணா நீதான் Like comment!
Twitterல சொல்ல போனா நீதான் Tweet follow!
இப்படி App அனைத்தும் நீயே
ஆப்பா வந்த இராட்சஷியே
Esc press பண்ணு இல்லாட்டா Alt cntl deleteடு.!
Save me save me save me
கொஞ்சம் என்னை Save me!
Have me have me have me
Heartல் என்னை Have
me!
மனம் திறந்து V 1.6
வாழ்க்கையில் வரும்
வாய்ப்புக்கள் என்பது
டிராபிக் சிக்னல் மாதிரி!
அடிக்கடி சிக்னல் மாறி மாறி வரும்
நல்லா போய்டிருக்கும்
உன்னை சோதித்து பார்க்க
ரெட் சிக்னல் வரும்
சாதிப்பாய் என..!
உன்னை சரி பார்க்க
மஞ்சள் சிக்னல் வரும்
சரிசெய்வாய் என..!
உன்னை ஊக்கப்படுத்த
கிரீன் சிக்னல் வரும்
முந்திக் கொண்டு
முதலில் நீ நிற்பாய் என..!
மனம் திறந்து V 1.8
நயவஞ்சகம் வேண்டாம்!
நக்கல் வேண்டாம்!
நடுங்குதல் வேண்டாம்!
நாணுதல் வேண்டாம்!
நாணயம் போதும்!!
நகைத்தல் போதும்!!
நடத்தை போதும்!!
நம்பிக்கை போதும்!!
நாளை உலகம் உன் கையில்
நல்லப்படை எடு !
வீறுநடை போடு! !
மனம் திறந்து V 1.9
இமைகள் இமைக்க மறுக்கும்!
காணும் காட்சிகள் பதிவுகளாகும்!
வேதியியல் மாற்றம் நிகழும்!
மூளை உன்னையே நினைக்கும்!
வார்த்தை மறைந்து மௌனமாகும்!
ஒருவரிக்கு ஓராயிரம் அர்த்தங்களாகும்!
வருடங்கள் நிமிடங்களாய் மாறும்!
நொடிகள் கரைந்தே ஓடும்!
ஒருநொடிக்குள் கோடி புரிதல்களாகும்!
அன்பே 😍😍😍
உன்னருகே நான் இருந்தால்!!!
மனம் திறந்து V 2.0 (முற்றும்)
தான் செய்தால் தவறுனு சொல்லும்!
பிறர் செய்தால் தப்புனு சொல்லும்!!
தங்கை என்றால் தட்டி கேட்கும்!
மங்கை என்றால் மயங்கி நிக்கும்!!
உதவி செய்தால் ஆதாயம் கேட்க்கும்!
உதவி மறுத்தால் ஏளனம் பேசும்!!
தவறு செய்ய சும்மா ஊக்குவிக்கும்!
செய்த பின்னர் நொந்து நிர்க்கும்!!
பேச சொல்லி எத்தனிக்கும்!
பேசும் முன் அகங்காரம் கொண்டு
ஆட்டிபடைக்கும்!!
நிமிடம் நிமிடம் மாறி கொண்டு இருக்கும்!
ஆசான் மூளையிடம் முட்டி மோதும்!!
தனக்கு ஒரு நியாயம் சொல்லும்!
அடுத்தவங்களுக்கு ஒன்னுனா அட்வைஸ் பண்ணும்!!
மனுஷன் மனசு இருக்கே
புரிஞ்சிக்க முடியல
படாத பாடு படும்!
படாத பாடும் படுத்தும்!!
No comments:
Post a Comment