Saturday, October 14, 2017

வித்தியாசம் KAVITHAI VERSIONS

வித்தியாசம் V 0.0

ஒருவன் தான் செய்யும்
செயலில் தனித்துவம்
இருக்குமாயின்,
உலகில் எங்கு சென்றாலும்
அவன் முக்கியத்துவம்
அடைகின்றான்..
அவன் சொல்வதெல்லாம்
பலருக்கு தத்துவம்
ஆகின்றன..

வித்தியாசம் புரிஞ்சா சரி.🤔

வித்தியாசம் V 0.1

சிலர் சொல்லாமலே
பல நன்மைகளை செய்கின்றனர்.
உலகம் இவர்களுக்கு
இட்ட பெயர் "பைத்தியம்"...

பலர் செய்த ஒரு
சிலதை பலரிடம் சொல்லி
கொண்டே இருக்கிறனர்.
உலகம் இவர்களுக்கு
இட்ட பெயர் "லூசு"...

வித்தியாசம் புரியுதா?🤔
வித்தியாசம் V 0.2

பசிக்கு உண்பவருக்கும்
ருசிக்கு உண்பவருக்கும்
வித்தியாசம் இருக்கு...

களத்தில் இறங்கி
விளையாடுபவருக்கும்,
வேடிக்கைபார்ப்பவருக்கும்
வித்தியாசம் இருக்கு...

கனவுகளில் வாழ்பவருக்கும்
கனவுகளை நிஜமாக்க
உழைப்பவருக்கும்
வித்தியாசம் இருக்கு..

பொழுபோக்காக
எழுதுபவருக்கும்
பிழைப்பிற்காக
எழுதுபவருக்கும்
வித்தியாசம் இருக்கு...

கடமைக்காக வாழ்பவருக்கும்
வாழ்வதே கடமையாக
கொண்டவருக்கும்
வித்தியாசம் இருக்கு...

இருப்பதை எண்ணி
இன்பத்தோடு வாழ்பவருக்கும்
இல்லாததை எண்ணியே கவலையோடு
வாழ்பவருக்கும் வித்தியாசம் இருக்கு...

சொல்லிற்கும்
செயலிற்கும்
வித்தியாசம் இருக்கு...

வாழ்ந்து முடித்த முதியவர்க்கும்
வாழ துடிக்கும் இளமைக்கும்
வித்தியாசம் இருக்கு..

வாழ்க்கையே
ஒரு வித்தியாசம்- அதனுள்
வாழ்ந்து பார்க்கும் நாமும்
ஒருவருக்கொருவர் வித்தியாசமே...

வித்தியாசம் V 0.3

 'எனக்கு என்ன வாங்கிக் குடுப்ப?’ - காதலி.

'எனக்கு என்னதான் வாங்கிக் குடுத்துக் கிழிச்சீங்க?’ - மனைவி.

'எனக்கு எதுக்குடா வாங்கின?’ - அம்மா.

' ராசா வெத்தல சுண்ணாம்பு வாங்கி குடுயா நீ மகராசனா இருப்ப' - பாட்டி.

 வித்தியாசம் V 0.4

அன்பே.. உனக்கும் எனக்கும்
ஒரேயொரு வித்தியாசம்தான்..
"நீ நீயாகிவிட்டாய்"
"நான் நீயாகவே வாழ்கிறேன்"..!

வித்தியாசம் V 0.5

தோல்வியாளர்கள்..
முடியலையேனு எண்ணுவார்கள்!
முயற்சிப்பதை தள்ளுவார்கள்!

வெற்றியாளர்கள்..
மாறுபட்டவைகளை செய்வதில்லை!
மாறுபட்டு செய்வார்கள்!

வித்தியாசம் V 0.6

திட்டமிட்டு
ஆளில்லா நேரம்
திருடுபவன்
கொள்ளைக்காரன்..!

திட்டங்கள் வகுத்து
மக்களுக்காக என
சுருட்டுபவன்
வெள்ளைசட்டைக்காரன்..!

 வித்தியாசம் V 0.7

ஒவ்வெரு மனிதனுக்கும்
தலை கணம் (முடி) இருக்கலாம்..
தலைக்கணம் (திமிரு) இருக்க கூடாது..
ஆனா இக்கால கட்டத்தில்
தலைகீழாதானே இருக்கு..🤔

 வித்தியாசம் V 0.8


ஒரு கவிதை போட்டியில்
ஒரு கவிதை யோசித்து
ஒரு கவிதை வந்தது
ஒரு கவிதை வாழ்த்தியது
ஒரு கவிதை இழுத்தது
ஒரு கவிதை நடந்தது
ஒரு கவிதை நானமுற்றது 
ஒரு கவிதை எழுதி
ஒரு கவிதையை கவிதையிடமே
ஒரு கவிதையாய் கொடுத்தேன்.🤔

வித்தியாசம் V 0.9

முயற்சி என்பது படி
தினமும் அதனைப் பிடி
தோல்விகள் ஆகும் தள்ளுபடி
வெற்றி இனிமேல் உன் அத்துப்படி
வாழ்க்கை ஆகட்டும் செல்லுபடி !

வித்தியாசம் V 1.0

காதலித்துப் பார்..
கால்கள் பறக்கும்
இதயம் படபடக்கும்
மூளை யோசிக்கும்
பைத்தியம் பிடிக்கும்
நீயே ஹீரோ ஆவாய்
காசு கரையும்
செல்போன் நனையும்
நேரம் குறையும்
இரவுகள் நீளும்
தூக்கம் போகும்
கனவுகள் நிறையும்
உறவுகள் சுறுங்கும்
தனிமை இனிமையாகும்
காத்திருப்பதே வரமாகும்
இறுதியில் நினைவுகளே சுகமென நினைப்பாய்.!!!

கல்யாணம் செய்து பார்..
சமையல் செய்திடுவாய்
சாகசம் பேசிடுவாய்
மடியில் வீழ்ந்துகிடப்பாய்
மச்சினியை வரண்டிழுப்பாய்
பெட்டி கடைகளும் அறிவாய்
விலைவாசியால் யோசிப்பாய்
பட்டுரகங்கள் அறிந்திடுவாய்
மச்சானோடு ஊர் சுற்றுவாய்
ஷாப்பிங் செய்தே சம்பாதிப்பாய்
வீக்கெண்டு அலைந்திடுவாய்
நட்பே சிறந்ததென்பாய்
இறுதியில் ஆபிஸ்சே முக்கியமென நினைப்பாய்.!!!

குழந்தை பெற்றுப் பார்...
மகிழ்ச்சியில் திளைப்பாய்
தாய்மை குடியேரும்
கண்ணும் கருத்தாவாய்
சாதனையாய் நினைப்பாய்
பள்ளிக்கு மீண்டும் செல்வாய்
பணமென்று பயணிப்பாய்
எல் ஐ சி போட்டு வைப்பாய்
இறுதியில் உன் தந்தையை நிச்சயம் நினைப்பாய்.!!!

வித்தியாசம் V 1.1

இமயமலையே ஏறினாலும்
இதயத்தில் முயற்சி என்பது
இருந்தால் மட்டுமே தோழா
இடர்களை எல்லாம் கடந்து
இறுதி வரை உன்னால்
இஷ்டம் போல் உறுதியாய்
இமயகொடி நாட்ட முடியும்!!!

வித்தியாசம் V 1.2

இன்று உன்
இலட்சியக்குறி தவறினால்,
நாளை உனக்காக
காத்திருக்கும் கேள்விக்குறி..!

வித்தியாசம் V 1.3

நேற்றைய பிரச்சனைகளை,
நேற்றே மறந்திடுங்கள்....
நாளைய பிரச்சனைகளை,
இன்றே மறந்திடுங்கள்....
இன்றைய பிரச்சனைக்கு,
இன்றே தீர்வு காணுங்கள்......!

வித்தியாசம் V 1.4


பாதை அமைப்பது உன்
பாதங்களே..
நடந்திடு அதன் மேலே
நம்பிக்கையோடு..!!!
வித்தியாசம் V 1.5

நமக்கு நாமே திட்டம் Selfie
நம்மை அழகாய் காட்ட Selfie
நம்மை எப்படியும் காண்பிக்க Selfie
நாம் எங்கு பயணித்தாலும் அங்கு Selfie
நம் மூஞ்சியை பெரிதாக்கும் Selfie
நமக்கு சில நேரம் ஆப்பு வைத்திடும் Selfie

வித்தியாசம் V 1.6


குழந்தை பிறந்தது
கூட்டம் கூடி சிரித்தது
கூடி சாப்பிட்டு கலைந்தனர்..

குழந்தைக்கு பிறந்தநாள் விழா
கூட்டம் கூடி சிரித்தது
கூடி சாப்பிட்டு கலைந்தனர்..

குழந்தைக்கு காதுகுத்து
கூட்டம் கூடி சிரித்தது
கூடி சாப்பிட்டு கலைந்தனர்..

பூப்பெய்து விழா
கூட்டம் கூடி சிரித்தது
கூடி சாப்பிட்டு கலைந்தனர்..

திருமண நிகழ்வு
கூட்டம் கூடி சிரித்தது
கூடி சாப்பிட்டு கலைந்தனர்..

சீமந்தம்
கூட்டம் கூடி சிரித்தது
கூடி சாப்பிட்டு கலைந்தனர்..

இப்படி கூடி கூடி சிரிப்பவர்கள்
இறந்தால் மட்டும் கூடி அழுவது ஏனோ?


வித்தியாசம் V 1.6


இன்று, நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
முற்கள் போல் ஆபத்துக்களும்
பூக்கள் போல் இன்பங்களும்
காத்திருக்கிறது.....!

இவை யாவும்
உன் செயலால் வருவதில்லை..
உன் எண்ணத்தால் வருபவை..

வித்தியாசம் V 1.7


சிரித்தால் சினம் குறையும்
சிரித்தால் உள்ளம் தெளிவாகும்
சிரித்தால் மனம் இலேசாகும்
சிரித்தால் கோபம் குறையும்
சிரித்தால் யோகம் கிடைக்கும்
சிரித்தால் மனக்கசப்பு விலகும்
சிரித்தால் தீமை நீங்கும்
சிரித்தால் உறவு மேம்படும்
சிரித்தால் அகம் மென்மையாகும்
சிரித்தால் உடல் நலமாகும்
சிரித்தால் வாழ்க்கை நீளும்
சிரித்தால் முகம் அழகாகும்.!!

சிரிக்கும் மனிதன் சிறந்தவனே!
சிந்திக்கும் மனிதன் சிரிப்பவனே!
சிரிங்க சிரிங்க சிறக்க சிரிங்க!
வாழ்க்கை சிறக்க சிரிங்க சிரிங்க!

வித்தியாசம் V 1.8


வானின் துணை கொண்டு

வானவில்லின் நிறம் எடுத்து

வண்ண மயிலின் இறகு எடுத்து

வரைந்திட்ட சித்திரமோ பெண்!?

வித்தியாசம் V 1.9

நிறைவுகளை உரைக்காதே!
குறைவுகளால் குளித்துவிடு!
உரக்க சிந்தனை கொள்!
சிறகுகளை பறக்கவிடு!
நல்வழியில் செல்!
துயர் இழைக்காதே!
உன்வழி தேர்வு செய்!
உண்மை உணர்!
உயர் எண்ணம் வளர்!
உன் காலில் நில்!
உழைத்து விடு!

உழைத்த களைப்பில் நீ உறங்கும் போது, உன்..

கனவுகள் நனவாகும்!
வெற்றிகள் எளிதாகும்!
வாழ்வே இனிதாகும்!
வானம் வசப்படும்!!

 வித்தியாசம் V 2.0

அக்கறை பாதுகாப்பு
அரவணைப்பு
அளவில்லா ​அன்பு​
​அனைத்தும் அடங்கிய அப்பா
அமைந்தால் உன் வாழ்வில்,
அகம் மகிழும்
அடித்தளம் அசையாது
அடிமனதும் நகராது
அடிப்படை தகுதிகளுடன்
அருங்குணங்கள் கொண்டு
அரியாசனத்தில் அமர்ந்து
அரசனாக அகிலத்தில்
அரங்கேறி ஆட்சி புரியலாம் !

வித்தியாசம் V 2.1


உன் பெற்றோர்கள்
உனக்காக என்ன செய்தார்கள்
என எண்ணுவதைவிட,
நீ உன் பெற்றோருக்கு
என்ன செய்தாய்
என்று எண்ணி பார்
உனக்குள் ஒரு
லட்சியம் உருவாகும்...

வித்தியாசம் V 2.2


வித்தியாசதிற்கு ஆண்களின் அழகை வர்ணித்தால் என்ன..

காற்றில் பறக்கும்
முடி அழகு..
அணிகலன் அணியாத
உடல் அழகு..
மீசை சொல்லும்
வீரம் அழகு..
உதவி செய்யும்
கரம் அழகு..
ஆகாயத்தை பார்க்கும்
மனசு அழகு..
அன்பிற்கு அடிபணியும்
திமிர் அழகு..
அநியாயத்தை தட்டிக்கேட்கும்
தெனாவட்டு அழகு..
நடை சொல்லும்
கம்பீரம் அழகு..
பாவனை காட்டும்
பாணி அழகு..
கவிதை எழுதும்
எண்ணம் அழகு..
ஆழமான காதல்
கொள்வது அழகு..
பெண்மை பாதுகாக்கும்
ஆண்மை அழகு..

வித்தியாசம் V 2.3

மனம் புரிந்தவரை மணம் புரிந்துக்கொள்
மணம் புரிந்தவரின் மனம் புரிந்துக்கொள்..!

வாழ்க்கை...! புதிரானது அல்ல
இன்னும் நீ புரிந்துக்கொள்ளாதது.

வித்தியாசம் V 2.4

நம் எண்ணங்கள் ஏணிபோல் இருந்தால்,
நாம் ஏழு கடல் மலையும் கடந்து,
நம்மை எதிர்க்கும் எமனையும் வென்றுவிடலாம்..!

 வித்தியாசம் V 2.6

தேவதையை காண்பது அரிது!
ஆம்
தேவதையை காண்பது அரிது தான்!!

பெண்ணே.. உன்னை போல் ஒரு தேவதையை காண்பது அரிது தான்...

வித்தியாசம் V 2.7

இன்னல்கள் ஆயிரம் இருக்க
அல்லல்கள் தேடி வந்திழுக்க
பிணக்குகள் கூடி கூத்தாடிக்க
அத்தனையும் தாண்டி மிதித்து
உண்மை யாதென உணர்ந்து
பொறுமை நெஞ்சி கொண்டு
பெருமை பெற்றோர்கு சேர்த்து
வாழ்வில் எதிலும் நிமிர்ந்து
வெற்றி நம்மில் காண்பதே
உன் வாழ்க்கையின் சிறப்பு.!!!!

வித்தியாசம் V 2.8

நிலவு இல்லாத இரவு!
சூரியன் இல்லாத பகல்!
மலர் இல்லாத சோலை!
மரங்கள் இல்லாத தோட்டம்!
இலை இல்லாத மரம்!
சிறகு இல்லாத பறவை!
பறவைகள் இல்லாத வனம்!
நீர் இல்லாத நதி!
அலை இல்லாத கடல்!
துடுப்பு இல்லாத படகு!
காரம் இல்லாத கடுகு!
உயிர் இல்லாத உடல்!
தாய் இல்லாத சேய்!

நினைத்து பார்க்க முடியுமா?

நீ இல்லாத நான்!😍

வித்தியாசம் V 2.9

சிறுவயதின் வெட்கம்
இரண்டு கைகள் கொண்டு முகத்தை மூடுவது..

வளரும் போது வெட்கம்
முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக ஓடுவது..

பருவத்தின் போது வெட்கம்
முகம் சிவக்க உதட்டை சுழித்து கடித்து கொள்வது..

நட்பின் போது வெட்கம்
அட போங்கப்பா சும்மா சுதி ஏத்தாதிங்க சிரிச்சிகிட்டே..

காதலின் போது வெட்கம்
நாணத்தால் கால்கள் பறவைகளாய் தரையில் கோலம் போடும்..

திருமணமத்தின் போது வெட்கம்
முகத்தில் பயத்துடன் பற்கள் தெரிய எதுவும் தெரியாமல் நிற்பது..

இன்னும் என்ன
அதான் திருமணம் முடிஞ்சாச்சே
வெட்கமே இல்லாம
போங்க போய் படுங்க😉😋

வித்தியாசம் V 3.0

என்ன(அ)வள் நடந்தால்..

குமரன் முதல் கிழவன் வரை
வாய் பிளந்து நிற்பார்கள்.
பூமி வழி விட்டு வானம் வாழ்த்தி
கொண்டே இருக்கும்.

பூக்கள் மட்டும் பொறாமையில்
பொங்கி தலை வணங்கும்...

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...