விடியற்காலை மணி நான்கு
சேவல் கூவி எழுப்ப
கோழி கொக்கரிக்க
குயிலின் மயிலின் சத்தம் இரைக்க
உடலை முறித்து கொண்டு எழுவோம்
காத்திருந்த உறவுகள் அழைக்கும்
ஆம் மாடு என்கிற மாமனும் ஆடு என்கிற அண்ணனும் நாய் என்கிற தம்பியும் தான் அது
குடும்பஅட்டையில் இல்லை ஆனாலும் குடும்பத்தில் பதிந்த உறவுகள்
அவைகளை கவனித்து விட்டு
காலைக்கடனை கவனிக்க ஆயத்தம் ஆவோம்
பனியும் வாடை காற்றும்
உடலை பதம்பார்க்க
கருவேலம் பல்லுக்கு இதம் கூட்ட
இயற்கை உரத்தை மண் ஏற்க காலை கடனை முடிப்போம்
நீரோடும் ஓடை
ஓடையை ஒட்டிய சாலை
சாலையை ஒட்டிய பனைமரங்கள்
பனைமரங்களில் விளைந்த பனங்காயும்
பங்குபோட்டு உண்றோம்
அதில் ஏறி சறுக்கி விளையாடினோம்
அதன் மட்டையில் வண்டி ஓட்டினோம்
மிதிவண்டி டயரை வண்டியாக ஓட்டியதும்
குரங்கு பார் போட்டு சைக்கிள் பழகினோம்
கிட்டிப்புள்ளு பம்பரம் கிச்சுகிச்சு கபடி கபடி கண்ணாமூச்சி நீச்சல் போட்டி என பல உடற்பயிற்சிகளை செய்தோம்
நீராகாரம் கூழ் கம்பங்களி சாப்பிட்டு மகிழ்ந்தோம்
சிறிய தென்னங்கீற்று வீடுதான்
உள்ளே குனிந்துதான் போகவேண்டும்
ஆனால் பாசம் தலைநிமிர செய்யும்.
சிறிய காயம் ஏற்பட்டாலும் ஊரே நலம் விசாரிக்கும்.
வீட்ட சுத்தி காவற்படை போல வாழை தென்னை வேம்பு என மரங்க நிற்கும்.
யாரு வந்தாலும் உடனே உட்கார வீட்டு முன் திண்ணை
அதில் படுத்து நிலா கண்டதும் பல்லாங்குழி ஆடியதும் அற்புதமாய் இருந்தது.
ஆயிரம் சண்டை வந்தாலும் ஊருக்கு என்றால் ஒன்றாய் நிற்கும் கூட்டம்.
அதிலும் ஊர் திருவிழா என்றால் அங்கு
விற்ற பொம்மைகள்
அதைகேட்டு அழுத நிமிடங்கள்
சுற்றிய ராட்டின சுற்றல்கள்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள்.
எண்ணெய் ஒழுகும் தலை
நெற்றியில் சின்னதாய் திருநீர்
துவைக்க மறந்த மேலாடை
இடுப்பில் நிற்காத கால்சட்டை
இப்படி தான் பள்ளிக்கு செல்வோம்.
ஆசிரியர்க்கு மரியாதை அப்பாவுக்கு பயம் கலந்த பாசம்
அன்னை என்றால் அன்புனு திரிஞ்சோம்.
நண்பர்களுடன் சேர்ந்து
உலுக்கி சாப்பிட்ட நாகர்ப்பழமும்
சுட்டு சாப்பிட்ட புளியங்காயும்
திருடி சாப்பிட கொய்யாபழமும்
அடித்து உண்ட விளாங்காயும்
பறித்து சாப்பிட்ட மாங்காயும்
பிடுங்கிய சாப்பிட்ட கொடுக்காய்ப்புளியும்
எச்சில் ஊற சாப்பிட்ட நெல்லியும்
தாத்தா சீவி கொடுத்த இளநீறும்
ஆத்தா உருட்டிக் கொடுத்த உருண்டசோறும்
அனைவரும்
பத்து பைசா மிட்டாய் பார்த்து
எச்சில் விழுங்கிய நேரமது
இரண்டு ரூபாய் நோட்டில் டூரிங் தியேட்டரில் படம் பார்த்த காலமது
இன்றும் நெஞ்சில் இனிக்கிறது..!
ஆத்தோரம் தென்னன்தோப்பு
அழகழகாய் அணிவகுக்க
கொத்துகொத்தாய் தேங்காயும் இளநீரும் நீந்திப்பழகிய ஆறும்
அதில் பிடித்த மீனும் ஆக்கி திண்ண கூட்டாஞ்சோறும் என்னானு சொல்ல...
நிலமெல்லாம் பசுமைபோர்த்தி
எங்கெங்கும் வயல்வாசம்
களையெடுக்கும் பெண்களங்கே
பாடியிருக்கும் நாட்டுப்பாட்டும் பிள்ளை அழுதா தாலாட்டும்
கிழவன் செத்தா ஒப்பாரியும்னு கேட்டு நின்னோம்.
சுட்டெரிக்கும் வெயிலுதான் ஆனா
இதமான கிராமத்து காத்தும் சுத்தமான சுவாசமும் இரைச்சல் அற்ற வாழுவும்
சுத்தமான மனங்களும் இருக்கும்.
ஆனால்
இன்று ஓசியில் கிடைத்த காற்றுக்கும்
ஈசியாக கிடைத்த நீருக்கும்
காசு கொடுத்து வாழ நரகமான வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்கோம்...

No comments:
Post a Comment