ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 0.1
அன்பே உன்னை..
நினைக்கையில்
ஒரு நாளும் வர
மறுத்ததே இல்லை..
"கவிதையும்" 😍
"கண்ணீரும்"😅
(வந்துடேன்னு சொல்லு
ரொமான்ஸ் பண்ண கவிதையோடு
நீயோ கண்ணீரோடு😜)
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 0.2
அன்பே உன்..
புருவம் பென்சில்
பார்வை தீப்பொறி
சிரிப்போ மத்தாப்பு
பேச்சு சரவெடி
சினுங்கல் ஊசிவெடி
கோபம் சாட்டை
ஊடல் புஸ்வானம்
பாசம் சங்குசக்கரம்
நடை பாம்பு(மாத்திரை)
வேகம் ராக்கெட்
விவேகம் 1000வாலா
மொத்தத்தில்
அனு அனுவாய்
கொல்லும் அனுகுண்டு..!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 0.3
அன்பே..
நீ
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கிறாய்,
நான்
உன்னையே
எண்ணிக்கொண்டிருக்கிறேன்!
நீ
நிலவை ரசித்துக்கொண்டிருக்கிறாய்,
நான்
நிலவே உன்னை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்!
நீ
தலையனையை அனைத்து
உறங்குகிகொண்டிருக்கிறாய்,
நான்
தலைவி உன்னை நினைத்து
உறக்கமிழக்கிறேன்!
நீ
அழகிய கனவுகள்
கண்டு மகிழ்கிறாய்,
நான்
அழகியே உன்னை
காண தவிக்கிறேன்!
மொத்தத்தில்
இரவு
உன்னை தாலாட்டுகிறது,
என்னை தவிப்பில் ஆழ்த்துகிறது!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 0.4
குடி குடி குடி
தவழு தவழு தவழு
நட நட நட
சாப்பிடு சாப்பிடு சாப்பிடு
படி படி படி
மதிப்பெண் மதிப்பெண் மதிப்பெண்
வேலை வேலை வேலை
ஓடு ஓடு ஓடு
பணம் பணம் பணம்
பெண் ஆண் பெண்
காதல் காதல் காதல்
பதவி பதவி பதவி
மணம் மணம் மணம்
கார் கார் கார்
வீடு வீடு வீடு
கடன் கடன் கடன்
வாழ்க்கை வாழ்க்கை வாழ்க்கை
இப்படி பிறப்பிலிருந்து
முடியும் இறப்புவரை
துரத்தும் சமுதாயம்?
நிம்மதி? நிம்மதி? நிம்மதி?
(நிம்மதியா தூங்கு சன்டேல)
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 0.5
நீ இமை'னா
நான் மையாவேன்!
நீ கன்னம்'னா
நான் இதழாவேன்!
நீ இதழ்'னா
நான் முத்தமாவேன்!
நீ முதுகு'னா
நான் நகமாவேன்!
நீ கூந்தல்'னா
நான் விரலாவேன்!
நீ விரல்'னா
நான் நகமாவேன்!
நீ உணவு'னா
நான் பசியாவேன்!
நீ உடல்'னா
நான் உடையாவேன்!
நீ காலம்'னா
நான் வருங்காலமாவேன்!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 0.6
காதல் சொல்ல..
ஒவ்வொரு நாளும்
உன்னை வரவேற்று
உருவமற்று போகின்றேன்
உன் வருகையால்..
ஆம்
காதலுக்கு கண் இல்லை தான்!
ஆனால் என்
காதலுக்கு உருவம் இல்லை.!
இப்படிக்கு
கதிரவனை வரவேற்கும்
பனித்துளி. !
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 0.7
உன்னை பார்க்கும் முன்பு, எனக்கோ..
தாயிற் சிறந்ததொரு
கோவிலும் இல்லை!
உன்னிடம் பேசுவதற்கு முன்பு, எனக்கோ..
தந்தை சொல் மிக்க
மந்திரம் இல்லை!
இவ்விரண்டும் பொய்த்துப் போனதோ?
அன்பே..
உன்னை பார்த்து
உன்னிடம் பேசிய பிறகு..!😜
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 0.8
என்னால் தான்
என்னவள் அழகு
என்று கர்வம் கொண்டது
என்னவளின் பொன்னகை,
பாவம்
புதைந்து போயின
அதன் கர்வம்
அவளின் அந்த
ஒற்றைப் புன்னகையில்..!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 0.9
அன்பே நீ..
தேட தேட
விழிகள் !
பார்க்க பார்க்க
அழகு!
தீண்ட தீண்ட
மோகம்!
பேச பேச
வெட்கம்!
சீண்ட சீண்ட
கோபம் !
மீற மீற
சண்டை !
தூண்ட தூண்ட
ஆசை!
திகட்ட திகட்ட
முத்தம் !
மீண்டும் மீண்டும்
உன் காதல்...
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.0
'என்னவளே'
'கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்'
'அழகிய தீயே' 'மின்னலே'
'மௌனம் பேசியதே' ' அந்த ஒரு நிமிடம்'
'கண்ட நாள் முதல்'
'உன்னை நினைத்து' 'உள்ளம் கேட்குமே'
'யாரடி நீ மோகினி?'
'ஆஹா' 'அன்னக்கிளி'
'இதயத்தில் நீ' 'காதல் கோட்டை'
'நீ வருவாய் என' 'உன்னைத்தேடி'
'துள்ளாத மனமும் துள்ளம்'
'நீ வேணும்டா செல்லம்'
'காலமெல்லாம் காத்திருப்பேன்'
'தேவி'
'காதலே என் காதலே'
'ஒரு தலைக் காதல்'🤔
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.1
நீ பார்க்க
காதல் வைரஸ்
என்னுள் பரவியது..
விளைவு?
கண்ணுக்குள் நீ
மெட்ராஸ் ஐயாய் சிவந்தாய்..
மூக்கினுள் எட்டி பார்த்து
ஜல தோஷமாய் நின்றாய்..
தொண்டை குழியில்
தைராய்ட் கட்டியாய் இறங்கினாய்..
இதயத்தில் நுழைந்து
ஹார்ட் அட்டாக் கொடுத்தாய்..
வயிற்றில் ஓடி
பிசைந்து கலங்க வைத்தாய்..
ரத்தத்தில் நிறைந்து
ரத்தசோகையை அதிகமாக்கினாய்..
தேடி தேடி நடந்தே
முட்டிக்கால் முடங்கிப்போனது..
உன்னை நினைத்தே
மூளை சிதைந்ததோ?
ஊருக்கோ இது காசநோய்,
நமக்கோ இதுதான் காதல்நோய்..
முத்தம் எனும் மருந்து
நீ தர
தீராத நோய்கள் மொத்தமும்
தீரட்டுமே?!!!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.2
கிறுக்க வைக்கும்
சிரிக்க வைக்கும்
நினைக்க வைக்கும்
பறக்க வைக்கும்
காக்க வைக்கும்
ஏங்க வைக்கும்
ஆக்கவும் வைக்கும்
அழிக்கவும் வைக்கும்
ஆம் காதல் ஒரு
விசித்திர நோய்!!!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.3
எழுதுகோல் கொண்டு
எழுதுகிறேன் கவிதை
என்னவளை பற்றி
எழுதுகின்றது பிழையில்லாமல்..!
என்னவள் வர
எழுதுகோலும்
எழுத மறுக்கின்றது
கவிதையே வந்துவிட்டதென..!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.4
தமிழ் கவிதைகளுக்கு
அழகு அதன் சொற்கள்..!
என் கவிதைகளின் அழகுக்கு
காரணம் அவள் மட்டுமே..!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.5
அன்பில் அடங்கிபோனேன்..!
விழியில் வீழ்ந்தேன்..!
சிரிப்பில் சிறைப்பட்டேன்..!
கூந்தலில் கூத்தாடினேன்..!
பேச்சில் பேதலித்தேன்..!
கன்னங்குழியில் கரைந்தேன்..!
தொண்டைகுழியில் தொலைந்தேன்..!
மூச்சில் முக்குளித்தேன்..!
இதயத்தில் இடம்பெயர்ந்தேன்..!
இடையில் இடறிப்போனேன்..!
நடையில் நம்பினேன்..!
உன்னாலேயே அனைத்தும் உணர்ந்தேன்..!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.6
அன்பே..
தயவு செய்து நிலவுக்கு
மட்டும் முகம் காட்டாதே!!!
பொறாமையால் நிலவின் முகம்
சிவந்து சூரியனாகி பகல்
வந்து விடபோகிறது..
பின் இரவுக்கு
எங்கே போவது !!!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.7
அன்பே..
உன் இமையை திறந்தால்
என் "வானம்" விடிந்து விடும்!
உன் கண்ணை மூடினால்
என் "உலகம்" இருண்டு விடும்!
உன் கூந்தல் வித்தால்
என் "மேகம்" கலைந்து விடும்!
உன் இதழில் சிரித்தால்
என் "மொட்டுகள்" மலர்ந்து விடும்!
உன் விரல் தொட்டால்
என் "கடலும்" வற்றி விடும்!
உன் பாதம் பட்டால்
என் "பாலைவனம்" முளைத்து விடும்!
உன் நிழல் வழிந்தால்
என் "பூமியும்" நின்று விடும்!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.8
Screen bright ஆகும்!
Screensaver நீ ஆவாய்!
Volume அதிகரிக்கும்!
Alarm தானாய் பாடும்!
Button எகிறி நிற்கும்!
Battery ஏறிகிட்டே போகும்!
Camera தானா capture செய்யும்!
Msg'அ அனுப்பி தள்ளும்!
App எல்லாம் உன் பெயராகும்!
Ringtone unnai வாழ்த்தும்!
Timer correct'அ ஓடும்!
Tower பக்காவா கிடைக்கும்!
காதல் வந்த மொபைல்கே
இந்த கதினா
மனுஷனுக்கு?
என்ன மனுஷனுக்கு
கல்லறை,
மொபைலுக்கு
காயலாங்கடை..!😜
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 1.9
தமிழின் எழுத்துகள் மொத்தம் அவள்.
மலர்களின் வாசம் மொத்தம் அவள்.
தேன் சுவைச்சாறு மொத்தம் அவள்.
குயில்களின் குரல் மொத்தம் அவள்.
பிரம்மன் படைப்பின் மொத்தம் அவள்.
பெண்மை நாணம் மொத்தம் அவள்.
இசை ஸ்வரங்கள் மொத்தம் அவள்.
அழகின் உருவம் மொத்தம் அவள்.
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 2.0
ஐநூறு ஆயிரம் நோட்டுகளை
பதுக்கி வைத்தது போல்..
என் காதலை சொல்லாமல்
நெஞ்சில் மறைத்து வைத்தேன்..
இன்று
இரண்டும் செல்லாக்காசாய்..!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 2.1
அடியே..
ஐநூறு ஆயிரம் என்கிற
மமதையா உனக்கு
என்னை..
ஐம்பது நூறு என
ஏளனம் செய்தாயே
பார்த்தாயா உன் கதி
இக்கணமே புரிந்துக் கொள்
நான் இன்றி நீ இல்லை
நீயின்றி நானில்லை.
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 2.2
உன்னை பார்த்ததும் நெஞ்சில்
'ஆயிரம் விளக்கு'
உன்னை பற்றியே ஓடுது
'என்னுள் ஆயிரம்'
'ஆயிரத்தில் ஒருவன்'
நான் என்றாய் உனக்கு
இருக்கும் காதலில்
'ஆயிரம் பொய்' கோபம் ஏனோ
விலகிச் செல்லாதே
'வா'ரணம் ஆயிரம்'
ஒன்றல்ல கொடு
'ஆயிரம் முத்தங்கள்'
நம் காதலில்
'ஆயிரம் பூக்கள் மலரட்டும்'😬
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 2.3
காதல் எனும் பறவையில்..
ஒரு சிறகு நீ
மற்றொரு சிறகு நான்
சேர்ந்து பறப்போம்
வா அன்பே வா..!
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 2.4
கொண்டை கேபேஜ்
தலைமுடி கீரை
மூளை காலிபிளவர்
கண்ணு கத்தரிக்கா
மூக்கு கேரட்
காது குடைமிளகாய்
இதழ் மிளகாய்
கன்னம் தக்காளி
பற்கள் தேங்காய் துண்டு
தாடை உருளை
தோல் வெங்காயம்
கை புடலங்காய்
விரல் வெண்டை
இடை சுரைக்காய்
பிட்டம் பூசணிக்காய்
மூட்டு பீட்ருட்
கால் வாழைத்தண்டு
நரம்பு காரணி
மொத்தத்தில் அன்பே நீ
ஒரு காய்கறி தோட்டம்😬
ரொமான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்🤐 v 2.5
(முற்றும்)
அண்டம்
ஆகாயம்
பூகோளம்
வானம்
பூமி
நிலம்
நீர்
காற்று
நெருப்பு
வெயில்
மழை
மரம்
செடி
கொடி
அணுக்கரு
துகள்
எல்லாமே நீ எனக்கு..
(வேறென்ன நான் சொல்ல)
No comments:
Post a Comment