உயிரெழுத்து V 0.1 அ'ம்மா அனைத்திற்கும் ஆ'தாரம் அடிப்படை.. இ'கழ்ந்தால் நீ இழப்பாய் ஈ'ட்டிய செல்வங்களை.. உ'யிராய் உச்சிமுகர்ந்து ஊ'ன் கொடுத்து கருவில் எ'ட்டி உதைத்த கால்களை ஏ'ந்தி முத்தமிட்டவள். ஐ'யமில்லை ஒ'ன்றல்ல இரண்டல்ல ஓ'ராயிரம் கடவுளின் துகள் ஔ(அ)'வள் அம்மா மட்டுமே அ'ஃ'து தொடக்கம் முடிவு
உயிரெழுத்து V 0.2 அ'டி மேல் அடி வை ஆ'காயம் தொடும் தூரமாகலாம் இ'ருப்பதெல்லாம் வசமாக்கு ஈ'டுபாட்டை செயலாக்கு உ'ன்னை அதுவே உயர்த்தும் ஊ'ரே பார்த்து வியக்கும் எ'ட்டி உதைத்தவர்களும் ஏ'ளனம் செய்தவர்களும் ஐ'ம்புலன்களை அடக்கிகொள்கவர் ஒ'வ்வொன்றும் புதுமையாய் ஓ'டுதளம் அமைக்கும் ஔ'வை வாக்கு பலிக்கும்! அ'ஃ'து விடாமுயற்சி வெற்றி 😀
உயிரெழுத்து V 0.3 அ உயிரெழுத்து! அம்மா உயிர் பெற்ற எழுத்து!! உயிரெழுத்து V 0.4 அ'டக்கம் கொள் ஆ'த்திரம் கொள்ளாதே! இ'ரக்கம் கொள் ஈ'கோ கொள்ளாதே! உ'ள்ளம் கொள் ஊ'டல் கொள்ளாதே! எ'ளிமை கொள் ஏ'மாப்பு கொள்ளாதே! ஐ'யம் கொள் ஒ'ளிந்து கொள்ளாதே! ஓ'ய்வு கொள் ஔ'டதம் கொள்ளாதே! அ'ஃ'து நல்வாழ்க்கை 😀 உயிரெழுத்து V 0.5 அ'வளின் புன்னகை பார்த்து ஆ'வென வாய் இ'ளித்தேன். ஈ' போவதும் தெரியாது உ'ள்ளம் மகிழ ஊ'ர் பெயர் மறந்தேன். எ'ன்ன சொல்ல ஏ'ன் உடனே காதலோ? ஐ'யமே இல்லை ஒ'த்த சிரிப்புல ஓ'ரங்கட்டிட்டா மனச.. ஔ'டதம் முத்தம் மட்டுமே! அ'ஃ'தே வாழும் என்னுயிர் 😍 உயிரெழுத்து V 0.6 அ'ச்சத்துடன் வாழாதே ஆ'ணவத்துடன் வாழாதே இ'ழுக்குடன் வாழாதே ஈ'ரமில்லா வாழாதே உ'டன்பாடில்லா வாழாதே ஊ'மையாய் வாழாதே எ'திரிகளுடன் வாழாதே ஏ'மாற்றத்துடன் வாழாதே ஐ'யத்துடன் வாழாதே ஒ'டுக்கத்துடன் வாழாதே ஓ'ரம்போய் வாழாதே ஔ'டதத்துடன் வாழாதே அ'ஃ'து இவை அனைத்துடன் வாழாதே 😍 உயிரெழுத்து V 0.7 அ'ன்புடன் அ'றிவுடன் வாழு! ஆ'ற்றலுடன் ஆ'சையுடன் வாழு! இ'ன்புடன் இ'சையுடன் வாழு! ஈ'கையுடன் ஈ'ரத்துடன் வாழு! உ'ள்ளத்துடன் உ'றவுடன் வாழு! ஊ'க்கத்துடன் ஊ'ருடன் வாழு! எ'ளிமையாய் எ'ண்ணத்துடன் வாழு! ஏ'கமனதுடன் ஏற்றத்துடன் வாழு! ஐ'க்கியத்துடன் ஐ'ந்நூறாண்டு வாழு! ஒ'ழுக்கத்துடன் ஒ'ற்றுமையாய் வாழு! ஓ'கோனு ஓ'சையுடன் வாழு! ஔ'வியம் ஔ'வைமொழி வாழு! அ'ஃ'து வாழ்க்கையை வாழு 😀 உயிரெழுத்து V 0.8 அ'கத்தே அறி ஆ'ளை தேர்வு செய் இ'னிமை காண் ஈ'சல் ஆகாதே உ'யரே பற ஊ'க்கம் கொள் எ'ட்டி செல் ஏ'மாறாதே ஐ'க்கியம் ஆகு ஒ'ருமை ஆகாதே ஓ'ட விரட்டு ஔ'வியம் பிரித்தறி ஃ'(அக்) தே நலம்😀 உயிரெழுத்து V 0.9 அ'ன்புகொண்டவள் ஆ'ட்கொண்டவள் இ'னிமையானவள் ஈ'ர்த்தவள் உ'ரிமைகொண்டவள் ஊ'ர் போற்றுபவள் எ'ட்டமுடியா சிந்தனையவள் ஏ'ட்டில் காவியமானவள் ஐ'ம்பொன் அவள் ஒ'ன்றி கரைபவள் ஓ'ராயிரம் நிலவானவள் ஔ'கம் பாடியவள் அ'ஃ'து காதலில் வீழ்த்தியவள் 😍 உயிரெழுத்து V 1.0 அ'ரசியல் நாடகத்தில் ஆ'தார்ல ஆரம்பிச்சி இ'யற்கை விவசாயம் வரை ஈ'ரமின்றி சுரண்டி உ'ரிமைகளை பறித்து நம்மை ஊ'னமாக்கி எ'திலும் வஞ்சித்து கொண்டிருக்கும் ஏ'ய் மத்திய அரசே ஐ'யம் வேண்டாம் நாங்கள் ஒ'ரு போதும் எதற்கும் விலை போவதில்லை ஓ'ங்கும் எங்கள் கை ஓடிவிடு மண்ணை விட்டு ஔ'வை போன்ற பாட்டி கூட அறுவா எடுப்பாள். அ'ஃ'து நம் மண் நமது தமிழ்நாடு💪🏻 4/11/17, 9:12 PM - Dr அன்பரசு வெங்கடாசலம்: உயிரெழுத்து V 1.1 அ'ழகான தமிழ்! ஆ'ருயிர் தமிழ்! இ'னிமையான தமிழ்! ஈ'டுஇணை இல்ல தமிழ்! உ'லகப்பொதுமறை தமிழ்! ஊ'ர்உலகம் வியக்கும் தமிழ்! எ'ன்னில் எண்ணத்தில் தமிழ்! ஏ'ட்டில் எழுத்தில் தமிழ்! ஐ'ம்புலன் காண்பதும் தமிழ்! ஒ'ன்றி வருவது தமிழ்! ஓ'ங்கி நிற்பது தமிழ்! ஔ'வை மொழிந்தது உயர் தமிழ்! அ'ஃ'து எமது அடையாளம் தமிழ்! உயிரெழுத்து V 1.2 அ'ன்பே என் ஆ'ருயிரே! இ'னியவளே உன் ஈ'ரப்பார்வையினால் உ'ன்னில் விழுந்தேன் ஊ'ன்றி நெஞ்சில் நிறைத்தேன் எ'ன் காதலை புரிந்து ஏ'ற்றுக்கொள். உன்னிடத்தில் ஐ'க்கியமானவன் நான்தானே ஒ'ரு வார்த்தை 'ஆம்' என்று சொல் ஓ'ராயிரம் கவிதை படைப்போம் ஔ'வை தமிழ் வரை வாழலாம் வா! அ'ஃ'தே வா அழகே வா! உயிரெழுத்து V 1.3 அ'ல்லி நீ! ஆ'ம்பல் நீ! இ'லவம் நீ! ஈ'ங்கை நீ! உ'ந்தூழ் நீ! ஊ'மத்தம் நீ! எ'றுழம் நீ! ஏ'டாகூடமாய் யோசித்து ஐ'க்கியமாய் ஒ'ன்றிப் போனேன் ஓ'ய் ஔ'வளின் சு(வாசத்தில்) அ'ஃ'து அவள் என் பூந்தோட்டமே!😍 உயிரெழுத்து V 1.4 அ'கிம்சையாய் இருந்தோம் ஆ'ங்கிலேயரிடம் ஆட்சியை பிடித்தோம் இ'னம், மதம் மறந்தோம் ஈ'கைப் பண்பில் சிறந்தோம் உ'ழைப்பு தான் நம் தொழில் என்று எண்ணினோம் ஊ'டகங்களில் இந்தியாவின் பெருமையை வர செய்தோம் எ'திரி நாட்டு என்று பார்க்காமல் உதவுகிறோம் ஏ'ழு அதிசயங்களில் தாஜ்மஹாலை பராமரிக்கிறோம் ஐ'க்கிய நாடுகளில் இந்தியாவின் வலிமையை உணர்த்தினோம் ஒ'ழுக்கம் பண்பாடு இவைகள் எங்கள் சொத்து என்றோம் ஓ'ங்கியிருந்தாலும் ஒதுங்கி போகமாட்டோம் ஔ'வை வாழ்ந்த இந்தியாவை விடமாட்டோம் அஃ'து என் இந்தியா என் தேசம். உயிரெழுத்து V 1.5 அ'ன்பை காட்டுவதில் மிக சிறந்தவர்! ஆ'சானாகி வாழ்க்கையை கற்றுத் தந்தவர்! இ'ல்லை என்றால் உடனே இருக்க செய்பவர்! ஈ'டுபாட்டை அனைத்து செயலிலும் காட்ட வேண்டுமென கருதியவர்! உ'லகம் அறிய செய்து என்னை உலகத்திற்கு அறிய செய்தவர்! ஊ'க்கத்தை தேவையின் போது ஊட்டியவர்! எ'னது அனைத்து பணிகளிலும் இஷ்டதெய்வமாக இருந்து வழி நடத்துபவர்! ஏ'ணியாய் இருந்து பல இடங்களில் ஏற்றி விட்டவர்! ஐ'யங்களின் அகராதியாய் இருந்து பல சந்தேகங்களை தீர்த்தவர்! ஒ'ழுக்கம் யாதென கற்று அதன்படி நடக்க சொல்பவர்! ஓ'ய்யும் வரை மட்டுமல்லாது பிறகும் நமக்காய் உழைத்தவர்! ஔ'டதமாய் பல சூழ்நிலைகளில் இருந்தவர்! அ'ஃ'து அவர் வாழும் தெய்வம் கிடைத்த பொக்கிஷம் "அப்பா"😍 உயிரெழுத்து V 1.6 அ'ன்பு பொங்கட்டும்! ஆ'சைகள் நிறைவேறட்டும்! இ'ன்பம் பெருகட்டும்! ஈ'கை குணம் இருக்கட்டும்! உ'யர்வு அடையட்டும்! ஊ'க்கம் கிடைக்கட்டும்! எ'திலும் நிலைக்கட்டும்! ஏ'க்கங்கள் குறையட்டும்! ஐ'யங்கள் தீரட்டும்! ஒ'ற்றுமை ஓங்கட்டும்! ஓ'டுபாதை அமையட்டும்! ஔ'வைமொழி பலிக்கட்டும்! அ'ஃ'து தமிழ் புத்தாண்டில் அனைத்தும் நடக்கட்டும்!😍 உயிரெழுத்து V 1.7 அ'டுக்குமாடி ஏசில ஆ'கானு இ'ருந்தாலும் ஈ'ரவயிறு காய்ஞ்சா உ'டனே நினைக்கிறது சோறுதான்! ஊ'ரென்ன உலகிற்கே எ'ந்த சுழ்நிலையிலும் சுயநலம் இன்றி ஏ'றுபூட்டி உழைக்கும் விவசாயிதான் ஐ'யமில்லா உலகின் ஒ'ரே கடவுள்! ஓ'டவிரட்டவும் வேண்டாம் ஓரம் வைத்து கும்பிடவும் வேண்டாம். ஔ'வ்வர்களை ஏமாற்றாமல் வஞ்சிகாது இருந்தால் போதும். அ'ஃ'து நாம் வாழ அவர்கள் வாழ்கிறார்கள்!😍 உயிரெழுத்து V 1.8 அ'தாகப்பட்டது ஜனங்களே ஆ'ட்சிய பிடிச்சு இ'ருக்குறத பிடிங்கி நமக்கு ஈ'மசடங்கு நடத்துறானுங்க😌 உ'ண்மைய சொன்னா ஊ'ரையே உலையுல போடுறானுங்க கை கோர்த்துகிட்டு எ'வன் எக்கேடு கெட்டா என்ன? ஏ'ழைகள் எல்லாத்துக்கும் வரிசையில் நின்னா என்ன? ஐ'ய்யோ இன்னும் சொல்லானும்னா பணமுடக்கம் பதாஞ்சலி பாபாராம் தேவ் பரமசிவன் ஈஷா பண்ணீர்செல்வம் பண்ணாட்டு நிறுவனம் பாழாபோக ஜியோ பசங்களுக்கு நீட் பார்க்குமிடமெல்லாம் சிபிஎஸ்சி பறிதவிக்கும் ஏழைகள் இதுதாங்க பாஜாக ஒ'ண்ணெண்ணா செய்யுறாங்க. இருந்தும் நாம ஓ'ரம் போயிட்டோம் மனிதர்களே😤 ஔ' ஔனு அ'ஃ'தே குரைக்கும் நாயும் இதை உணருமே நாம்???? உயிரெழுத்து V 1.9 அ'ன்பை போதித்த ஆ'ண்டவரே இ'யேசுவே இன்று நீர் உயிர்த்தெழுந்ததால் ஈ'ஸ்டர் எங்களுக்கு. உ'ம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது. ஊ'ர் உலகமே கொண்டாட்டத்தில்! எ'தற்கும் மன்னிக்க சொன்னவரே ஏ'ளனம் செய்தவரை கட்டி தழுவியவரே ஐ'யா ஒ'ரு கன்னம் அறைந்தால் ஓ'டாமல் மறு கன்னம் காட்டு என்பவரே ஔ'டதம் உமது பைபிள்தான் ஐயா. அ'ஃ'து Happy Easter 😍 உயிரெழுத்து V 2.0 அ'லையின் தேடல் கரையில் முடியும் ஆ'ழ்மனதின் தேடல் அமைதில் முடியும் இ'ன்பத்தின் தேடல் நொடி பொழுதில் முடியும் ஈ'கையின் தேடல் உதவியில் முடியும் உள்ளத்தின் தேடல் உறவில் முடியும் ஊ'க்கத்தின் தேடல் செயலில் முடியும் எ'ச்சத்தின் தேடல் சுவையில் முடியும் ஏ'க்கத்தின் தேடல் வினையில் முடியும் ஐ'யத்தின் தேடல் விடையில் முடியும் ஒ'ருவரின் தேடல் வாழ்க்கையில் முடியும் ஓ'வியத்தின் தேடல் புதுமையில் முடியும் ஒள'வையின் தேடல் தமிழில் முடியும் அஃ'து தேடலில் வாழ்க்கை அர்த்தப்படும்! உயிரெழுத்து V 2.1 அ'ர்த்தமுள்ள வாழ்க்கைத்தான் ஆ'சான் தேடிச்சென்றது! இ'மயம் தாண்டும் வித்தையைதான் ஈ'ன்று முயற்சியும் தந்தது! உ'யிர்கள் நாடும் அன்பைத்தான் ஊ'ற்றாய் பெருகி பாய்ந்தது! எ'ட்டி பறிக்கும் உயரம் தான் ஏ'ட்டில் குறித்து வைத்தது! ஐ'ந்தில் வளைந்த பருவம் தான் ஒ'ழுக்கம் கற்று தந்தது! ஓ'டும் பாதையும் தெரிந்தது ஔ'வை மொழி சொன்னது! அஃ'தும் அஃகு வரை ஆசான் சொல்லி தந்தது! உயிரெழுத்து V 2.2 அ'ன்பிலும் ஆ'தரவிலும் இ'யற்கையிலும் ஈ'கையிலும் உ'ள்ளத்திலும் ஊ'டலிலும் எ'ண்ணத்திலும் ஏ'க்கத்திலும் ஐ'ம்பதிலும் ஒ'ழுக்கத்திலும் ஓ'துவதிலும் ஔ'வள் அஃ'து ஒப்பற்ற பெண்..! உயிரெழுத்து V 2.3 அ'டியே அழகேனு வர்ணிக்குறேன் ஆ'காயத்துல ஏனோ பறக்குறேன் இ'ருக்குறேன் கிறுக்கனாய் இறக்குறேன் ஈ'ரத்தால கண்ணகளை நிரப்புறேன் உ'ன்னையே நித்தமும் தேடுறேன் ஊ'மைக்காயங்கள் கொண்டு வாடுறேன் எ'ங்கே நீ என இதயம் ஏ'ங்க, லப்டப் மாறி லவ்லவ்வென அடிக்க ஐ'ம் புலன்களும் ஒ'ன்றன்பின் ஒன்றாய் ஓ'லமிடுகின்றன ஔ' ஔ'வென! அஃ'து காதலோ.😍
உயிரெழுத்து V 2.4 அ'ச்சத்தில் நீ விழுந்தாலும் ஆ'காயமாய் எழு! இ'ல்லாமல் உன்னிடம் போனாலும் ஈ'கைதனை செய்! உ'லகில் எங்கு இருந்தாலும் ஊ'ரோடு வாழ்! எ'ந்த உயரம் சென்றாலும் ஏ'ணியாய் இரு! ஐ'யம் சிறிது வந்தாலும் ஒ'ழுங்காய் படி! ஓ'கோனு நீ வாழ்ந்தாலும் ஔ'வைமொழி நினை! அஃ'து நவீன ஆத்திசூடி!! உயிரெழுத்து V 2.5 அ'ழகான வாழ்க்கைல நமக்கு ஆ'யிரம் நடக்கலாம். புரிவாய் இ'ல்லம்தோறும் வாசல் என்று ஈ'ரடி திருக்குறள் அனைத்தும் சொல்லுதே. உ'ன்னல் முடியாதது எதுவுமில்லை என்று ஊ'ன்றுகோல் நீயும் பெற்றோருமே என்று எ'தனையும் எதிர் கொள் ஏ'ற்றம் தரும் பாதை வகுத்துக் கொள் ஐ'திகம் நமது அறிவியல் ஒ'ழுக்கம் நமது பண்பாடு ஓ'ங்கும் நமது புகழ் ஔ'டதம் உனகக்கு நீயே அஃ'து உனக்கு நிகர் நீயே !!
உயிரெழுத்து V 2.6 அ'த்தை மக ரத்தினமே ஆ'ய்ச்சிசுபுட்ட என் மனச இ'ளிச்சவாயன் நான் சாய்ஞ்சுகிட்டேன் ஈ'ரமனசு உன்கிட்ட உ'திரமும் உன் பெயர் சொல்லுதடி ஊ'ழல் செய்து என்னுள் ஓடுதடி எ'திர்காலம் உன்னோடு ஏ'ழேழு ஜென்மமும் நம்மோடு ஐ'நா சபையும் நம்மை பார்த்து வியக்கட்டும் ஒ'த்துழைத்தால் ஓ'ங்கும் வாழ்க்கை இல்லையேல் ஓ'ய்யும் எனது உயிர் ஔ'டதமாய் நீ இருந்தால் அஃ'து ஓய்யாது எனதுயிர்!! உயிரெழுத்து V 2.7 அ'ழகே உன்ன பார்த்ததும் ஆ'ழமான உன் உருவம் இ'தயத்தில் ஈ'ட்டியாய் சொருகி உ'யிராய் ஊ'ஞ்சலாடுறது எ'ன்னுள்! ஏ'ய் மாமா ஐ' லவ் யுனு ஒ'ரு கண்காட்டு ஓ'ராயிரம் காலம் வாழ ஔ'வையும் உயிர்த்தெழுந்து ஆசி கூறுவாள். அஃ'தே வாழ்கவென்று!. உயிரெழுத்து V 2.8 அ'திகாரப்போக்கு ஆ'ணவசெருக்கு இ'ருமாப்பு ஈ'னபுத்தி உ'ள்வைத்து பேசுவது ஊ'ரை ஏய்ப்பது எ'தற்கும் எகிறுவது ஏ'மாற்றுவது ஐ'யப்படுவது ஒ'ழுக்கமின்மை ஓ'ரம் போவது ஔ'டதமாய் மது எடுப்பது அஃ'து இப்படி இருப்பவர்கள் யாரும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை. உயிரெழுத்து V 2.9 அ'ன்பின் இலக்கணமாய் ஆ'ணவம் நீக்கி வாழ! இ'ணை பிரியா நட்பில் ஈ'கையோடு வாழ! உ'ண்மையை பேசி ஊக்கமாய் வாழ! எ'ண்ணத்தை நிறுத்தி ஏ'ற்றமாய் வாழ! ஐ'யத்தை நீக்கி ஒ'ற்றுமையாய் வாழ! ஓ'ங்கும் தமிழ் ஒள'வை நெறிகளால் வாழ! அஃ'து வாழ! வாழ்த்துகள்!!😀 உயிரெழுத்து V 3.0 அ'ல்லும் பகலும் அயராது ஆ'காயமே துணையாய் கொண்டு இ'ல்லம் மறந்து இல்லத்திற்காக ஈ'டுஇணையற்ற தன் உடலைவருத்தி உ'றக்கம் மறந்து உழைப்பையே ஊ'க்கமாய் சொர்ப்பமே ஊதியமாய் எ'ன்ன நடந்தாலும் வரும் ஏ'ழ்மையை எதிர்த்துப் போராடி ஐ'யமில்லா இவ்வுலகம் சூழல ஒ'ற்றுமையாய் பாடுபடும் அனைவருக்கும் ஓ'ராயிரம் வணக்கங்களை நம் ஒள'வை தேன்தமிழில் சொல்லுவோம் அஃ'தே தொழிலாளர் வாழ்கவென்று😬 உயிரெழுத்து V 3.1 அ'லையின் சொந்தம் சத்தம் ஆ'ழ்கடலின் சொந்தம் சாந்தம் இ'லையின் சொந்தம் விருந்து ஈ'கையின் சொந்தம் இன்பம் உ'ழைப்பின் சொந்தம் வியர்வை ஊ'க்கத்தின் சொந்தம் ஏற்றம் எ'ளிமையின் சொந்தம் அடக்கம் ஏ'ழ்மையின் சொந்தம் இறைவன் ஐ'ம்புலன் சொந்தம் அங்கம் ஒ'ற்றுமை சொந்தம் உரிமை ஓ'லைகள் சொந்தம் அழைப்பு ஒள'வையார் சொந்தம் ஆத்திச்சூடி அஃ'க்கு சொந்தம் சிறப்பு உயிரெழுத்து V 3.2 அ'க்னி நட்சத்திரம் ஆ'ரம்பிச்சாச்சு இ'ன்று முதல்🌞 ஈ'ரநிலங்களை நாடி உ'ள்ளம் மகிழ ஊ'ட்டி கொடைக்கானல்னு போங்க. எ'லுமிச்சை தர்பூசணி கிர்ணி ஏ'ன்னு கேட்காம குடிங்க. ஐ'ஸ்கீரிம் தவிர்த்து மோர் நீர், இளநீர் ஒ'ழுங்க எடுத்துக் கொள்ளுங்க. ஓ'ட்டலையும் காரசாரமான உணவுகளை தவிருங்க. ஒள'டதமே கோடைக்கு இதுதாங்க. அஃ'து என்ஜாய் கோடை காலத்தைங்க🌞 உயிரெழுத்து V 3.3 அ'ரும்பாய் நீ இருந்து ஆ'ழமாய் மொட்டவிழ்ந்து இ'தமாய் இதழ் விரித்து ஈ'ரமன தோட்டத்தின் உள் சென்று ஊ'டுருவி எ'ன் மனம் முழுதும் ஏ'னோ மணம் வீசுகிறாய். ஐ' லவ் கண்மணி ஒ'வ்வொரு நாளும் ஓ'ராயிரம் கவிதை பூக்களால் உன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன்! ஔ'டதமாய் என் வாழ்வில்! அஃ'து என் இதயத்தில் நீ அழகா ? உன்னை சுற்றிய என் கவிதை அழகா ? நம் இருவரையும் பற்றிக்கொண்ட இக்காதல் அழகா ? உயிரெழுத்து V 3.4 அ'ன்பால் உலகை ஆ'ளலாம்! இ'ன்பால் இருகை ஈ'கை செய்யலாம்! உ'ன்பால் நம்பி ஊ'ன்றி வாழலாம்! எ'ன்பால் வெம்பி ஏ'ன்னு கேட்கலாம்! ஐ'ம்புலன்பால் அகன்று ஒ'ழுக்கம் காக்கலாம்! ஓ'தும்பால் பயின்று ஔ'வைமொழி பேசலாம்! அஃ'தே மகிழ்ச்சியாய் வாழ்க்கையை வாழலாம்! உயிரெழுத்து V 3.5 அ'ப்பன் ஆ'த்தா இ'ருக்கையில ஈ'டேது உ'லகத்துல ஊ'ருக்கே நீ தலைவன்'னாலும் எ'ன் மகன்டானு மார்தட்டுவார் தந்தை! ஏ'ன்டா செல்லம்னு கொஞ்சுவா அம்மா! ஐ'யிரண்டு திங்கள் சுமந்தவள் அம்மா! ஒ'ழுக்கம் சொல்லி மீதம் சுமப்பவர் அப்பா! ஓ'ராயிரம் கடவுளை நீ தரிசித்தாலும் பிரச்சனை வரும்போது ஔ'டதமாய் வரும் தெய்வங்கள் நம் அப்பா அம்மா! அஃ'தே வணங்கு தினம் தலை வணங்கு! உயிரெழுத்து V 3.6 அ'திக Facebook likes கொடுப்பவர்களும் ஆ'கானு twitterல follow பண்ணுபவர்களும் இ'ரட்டிக்கும் Whatsapp நண்பர்களும் ஈ'டில்லை உனக்கு எவரும்னு புகழ்பவர்களும் உ'யிரே நீ தான்னு சொல்பவர்களும் ஊ'ர் சுற்றலாம் வாடானு கேட்பவர்களும் எ'வ்வளவு பேர் இப்படி இருந்தாலும் ஏ'தாவது உனக்கு நடந்து நீ ஐ'சியு'ல Admitனு தெரிஞ்சா ஒ'ன்றாய் உடனே சேர்ந்து ஓ'டி வருவது உன் பொண்டாட்டி புள்ள அப்பா அம்மா மட்டுமே அவ்(ஔ)'வளவு தான் இனிமேலாவது மேலே கூறியதை குறைச்சிகிட்டு அஃ'து Familyயோட Time spend பண்ணுங்க Plsss.! உயிரெழுத்து V 3.7 அ'டுத்தவர்களும் நடித்தவர்களும் ஆ'ண்டது போதும் இ'னியாவது விழித்துக்கொள் ஈ'டுஇணை, தமிழா உ'னக்கு இங்கு யாருமில்லை ஊ'ருக்கே அறிவியல் எ'டுத்துரைத்தவர்கள் நாம் ஏ'ட்டில் எழுதியவர்கள் தமிழர்கள்! ஐ'ய்யோ கொடுமை ஒ'டுக்கப்பட்டோம் ஒதுக்கப்பட்டோம் ஓ'டும் இரத்தம் கொதிக்கிறது. ஔ'வை தமிழ் வாக்கு பலிக்க அஃ'து மாறு தமிழா மாற்று தமிழா..! உயிரெழுத்து V 3.8 அ'ன்னையின் அன்பிற்கு ஆ'குமோ இ'ல்லை இருக்குமோ ஈ'டுஇணை உ'லகில்? ஊ'ர் உலகம் அறிய செய்யும் அப்பா எ'னும் ஏ'ணிக்கு ஈடாகுமோ? ஐ'யம் வராமல் வாழ்க்கை பாடத்தை ஒ'வ்வொன்றாய் ஓ'தும் ஆசானுக்கு ஈடாகுமோ? ஔ'(அவ்)வளவுதான் இவ்வுலகின் ஈடில்லா வழிபட வேண்டிய மூன்றும் தெய்வங்கள் தான். அஃ'து இவர்கள் தான் (மாதா+பிதா+குரு=தெய்வம்) உயிரெழுத்து V 3.9 அ'ன்பே என் ஆ'ருயிரே! இ'ன்பமே ஈ'டில்லாசெல்லமே! உ'ன்னை கண்டது முதல் ஊ'மையானது இதயம்! எ'ன்னுள் ஒரு கலக்கம் ஏ'ன் தெரியுமா? ஐ'ந்து அண்ணன்களாமே உனக்கு😴 ஒ'வ்வொருவன் கண்ணிலும் மண் தூவி ஓ'டோடி வந்து உன்னை கைபிடிப்பேன் - நீ ஒள'வை ஆவதற்குள்😝.! அஃ'து 😎😬 உயிரெழுத்து V 4.0 அ'ந்திப்பொழுது ஆ'லமரத்தடியில் இ'ருமனம் ஈ'ர்க்கப்பட்டு உ'யிரும் உள்ளமும் உதிரத்தால் உயிலெழுத ஊ'னமானது வெட்கம்.! எ'ல்லைமீறி கொண்டன ஏ'க்கங்கள்.! ஐ'ம்பூதங்களும் ஒ'ன்றாய் ஓ'சையிட்டுக் கொண்டன.! ஔ'வியமில்லா உலகில் அஃ'து உயிரில் எழுதிய காதல்.! உயிரெழுத்து V 4.1 அ'ன்றொரு நாள் ஆ'ம்பலாய் தெரிந்தாய் நீ! இ'ன்று வரை நான் ஈ'ர்க்கப்பட்டதால் உ'லகெல்லாம் சுற்றி ஊ'னின்றி உறவின்றி எ'ங்கு செல்ல என்றறியாது ஏ'தேனும் மனக்கொளாரென்று ஐ'யம் என்மேல் எனக்கு ? ஒ'ரு மருத்துவரை கண்டேன் ஓ'ங்கி உறைக்காமல் ஔ'வையார் போல் சுருக்கமாய் சொன்னார் இஃது காதல் என்று😬 உயிரெழுத்து V 4.2 அ'ச்சம் என்பது மடமையாடா ஆ'யுதம் செய்வோம்💪🏻 'இ'னிமே நாங்கதான்' 'விவசாயி' ஈ'ரம் 'இது நம்ம பூமி'💪🏻 உ'ழவன் 'நம்ம ஊரு ராசா' ஊ'ருக்கு உழைப்பவன் எ'ங்க முதலாளி💪🏻 ஏ'ர்முனை 'எதிர்காலம்' ஐ'ந்தாம்படை' நம் நாடு💪🏻 ஒ'ரே வானம் ஒரே பூமி 'ஐ லவ் இந்தியா' ஓ'ரம்போ 'துரோகி' 'நாங்க ஏடாகூடம்' ஔ'வையார் 'தமிழ்' 'மொழி' 'தெய்வவாக்கு' அஃ'து 'யாவரும் நலம்'! உயிரெழுத்து V 4.3 அ' தெரியாதவன் அரசியல்வாதி ஆ'ள தெரியாதவன் தலைவன் இ'ளிச்சவாயன் நாம் அனைவருக்கும் ஈ'ன பிறவி உ'ழைப்பாளிக்கும் ஊ'துகின்றான் சங்கை.😉 எ'ல்லாம் செய்வோம் என ஏ'மாற்றி மையை வைத்து ஐ'ந்து விரலால் ஒ'ற்றுமையாக அதிக மையை அள்ளி ஓ'ட்டையை அடைப்பது போல் மூஞ்சில் பூசுகிறார்கள். ஒள'வ்வை சொன்னை ஆத்தி சூடியை அ. ' . 'றினமாய் மெய்ப்பித்தார்கள் அரசியல்வாதிகள்!!! உயிரெழுத்து V 4.4 அ'ன்பை தொடுத்து ஆ'சையில் நினைத்து இ'ன்பத்தில் திளைத்து ஈ'டுஇணை இல்ல உ'யிர் எடுத்து உ'டல் கொடுத்து உ'ருவம் தந்து ஊ'ருக்கு அறிமுகம் செய்து எ'ன் பிள்ளை இவனெ(ளெ)ன்று ஏ'கமனதான பேசும் ஐ'யமில்லா ஒ'ப்பற்ற ஓ'ர் உருவம் ஔ'(அவ்)வளே அஃ'து அம்மா உயிரெழுத்து V 4.5 அ'டித்தாலும் அன்பை பொழிவாள் அம்மா! ஆ'த்திரப்பட்டாலும் சிந்திக்க வைப்பார் அப்பா! இ'ஷ்டமில்லைனாலும் துணை நிற்பான் அண்ணன்! ஈ'டுபோட்டாலும் வீரநடைபோடுவா தங்கை! உ'யிர எடுத்தாலும் உயிரை கொடுப்பா மனைவி! ஊ'ரு சுற்றினா கூட்டிக்கிட்டு சுற்றுவான் நண்பன்! எ'டுத்தற்கெல்லாம் அறிவுரை கூறுவார் தாத்தா! ஏ'ங்க வச்சி ஏங்கத்திலேயே விடுவா காதலி! ஐ'ம்பதிலும் மிடுக்கு குறையமாட்டார் மாப்பிள்ளை! ஒ'த்தாசைனு உபத்திரவம் செய்வார் சில சொந்தங்கள்! ஓ'டி விளையாடி மகிழ வைத்து கூத்தாடுவான் மழலை! ஔ'வை போல பாடி கதைப்பார் வெற்றிலை பாட்டி! அஃ'தே மாறாத உறவுகள்!! உயிரெழுத்து V 4.6 அ'ன்பு உடையவளே, உனது ஆ'சைத்தூரலில் நனைந்ததால் இ'ன்று உன்னில் என்னைத்தொலைத்தேன் ஈ'ட்டு தர உ'ன்னால் மட்டுமே முடியும் ஊ'சலாடுது எ'ன்னுயிர் ஏ'ங்கி தவிக்கிறது மனம் ஐ'ஸ்சா உருகுறேன் தினம் ஒ'ரு முறை முறைத்துப்பார் ஓ'ராயிரம் ஆண்டு வாழும் சூரியன் ஆவேன் ஒள'வை தமிழ் வாழ்த்த..! அஃது காதல் 😍 உயிரெழுத்து V 4.7 அ'ம்மாவின் (பெற்றவளின்) ஆ'சி இருந்தால் இ'மயமும் ஈ'ரடி உயரம் தான் ஏறுவதற்கு! உ'ன்னால் மட்டுமே முடியும் ஊ'ருக்கு உபதேசம் வேண்டாம் எ'ழுந்திடு ஏ'ய்ப்போரை எதிர்த்திடு ஐ' லவ் Myself னு ஒ'ழுக்கமாய் இணக்கமாய் ஓ'டி உழைத்திடு ஔ'(அவ்) வானம் அஃ'தே வாழ்த்தும் நீ வென்றிட...! உயிரெழுத்து V 4.8 அ'டே, பிறப்பால் ஆண்மகன் என்ற திமிர் கொண்டு ஆ'திக்கம் அடக்குமுறை செய்யாதே. இ'யலாதவள் அல்ல இரும்பை கரையவைப்பவள். தவறினால் ஈ'யை போல நசுக்கியும் போடுபவள். பாசம்னா உ'யிராய் இருப்பவள். வேசம்னா தூசியாய் ஊ'தி தள்ளுபவள். எள்ளி நகையாட நினைத்தால் எ'ரிமலையாய் வெடிப்பவள். ஏ'னென்று கேட்காமல் குடும்பத்திற்காக பாடுபடுபவள். ஐ'யோ கொடுமை போதும் ஒ'டுக்கப்பட்டது போதும். பிறப்பால் ஆணும் பெண்ணும் சமமே! ஓ'டும் வாழ்க்கையில் ஆண் இல்லாது பெண்ணில்லை. பெண் இல்லாது வாழ்க்கையே இல்லை. ஔ'வை பாரதி பல சான்றோர் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். அஃ'து இப்படிக்கு 'பெண்'. உயிரெழுத்து V 4.9 (என்).. அ'ழகிய தமிழ்மகள்(ன்) ஆ'ன்மா இ'ருப்பிடம் ஈ'டுபாடு உ'லகம் ஊ'ன்றுகோல் எ'ழுத்து(தலை) ஏ'ணிப்படி ஐ'ம்பூதம் ஒ'ரே கடவுள் ஓ'சைஒலி ஔ'டதம் அஃ'து 'தாய/தந்தை'! உயிரெழுத்து V 5.0 அ'ன்பினால் எதையும் வெல்லும் ஆற்றல் வேண்டும்! ஆ'ணவம் இல்லா வாழும் ஆன்மா வேண்டும்! இ'ரப்பவர் இல்லாத உலகம் வேண்டும்! ஈ'ன்ற பெருமையை காக்கும் எண்ணம் வேண்டும்! உ'ண்மையாய் நேசிக்கும் உறவு வேண்டும்' ஊ'ரைப்பற்றி சிந்திக்கும் உள்ளம் வேண்டும்! எ'ளிமையான வாழ்வும் வலிமையான சிந்தை என்றும் வேண்டும்! ஏ'ற்றம் கண்டு அதை கொடுக்கும் ஏணிப்படியாய் வாழ வேண்டும்! ஐ'யம் தெளிய தேடும் தெளிவு வேண்டும்! ஒ'ன்றாயிரு என்பவனை ஒற்றுமை காண சொல்பவனை உருகித் தொழ வேண்டும்! ஓ'தும்போதே உயிர் பிரியும் உவகை வேண்டும்! ஔ'வையின் தமிழ்போல் நம் புகழ் பரவ வேண்டும்! அஃ'து வேண்டாம் ஆயுதம் அமைதியில் உறைவோம்!!! உயிரெழுத்து V 5.1 அ'ன்புள்ளவளே, காதலால் ஆ'ட்டி படைத்தவளே!. காதலெனும் இ'ன்ப வலியை ஈ'ன்றவளே என்னிடம் காதலில்.! உ'ன் மனம் கிடைக்காதா என ஊ'ரஊராய் உன் பின்னல் சுற்றியவன். எ'ங்கும் உன் நினைவால் ஏ'ங்குகிற ஏழை நான். ஐ'யம் ஏன் ஒ'ற்றுமையாய் வாழ என்னோடு ஓ'டி வா காதலுடன். ஔ'வையார் ஆனாலும் காதலிப்பேன் உன்னை!. அஃ'து காதலுடன். உயிரெழுத்து V 5.2 அ'ன்பால் வரும் காதல் ! ஆ'ர்வக் கோளாரும் காதல் ! இ'தயத்துடிப்பாய் இருப்பதும் காதல் ! ஈ'ட்டியாய் காயப்படுத்தும் காதல் ! உ'லகை ஆட்டுவிப்பதும் காதல் ! ஊ'னை பிழிவதும் காதல் ! எ'ன்னை உன்னை பதம் பார்க்கும் காதல் ! ஏ'ங்கி தவிப்பில் ஆழ்த்துவதும் காதல் ! ஐ'யம் கொடுப்பதும் தீர்ப்பதும் காதல் ! ஒ'ன்றாய் (மதங்களை) இணைய வைப்பதும் காதல் ! ஓ'யாமல் உயிரில் நினைக்க வைப்பதும் காதல் ! அஃது மறப்போம் மோதல் ! ஆகட்டும் ஜாதிகள் சாதல் ! அதற்கு செய்வோம் காதல் ! 😍😍😍 உயிரெழுத்து V 5.3 அ'டயே முடியல ஆ'ண்ட்ராய்டு போன்ல சார்ஜ் போடல இ'ட்லி மாவு இன்னும் அரைக்கல ஈ'ஸியா மின்சாரத்தை நிறுத்திட்டியே உ'ங்கல நம்பி துணி வேற ஊ'ருது வாசிங் மெசின்ல எ'னக்கு என்ன தோனுதுனா ஏ'தேதோ இலவசமா கொடுக்கறதுக்கு ஐ'யா ஒ'ரு இன்வெர்டர் ஓ'டுற மாதிரி கொடுத்திடுங்க. ஔ'வ்ஔவ் அஃ'து மக்களின் குமுறல்! உயிரெழுத்து V 5.4 அ'ன்பில்லாதார் உறவு ஆனந்தமில்லாதது.! ஆ'சைகளை அடக்கி ஆள்பவன் அறிஞன்.! இ'ன்பம் என்பது இருபாலருக்கும் பொது.! ஈ'டில்லா பாசம் ஈன்ற தாயிடம் மட்டுமே.! உ'றவுகளை பேணாதவன் அனாதையாவான்.! ஊ'ர்க்கூடி விழா எடு ஒற்றுமை ஓங்கும்.! எ'ங்கும் நிறைந்திருப்பவன் இறைவன் என்பவனே.! ஏ'ற்றி விட்ட ஏணியை எட்டி உதையாதே.! ஐ'யம் உன் எதிரிக்கு சாதகமாகிவிடும்.! ஒ'ப்பற்ற ஞானிக்கும் உயிர் பிரியும் நேரமுண்டு.! ஓ'லைக்குடிசையும் ஒருநாள் உயர்வடையும்.! ஔ'தாரியம் மிக்கவன் போற்றபடுவான்.! ஃ கன்னாவை அறியாத தமிழனும் உண்டோ? தமிழா பாரம்பரியம் போற்று.! உயிரெழுத்து V 5.5 அ'கிலத்தில் ஆ'யிரம் பூக்கள் இ'ருக்கலாம்(பூக்கலாம்) ஈ'டு செய்ய முடியுமா உ'னது சிரிப்பை. அன்பே, ஊ'னையே உருக்கும் பார்த்தால் எ'ன்ன வியப்பு இதில் ஏ'ன் பலருக்கு ஐ'யம்.? என்னவள் ஒ'ருமுறை சிரித்துப் பாருங்கள் ஓ'ராயிரம் பூக்களும் சென்றுவிடும் ஔ'(அவ்)வளிடம் கற்றுக்கொண்டு மீண்டு வர.! அஃ'து 😀😃😄😁😆😬😍 உயிரெழுத்து V 5.6 அ'ஞ்சி வாழ தேவையில்லை ஆ'றறிவை பயன்படுத்து! இ'ரக்கப் பட தேவையில்லை ஈ'டுகட்டு தானம் கொடுத்து! உ'தாரணம் காட்ட தேவையில்லை ஊ'ருக்கு நீ உதாரணமாயிரு! எ'ன்னடானு யோசிக்க தேவையில்லை ஏ'ன்னு கேள்வி கேளு சாரு! ஐ'ம்பொன் கோயில்கள் தேவையில்லை ஒ'ற்றுமை நட்பை பேணு! ஓ'ராயிரம் மந்திரம் தேவையில்லை ஔ'வை ஆத்திசூடி திருக்குறள் போதும்! அஃ'து வாழ்க்கை சிறக்கும் பாரு!!! உயிரெழுத்து V 5.7 அனைத்து வகை கணிதமும் கற்றுதருபவர் Mathematics Teacher... ஆராய்ச்சிகளை கற்றுதருபவர் Science Teacher..! இஸ்லாமிய நல்வழிகளை கற்றுதருபவர் Arabic / Urdhu Teacher... ஈஸியாக ஆங்கிலம் பேச கற்றுதருபவர் English Teacher..! உடலுக்கு பயிற்சியை கற்றுதருபவர் Sports Teacher... ஊர்களின் சுற்றுச்சூழலை கற்றுதருபவர் Environment Teacher..! எறும்பு முதல் யானை வரை ஆய்வுகளை செய்ய கற்றுதருபவர் Zoology Teacher... ஏழாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை வரலாறுகளை கற்றுதருபவர் History Teacher..! ஐந்தாண்டு திட்டம் பத்தாண்டு திட்டங்களை கற்றுதருபவர் Statatics Teacher..! ஒவ்வொரு நாளின் வணித்தின் நிலவரத்தை கற்றுதருபவர் Commerce Teacher... ஒவியங்களை வரைய கற்றுதருபவர் Drawing Teacher... ஔவையார், திருவள்ளுவர் போன்றவர்கள் சொன்னதை கற்றுதருபவர் Tamil Teacher..! அஃது நம் முன்னேற்றத்தின் வழிகாட்டி Teacher..! உயிரெழுத்து V 5.8 அ'கிலாவ காதலிச்சா அகிலத்தில் நீ இருக்கமாட்ட ஆயிஷாவ காதலிச்சா ஆயிடுவ நீ லூஸா இ'லியானாவ காதலிச்சா இருப்ப நீ இளிச்சவாயனா ஈ'ஸ்வரிய காதலிச்சா ஈடில்லா பணத்தை நீ இழப்ப உ'த்ராவ காதலிச்சா உருப்படாம நீ போவ ஊ'ர்வசிய காதலிச்சா ஊர்சுத்தியே நீ தேய்வ எ'மிய காதலிச்சா எமனிடம் நீ போராடுவ ஏ'ஞ்சலினாவ காதலிச்சா ஏங்கியே நீ சாவ ஐ'ஸ்வர்யாவ காதலிச்சா ஐசா நீ கரைஞ்சிடுவ ஒய்யாரிய காதலிச்சா ஒடுங்கியே நீ மதிப்பிழப்ப ஓவியாவ காதலிச்சா ஓய்வில்லா நீ காத்துகிடப்ப ஔவைய காதலிச்சா வயசாகியும் நீ சும்மயிருப்ப அஃது இந்த பொழப்புக்கு கட்டிக்க போற/கட்டின பொண்ணு மனைவிய காதலிங்க வாழ்க்கை நல்லாயிருக்கும்!😝 (அனைத்தும் கற்பனையே) உயிரெழுத்து V 5.9 அனைத்தும் கணிதமே கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை! ஆராய்ந்து பார் தெரியும் அறிவியல்! இலக்கணம் அறிந்து நற்சொல் பல பேசு! ஈட்டிய செல்வத்தை மிஞ்சும் உனது தர்மம்! உடலை போற்று உலகின் தலைசிறந்த மருத்துவர்! ஊருக்கு உற்ற நண்பன் சுற்றுச்சூழலே! எறும்பும் சரி யானையும் சரி யாரையும் மதி! ஏழ்மையில் இருந்தாலும் மானத்தோடு இரு! ஐம்புலன்களை அடக்கத் தெரிந்தவன் மெய்ஞானி! ஒவ்வொரு நாளையும் தனதாக்குபவன் அறிவாளி! ஓய்வில் இருந்தாலும் சிந்தை இழக்காதே! ஔவையார் வள்ளுவன் சொல் படி (நட)! அஃது வாழ்க்கை சிறக்கும்! உயிரெழுத்து V 6.0 (முற்றும்) அ'ன்புடன் வாழ ஆசைப்படு அடாவடி வேண்டாம்! ஆ'சையுடன் வாழ ஆசைப்படு பேராசை வேண்டாம்! இ'ருப்பதுடன் வாழ ஆசைப்படு இல்லாததற்கு ஏங்க வேண்டாம்! ஈ'டுபாட்டுடன் வாழ ஆசைப்படு ஈகோ வேண்டாம்! உ'றவுகளுடன் வாழ ஆசைப்படு உபத்திரவம் வேண்டாம்! ஊ'ருடன் வாழ ஆசைப்படு ஊழல் வேண்டாம்! எ'ளிமையாய் வாழ ஆசைப்படு எகத்தாளம் வேண்டாம்! ஏ'ணியாய் வாழ ஆசைப்படு ஏளனம் வேண்டாம்! ஐ'ஸ்வர்யத்துடன் வாழ ஆசைப்படு ஐயம் வீணாக வேண்டாம்! ஒ'ழுக்கத்துடன் வாழ ஆசைப்படு ஒப்பிடுதல் வேண்டாம்! ஓ'ங்கி வாழ ஆசைப்படு ஓய்வு செயலில் வேண்டாம்! ஔ'வை நெறி வாழ ஆசைப்படு ஔவியம் வேண்டாம்! அஃ'து வாழ ஆசைப்படு பொறாமை வேண்டாம்!!
No comments:
Post a Comment