Saturday, October 14, 2017

தமிழ் தமிழ் தமிழ்




காற்றுக்கும் காதல் உண்டு
இலைகளின் மேல்!
நிலவுக்கும் காதல் உண்டு
வானத்தின் மேல்!
பனித்துளிக்கும் காதல் உண்டு!
புற்கள் மேல்!
வண்டுக்கும் காதல் உண்டு
மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு
நட்பின் மேல்!
எனக்கும் காதல் உண்டு
தமிழ்த்தாயே உன் மேல்!
+++++++++++++++++++++++++++++++++
குழைந்தைகளின் குவா குவா!
அன்னையர் பாடினால் தாலாட்டு!
காதலர்கள் வாசித்தால் காதல் கவிதை!
இது வாலிபர்களின் அழகியின் சிரிப்பு !
கவிஞர்களின் அழகின் சிரிப்பு!
வள்ளுவர் எழுதினால் வாழ்க்கை தத்துவம்!
பாரதி பாடினால் பீரங்கி முழக்கம்!
நான் எழுதினால் மட்டும் ஊளையிடுதலா?
இவை என் தமிழ் தாயின் உயிர் எழுத்துக்களய்யா!  

+++++++++++++++++++++++++++++++++

காற்றும் கர்வம் கொள்ளும்,
உன்னை உச்சரிக்கும் போது..
எழுதுகோல் பெருமை  கொள்ளும்,
உன்னை எழுதும் போது..
உறவும் வாட்டம் கொள்ளும்,
உன்னை பிரியும் போது..
காற்றும் கர்வம் கொள்ளும்,
உன்னை உச்சரிக்கும் போது..
+++++++++++++++++++++++++++++++++
என்னவளே..

உன்னை விட ஒரு

அழகான

அறிவான

அன்பான

பாசமான

பண்பான

ஒருத்தியை

கண்டு

அறிந்து

ஆய்ந்து

காதலிக்க

ஆரம்பித்துவிட்டேன்...

என் அன்னையால்

அறிமுகம் செய்யப்பட்டவள்

பேரழகி அவள்

உனக்கும்

தெரிந்தவள்தான்

கோபப்படாதே

பொறாமை வேண்டாம்

அவள் பெயர்
















என் தாய்மொழி

"தமிழ்"

+++++++++++++++++++++++++++++++++

பார்பதற்கு கனி அவள்
கேட்பதற்கு இசை அவள்
சுவைபதற்கு தேன் அவள்
எழுத்திற்கு முத்து அவள்
சொல்லிற்கு தாய் அவள்
எங்கள் தமிழ் தாய் அவள்...

சித்திரையே வருக.
சிறப்புகள் பல தருக.

இனிய நண்பர்களுக்கு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

+++++++++++++++++++++++++++++++++
இலக்கணத்திற்கு தொல்காப்பியன்!
இலக்கியத்திற்கு இளங்கோவடிகள்!
பொதுவுடைமைக்கு வள்ளுவன்!
அறம்செய்யுளுக்கு ஔவையார்!
படைக்குச் சோழர்கள்!
அணைக்குக் கறிகாலன்!
ஆலயத்திற்கு இராசராசன்!
உண்மைக்கு அரிச்சந்திரன்!
நட்புக்கு இளங்கோவும் சாத்தனாரும்!
வீரத்திற்கு வேலுநாச்சி!
அதிரடிக்கு கட்டபொம்மன்!
கற்புக்குகண்ணகி!
கொடைக்கு வள்ளல்கள்!
புதுமைக்குப் பாரதி
புரட்சிக்கவன் தாசன்!
தத்துவதிற்கு கண்ணதாசன்!
காதலுக்கு வைரமுத்து!
பூளும் எனர்ஜி சிரிதர்!
கணிதம் ராமானுஜம்!
இயற்பியல் சி வி ராமன்!
செஸ்ஸிற்கு விஸ்வநாதன்!
ஆஸ்கருக்கு ரகுமான்!
கிக்கெட்டில் அஸ்வின்!
இசையில் ராஜா!
கூகுளில் பிச்சை!
ஏவுகணையில் கலாம்!
மென்பொருளில் சிவ்நாடார்!
பெப்சிகோ'வில் இந்திரா நூயி!
சன் நெட் கலாநிதி மாறன்!
ரைட்டர் இயக்குனர் மியா!
.....
இப்படி அனைத்திலும் தமிழன் அசைக்க ஒன்னாவிடத்தில் உள்ளான்!

முந்தி பிறந்தவளே
பிந்திய மொழிகளுக்கு தமிழ்த்தாயே..!

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்!
தமிழ் பேசுவதில் பொறுப்பும் கொள்வோம்!
தமிழை எதிலும் முன் நிறுத்துவோம்!
தமிழ் உன்னை எதிலும்  முன் நிறுத்தட்டும்!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

+++++++++++++++++++++++++++++++++

அன்னை மம்மீ
தந்தை டாடி
அண்ணன் பிரோ
அக்காள் சிஸ்
தோழன் பிரண்ட்ஸ்
காதலர் லவ்வர்ஸ்
மற்றவரெல்லாம் அங்கிள் ஆன்டியில் அடங்கி போனது.

தமிழனே நீ உணர்வாய்..

இன்பம் வந்தாலும்
துன்பம் நேர்ந்தாலும்
வாய்விட்டு கதறும் நிலை ஆனாலும்
வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தாலும்

அதிகம் வெளிப்படுவது
நம் தாய்மொழி தமிழ்மொழி வழி தான் என்பதை…!!!
என்றும் உன்னை தன் மார்போடு அனைத்து கொள்வாள்
நம் தமிழன்னை தமிழ்மொழி தான் என்பதை...!!!

இனிய நண்பர்களுக்கு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

+++++++++++++++++++++++++++++++++

இரண்டடி திருக்குறள் போதும்
இருப்பவர் நம்மை செதுக்க..

நான்கடி நாலடியார் போதும்
நல்லதை நாளும் சொல்ல..

அகநானூறு நமக்கு போதும்
அகத்தை அறிந்து கொள்ள..

புறநானூறு நமக்கு போதும்
புறம் புரிந்து கொள்ள..

தமிழ் ஒன்றே போதும்
தலைநிமிர்ந்து நீ வாழ...!


+++++++++++++++++++++++++++++++++

தமிழனாய் செய்ய வேண்டியது..

தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்..

தமிழன் என்பதில் என்றும் கர்வம் கொள்..

தமிழனிடம் தமிழிலேயே மறவாமல் பேசு..

தமிழை உனது உயிராய் உடலாய் உதிரமாக்கு..

தரணியே சுற்றினாலும் பிறப்பின் அடையாளம் மறவாதே..

தமிழில் மட்டுமே  கோப்புகளில் கையெப்பம் போடு..

தமிழச்சியை வாழ்க்கைத் துணை என்றாக்கு..

தமிழில் உன் பிள்ளைக்கு பெயர் சூட்டு..

தமிழையும் கட்டாய பாடமாக பள்ளியில் காட்டு..

தமிழால் வீறுநடை போட கற்றுக்கொடு..

தமிழ் எங்கும் எதிலும் எல்லாம் என ஆக்கு..

தமிழ் தள்ளாத வயதானாலும் தாங்கும்..

தமிழ், நீ தடுக்கி விழுந்தால் பிடிக்கும்..
தமிழ், நீ தடம் மாறினாலும் தடுக்கும்..
தமிழ், உன் தடயம் போனாலும் கொடுக்கும்..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...