Saturday, July 13, 2019

என்ன சம்மதமா?

அன்பே..😍

நீ பார்த்தால்
நான் பறந்து போகின்றேன்.
நீ அழுதால்
நான் நனைந்து போகின்றேன்.
நீ அசைந்தால்
நான் அசந்து போகின்றேன்.
நீ சிரித்தால்
நான் சிதறி போகின்றேன்.
நீ பேசினால்
நான் வியந்து போகின்றேன்.
நீ முறைத்தால்
நான் உறைந்து போகின்றேன்.
நீ குழைந்தால்
நான் உருகி போகின்றேன்.
நீ நடந்தால்
நான் தொலைந்து போகின்றேன்.

அன்பே என் காதலை
நீ மறுத்தால்
நான் உன்னில் மரித்து போய்விடுவேன்.

அன்பே என் காதலை
நீ ஏற்றால்
நான் கண்ணுக்கு இமையாக காலமும் காத்துக்கொள்வேன்.

என்ன சம்மதமா?

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...