Monday, October 29, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - என்னவள்

நவீன திருக்குறள்
அதிகாரம் - என்னவள்
****************************

1. தொட்டாலும் விரிகிறது தொட்டாற் சிணுங்கி
காரணம் தொடுவது என்னவள்.

2. மகிழ்ச்சியில் குதித்து ஓடிவரும் அலைகள்
கடற்கரையில் நிற்கிறாள் என்னவள்.

3. அணிகலனா அறிவிப்பு மணியா காட்டிக்கொடுக்கும்
என்னவள் கால் கொலுசு.

4. காதலில்  கண்ணாமூச்சு தேடித்திரிகிறேன் எனக்குள்ளேயே
ஒளிந்து சிரிக்கிறாள் என்னவள். 

5. அழகான எதையும் கண்ணில் காட்டாதீர்கள் நினைவில்
சட்டென வருகிறாள் என்னவள்.

6. பூவிலிருந்து இதழ்களல்ல இதழ்களிலிருந்து உதிரும்
பூக்கள் என்னவளின் புன்னகை.

7. கவிதை எழுதினேன் என்னவளின் கண்ணத்தில்
அழகான ஆழமானதொரு முத்தம்.

8. கண்ணாடியில் அலங்காரம் செய்கிறாள் என்னவள்
அழகுற பொறாமையில் கண்ணாடி.

9. விர்ரென்று பாய்கிறது நரம்புகளில் மின்சாரம்
என்னவளே கண்களை மூடடி.

10. இரவில் நிலவிற்கு குழப்பம் போட்டிக்கு 
மொட்டை மாடியில் என்னவள்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...