Friday, October 13, 2017

ennamo ponga Version

ennamo ponga Version 1

ஆறில் தொடங்கி
ஆயுள் வரை தொடரும்..
உயிரோடு கலக்கும்
உயிரையும் கொடுக்கும் "உன்னத நட்பு"..

"தாய்க்கு பின் தாரம்" யாரோ சொன்னது,
தயங்காமல் சொல்வேன் நான் "நட்பு" என்று...!!!

Happy friendship day
ennamo ponga V2
உழைப்பு உடலின் முயற்சி!!!
அறிவு மூளையின் முயற்சி!!!

இவைகளின் முயற்சியே
மனிதனின் வளர்ச்சி!!!

ennamo ponga V3
துடுப்பு இருந்தால் சாயாது
காகித கப்பல் மூழ்காது..
நம்பிக்கை இருந்தால் தோற்காது
வாழ்க்கையில் துயரம் வாராது..!!!

ennamo ponga V4
அழுகையை அணைக்கும் சொல்!!
அன்பால் அரவணைக்கும் சொல்!!
மனதை பறிக்கும் சொல்!!
கவலையை முறிக்கும் சொல்!!
இனிமை பயக்கும் சொல்!!
மழலையின் முதல் சொல்!!
ஐந்தறிவுகளும் உதிர்க்கும் சொல்!!
உயிர் போகும் வரை
உயிரில் கலந்த சொல்!!
 ######அம்மா#####

ennamo ponga V5
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும்
நா ஒன்றுதான்..
பகலுக்கும் இரவுக்கும்
நாள் ஒன்றுதான்..
அன்பிற்கும் ஆத்திரத்திற்கும்
இதயம் ஒன்றுதான்..
வரவுக்கும் செலவுக்கும்
பொருள் ஒன்றுதான்..
நன்மைக்கும் தீமைக்கும்
விதி ஒன்றுதான்..
வெற்றிக்கும் தோல்விக்கும்
களம் ஒன்றுதான்..
வாழ்வுக்கும் தாழ்வுக்கும்
வாழ்க்கை ஒன்றுதான்..
So,
தோழர்களே கடமையை
இன்றே இக்கணமே
செய்வோம் வாருங்கள்!!!

ennamo ponga Version6
 விழியில் விழுவதெல்லாம்
நினைவில் வருவதில்லை..!!
நினைவில் வருவதெல்லாம்
நிஜத்தில் நடப்பதில்லை..!!
நிஜத்தில் நிகழ்வதெல்லாம்
நிரந்தரமாய் நிலைப்பதில்லை..!!

உழைப்பு தான் நிஜம்
அதன் கூலி நிரந்தரம்! !!

ennamo ponga Version7
அவள் சுவாசிக்கும் தென்றல்
என் மேல் வீசாதோ?

அவள் கடைக்கண் பார்வை
என் மேல் விழாதோ?

அவள் உதிர்க்கும் வார்த்தைகளில்
என் பெயர் இருக்காதோ?

அவள் வாழ துடிக்கும் அவளது இதயம்
என் வாழ்க்கை நிலைக்க ஒரு முறை எனக்காய் துடிக்காதோ?
இல்லையேல்
அவளுக்காய் துடிக்கும் என் இதயம் நிற்காதோ!!!😪

ennamo ponga Version8
ஆசைப்படு அன்பை அளிக்க
பேராசைப்படு ஆத்திரம் ஒழிக்க..
ஆசைப்படு நட்பாய் நடக்க
பேராசைப்படு எதிரிகளை நட்பாக்க..
ஆசைப்படு நல்லது நடக்க
பேராசைப்படு தீமையை ஒழிக்க..
ஆசைப்படு பொதுநலன் காக்க
பேராசைப்படு சுயநலம் இழக்க..
ஆசைப்படு உதவிகள் செய்ய
பேராசைப்படு உபதிரம் குறைய..
ஆசைப்படு இலட்சியம் நிறைவேற
பேராசைப்படு பிறர் அலட்சியம் தடுக்க..
ஆசைப்படு வாழ்க்கையை வாழ
பேராசைப்படு அதுவும் மானிடனாய் வாழ..

ennamo ponga Version9
இன்பத்தில் பகிர்வு
துன்பத்தில் சிரிப்பு
பேச்சில் கனிவு
வேதனையில் தெளிவு 
சோதனையில் துணிவு
குணத்தில் பண்பு 
தோல்வியில் நம்பிக்கை
வெற்றியில் பணிவு

இவைகளே
வாழ்க்கையின் தத்துவம்!!!

ennamo ponga Version10
 என்னவளே..!
In Swiss Bank No place?
உன் சிரிப்பை சேமிக்க..
In all News channels employees resigned?
உன் பேச்சை கேட்ட பின்..
All govt. Proposed Store conduct 1st international conference?
உன் அழகை வர்ணிக்க..
In NASA all scientists stunned?
உன் படங்களை நிலவில் இருந்து அனுப்பியதால்..
In world all models decided to die?
உன்னை் தேவதை என்று  வியந்து..

ennamo ponga Version11
நீவி தடவிய கூந்தல்
ஊட்டி மலை வகிடு
வாடா வாடும் வாடாமல்லி
தொட்டு வைத்த பொட்டு
கருப்பு மையிட்ட இமை
வண்ணம் பூசிய இதழ்
தரை பார்த்த விழி
வெட்டும் கொடி இடை
கோலம் இடும் பெருவிரல்
வெட்கத்தால் குனிந்த தலை
காரணம்? ?
இழுத்து போர்த்திய சேலை😜😉

உபயம் :
என்னதான் Modern girl லா
இருந்தாலும்
புடவை கட்டினா பெண் அழகோ அழகுதான்😉😜😃

ennamo ponga Version12
என்னுயிர் போகும் வேளையில் நண்பா,
எமனிடம் போராடுவேன் உன்னுயிர் எடுக்க..!!

உன்னுயிர் போகும் வேளைதனில் நண்பா,
எமனிடம் கூறுவேன் என்னுயிர் எடுத்து
அவனுக்கு கொடுத்துவிடு என்று..!!

ennamo ponga Version13

 வாழ்க்கையில்..
     வாடும் போதும்
     வறுமையின் போதும்
     வதையும் போதும்
     வாழும் போதும்
வராத உறவுகள்???

வாழ்க்கையில்..
     இருக்கும் போதும்
      இன்னலின் போதும்
      இழக்கும் போதும்
வராத உறவுகள்???

இறந்த பின் அழுவது ஏன்???

உறவுகளை வளர்ப்போம்
மனங்களை மதிப்போம்

ஜெய்ஹிந்!!!

ennamo ponga Version14
கவலை விடு,
காற்றில் பற..
கண்ணீர் விடு,
கலக்கம் தீர..
துயரம் விடு,
துணிவு ஏற..
சோகங்கள் விடு,
சுகம் வர..
சுயநலம் விடு,
சுற்றம் சேர..
இம்சை விடு,
இன்பம் திற..
இன்னல் விடு,
இனிமை பெற..
புகழ்ச்சி விடு,
புதுமை பிற..

ennamo ponga Version15
பிறக்கும் போதே எவரும்
அனைத்தும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை..!!
இறக்கும் போது எவரும்
ஏதேனும் கற்காமல் இறப்பதில்லை..!!

வாழ்க்கையே பாடம்
அனுபவமே ஆசான்
நாம் மாணவர்கள்
வெற்றித் தோல்விகளே வரவுசெலவு! !!!

ennamo ponga Version16
 முயற்சி இல்லாதவன்
அனைத்தும் இழக்கிறான்..
முயற்சி உடையவன்
அனைத்தும் அரவணைத்து கொள்கிறான்..
அதுபோல்
முயற்சிக்க கூடாததை
முயற்சிக்காதே!!
முயற்சிக்க வேண்டியதை
முயற்சிக்காமல் இருக்காதே!!


ennamo ponga Version17
தோல்வி பழகாத வெற்றி
தோற்க தாங்காது..
தோல்வி பழகிய வெற்றி
தோற்றாலும் தளராது..!!

ennamo ponga Version18
 பட்டுப் பூச்சிகளின் மரணம்
பட்டுப்புடவையின் ஜனனம்..

கூடும் மேகங்களின் மரணம்
குளிர் மழையின் ஜனனம்..

பாறையின் உருவத்தின் மரணம்
பறிக்கும் சிலையின் ஜனனம்..

சிறு பிரசவ வலியின் மரணம்
சிறு ஜீவனின் ஜனனம்..

மண்ணில் விதையின் மரணம்
மலரும் செடியின் ஜனனம்..

இரவில் இருளின் மரணம்
இயற்கை விடியலின் ஜனனம்..

தோல்விப் படிகளின் மரணம்
வெற்றியின் ஜனனம்..!!!

ennamo ponga Version19
அராஜகம் ஒழி
அகிம்சை வழி..
துன்பம் சுருக்கு
இன்பம் பெருக்கு..
பாவம் தடு
புண்ணியம் தேடு..
உபதிரம் எறி
உதவி புரி..
பொய்மை ஏசு
உண்மை பேசு
தீமை புதை
நன்மை விதை..
மதம் விடு
மனிதம் தொடு..!!

ennamo ponga Version20
நாணம் ஏற்பவள்
நங்கையாகிறாள்..

பாசம் வைப்பவள்
தங்கையாகிறாள்..

நேசம் புரிபவள்
மனைவியாகிறாள்..

உணர்வு பகிர்பவள்
தோழியாகிறாள்..

உயிரை சுமப்பவள்
தாயாகிறாள்..

துணை நிற்பவள்
பெண்னாகிறாள்..

ஆக்கலும் (Birth)
அறிவியலும் (Chemistry)
அழித்தலும் (Death)
பெண்மையை சார்ந்ததே!!!

பெண்களை போற்ற வேண்டம்,
தூற்றாமல் இருந்தாலே போதும்!!!

ennamo ponga Version21
 தொழிலதிபரும்
தொண்டன் ஆவான்..
மருத்துவரும்
மனநோயாளி ஆவான்..
புத்தனும்
புலவன் ஆவான்..
கிழவனும்
கிள்ளை ஆவான்..
பொருப்பாளன்
பொருக்கி ஆவான்..
அறிஞன்
அரக்கன் ஆவான்..
விவசாயி
விருமாண்டி ஆவான்..
......
நிலவு வெட்கத்தில்
கருகி போகலாம்..
சூரியன் எரிந்து
சாம்பல் ஆகலாம்..
பூ மலராமல்
அடம் பிடிக்கலாம்..
தென்றல் புயலாய்
உரு எடுக்கலாம்..
....

பெண்ணே..
உன்னை பார்த்தால் இவையாவும் நடக்கலாம்??
வீட்டை விட்டு வெளியே வந்துவிடாதே..!!!

ennamo ponga Version22
 நாட்கள் நிற்காது
எல்லாம் கிடைக்காது
கிடைத்தது நிலைக்காது
நிலைப்பது பிரியாது

எதுவும் நிஜமல்ல என்பவன் கோழை..
எல்லாம் நிஜமென முயல்பவன் மேதை..

ennamo ponga Version23
 எண்ணும் நாட்களே
உனது வாழ்க்கை
எண்ணிப் பாருடா??
உதட்டில் சிரிப்பும்
உள்ளத்தில் சோகமும் ஏனடா??
நீ இறந்தால்
புதைத்த இடத்தில்
புல் முளைக்கும் நேரத்தில்
உனை மறக்கும் உலகமடா??
So,
Utilize every second
Use every minute
Undertake every hour
Celebrate life...
Hapiee Sunday

ennamo ponga Version24
காதுகளால் கேட்டது போதும்,
பார்த்து பழகு..
கண்களால் பார்த்தது போதும்,
பேசி பழகு..
பேசிகிட்டே இருந்தது போதும்,
சிரித்து பழகு..
சிரிச்சுகிட்டே இருந்தது போதும்,
சிந்தித்தும் பழகு..

நண்பர்களின் பாதை தெரிவது முக்கியம் அல்ல,

பகைவர்களின் பாதையை தெரிந்து பழகு..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...