Saturday, June 29, 2019

சுழற்சி

நீர் இல்லாது நிலம் இருக்குமா
விளைநிலம் இல்லாது விவசாயம் இருக்குமா
உழவு இல்லாது உணவு இருக்குமா
உணவு இல்லாது உயிர்கள் இருக்குமா
விதைகள் இல்லாது விருட்சங்கள் இருக்குமா
ஆணிவேர் இல்லாது ஆலமரம் இருக்குமா
மலர்கள் இல்லாது மணம் இருக்குமா
காய்கள் இல்லாது கனிகள் இருக்குமா
பழங்கள் இல்லாது பசி இருக்குமா
உணவுவேட்கை இல்லாது உழைப்பு இருக்குமா
உழைப்பு இல்லாது உயர்வாழ்க்கை இருக்குமா
உயர்வு இல்லாது வான் இருக்குமா
வான் இல்லாது நீர் இருக்குமா

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...