Saturday, August 31, 2019

நவீன திருக்குறள் - அதிகாரம் - வாழ்க்கை தத்துவம்

நவீன திருக்குறள்
அதிகாரம் - வாழ்க்கை தத்துவம்
+++++++++++++++++++++++++++++

வாழ்வின் போது பதிசதியை அறியாதாரும்
நோய்வாய்ப்பட சதியை அறிவார்.

உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால்
உறங்கும் வயதில் உழைக்கநேரும்.

ஆடம்பரமாக வாழ நினைப்பது வாழ்க்கையல்ல
ஆரோக்கியமாக வாழ்வதே வாழ்க்கை.

வசதிக்காக வானத்தில் கூட பயணிக்கலாம்
வாழ்க்கைக்காக நடந்தாலே போதும்.

தன்னிடமுள்ள  தவறை மறைக்க வக்கீலாவான் 
பிறருக்கோ நீதிபதியாக நடப்பான்.

நடப்பவை எல்லாம் நம்மாலே மறந்தும்
நடந்ததை வெளியில் தேடாதே. 

சிறுவயது மகனுழைத்தால் தந்தை சரியோ
சரியில்லை பெருவயதில் அவருழைத்தால்.

கற்பிக்கப்பவில்லை கில்வி சாலையில் எங்கும்
கற்றுக்கொள்கிறோம் வாழ்க்கை சாலையில்.

உயரத்தில் விலைவாசி பாதாளத்தில் சம்பளம்
நகருமா நடுத்தர வாழ்க்கை.

 கஷ்டமும் கணிதமும் வாழ்க்கையில் ஒன்றுதான்
வாழ்க்கையின் இறுதிவரை வரும்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...