காதல் பாடல்#12
நாம் இணைந்த தளம் இணையத்தளம் அதுவே காதல்களம்.
நாம் இனிதாய் வாழ வேண்டிடும்தளம் நமக்கு இணையதளம்.
இனைவோம் இணையத்தில்
இனிக்கும் இதயத்தில்
காதல் செய்வோம் கண்ணிய காதல்
காதல் புரிவோம் கணினிக் காதல்.
சரணம்
-------------
காதல் உணர்வுகளை அன்பே மின் சமிக்கையில் பரிமாறுவோம்.
காதல் உள்ளம் பரிமாற கூகுள் பயர் ஃபாக்ஸில் அரங்கேற்றுவோம்.
டிஜிட்டல் காற்றில் காதல் ஆக்ஸிஜனை சுவாசிப்போம்.
டிஜிட்டல் டேட்டாவில் காதல் தீராது பூஜிப்போம்.
மின்னஞ்சலில் திரு மன செய்திகளை அனுப்புவோம்
பேஸ்புக்கில் சிறுக சிறுக லைக்குகளை பெறுவோம் வாட்ஸ்சப்பில் காதல் ஸ்டேட்டசை பதிவோம்.
காதல் செய்வோம் கண்ணிய காதல்
காதல் புரிவோம் கணினிக் காதல்.
சரணம்
********
இணைய உலாவியில் அன்பே இதயம் தனை உலாவவிடுவோம்.
மென்பொருள் குறியீடுகளில் நம் மனங்களை புரிந்திடுவோம்.
முகத்தோற்றத்தில் மயங்கி முளைத்த காதலல்ல.
அகத்தோட்டத்தில் உள்ளப்பூக்களாக மலர்ந்த உயர்ந்த காதலிது.
காதலில் நமக்கு கைபேசியே காவலன் செய்யும் கால்களே நமக்கு தூதுவன் பேசும் வார்த்தைகளே ஆகும் காதல்டேட்டா.
காதல் செய்வோம் கண்ணிய காதல்
காதல் புரிவோம் கணினிக் காதல்.
No comments:
Post a Comment