அன்பே என்னுள் உலவு
நீதானே என்மனக் களவு
நீதானே என்மனக் களவு
ஆசைக்கு இல்லையே அளவு
நீங்குமே நம்முள் பிளவு
எண்ணிலடங்கா உன் அழகை
வார்த்தையில் வரைய ஆசையோ ஆசை.
சரணம்
**********
கூந்தலோடு விளையாட கைவிரலாக ஆசை.
கூந்தலோடு விளையாட கைவிரலாக ஆசை.
இதழோடு வழிந்தோட தேனாக ஆசை.
விழியோடு வளைந்தாட
புருவமாக ஆசை.
முத்துப்பல் சிரிப்பில் முத்துக்களாக ஆசை.
இடையோடு இசைந்தாட குழலாக ஆசை.
உன்னோடு கலந்தே நான் நீயாக ஆசை ஆசை.
சரணம்
**********
மார்போடு கோலமிடும் அணிகலனாக ஆசை.
மணிக்கட்டில் முத்தமிடும் கைவளையலாக ஆசை.
மார்போடு கோலமிடும் அணிகலனாக ஆசை.
மணிக்கட்டில் முத்தமிடும் கைவளையலாக ஆசை.
காதோடு கவிபாடும் கவிஞனாக ஆசை.
மேனி உறவாடும் நூலாடையாக ஆசை.
காலோடு இசையெழுப்பும் கால்கொலுசாக ஆசை.
உயிரோடு உயிராக நரம்பும் சதையாக ஆசை ஆசை.
காலோடு இசையெழுப்பும் கால்கொலுசாக ஆசை.
உயிரோடு உயிராக நரம்பும் சதையாக ஆசை ஆசை.
No comments:
Post a Comment