என்னவளை படத்தில் பார்த்த பின்
படித்தும் பாடம் ஏறவில்லை
காரணம் மனப்பாடமாய் அவள்
நாளை கல்லுரியில் தேர்வு வேறு
ஆனால் அவளிடம் தேர்வாகி விட்டேன் இன்று என்பதால்
இனி என்ன நடந்தால் என்ன..
விடிந்தது..
காலை என்பதாலும் என்னுள்
காதல் என்பதாலும்
கல்லூரிக்கு சென்றேன்
நேரம் வந்தது தேர்விற்கு
கேள்விதாள் என்னிடம்
அறியாதவர்கள் பாவம்
பதில் இருப்பதோ அவளிடம் என்று
கேள்வியை படித்தேன் நினைத்தேன்
விடை எழுத துவங்கினேன்
"பட்டாம்பூச்சி இமைகள்
மீன்கொண்ட கண்கள்
எடுப்பான நாசி
உடுப்பான இதழ்
பிடிப்பான கன்னம்
தடிப்பான தாடை
துடிப்பான இதயம்
இடிப்பான இடை
நடிப்பான நடை
..................
.................."
கேள்வி இதுதான்
"கோலார் தங்கச்சுரங்கத்தை பற்றி குறிப்பு எழுதுக" என்று
பாரதியை போல் மிடுக்காய் விடைத்தாளை
கொடுத்து விட்டு
தேர்வறையில் இருந்து விடை பெற்றேன்.
நேரம் முடிந்து மணி அடித்தார்கள்
அவன் காதில் காதல் மணியாய் ஒலித்தது
பாடத்திற்கு அது சங்கு என்பதை அறியாதவனாய் சிரித்தபடி சென்றான்.
Paaaaaaaaaaaaaaaaahhhhhhhhh beautiful sir poem story vera lvl...Ungaluku nigar yarum illa sir pinringa
ReplyDelete