காதல் ரொமன்ஸ் பாடல்#15
****************************** ***
படவா செல்ல படவா பாடவா காதலை பாடவா.
தேடவா உன்னை தேடவா சூடவா நெஞ்சில் சூடவா.
தொடவா உயிர் வரை தொடவா.
கூடவா இறுதி வரை கூடவா.
சரணம்
**********
உன்னை நான் போர்வையாக மாற்றவா மாற்றி என் மீது போர்த்தவா.
மணக்கும் மண மாலையாக கோர்க்கவா அதில் என் ஜீவனை சேர்க்கவா.
கன்னம் கன்னம் தொடவா தொடவா
முத்தம் நித்தம் தரவா தரவா.
வாழ்வில் நீங்காத உறவா சொர்க்கம் நம்மில் பெறவா
நீயே கிடைத்த வாழ்வின் வரம் வா வா
சரணம்
***********
காலை நான் கண்விழித்தால் நினைவா அன்பே நான் நீயே நிஜம்வா.
மாலை கண் உறக்கத்தில் கனவா கனவில் நான் தேடும் கனவா.
வாழ்க்கை ஓட்டத்தின் வரவா வரவா
வலிகள் வாட்டத்தின் செலவா செலவா
என்னில் இடபாகம் இடவா
ஒன்றாய் நாம் கலந்திடவா
நீயே கிடைத்த வாழ்வின் வரம் வா வா
No comments:
Post a Comment