**********************
பேசினால் பரபரப்பு
திட்டினால் குற்றம்
அடித்தால் தண்டனை
கலக்கத்தில் இன்றைய ஆசான்கள்.
**********************
முட்களுக்கு நடுவில் ரோஜா
தோல்விகளுக்கு நடுவில் வெற்றி.
**********************
டெக்னாலஜியின் உச்சம்
சிலந்தியின் வலை!
**********************
இனித்தது
கரும்புக்குள்ளிருக்கும்
உழவனின் வியர்வை.
**********************
மழை காலங்களில் பூமியை
படம்பிடிக்கிறது மின்னல்
இயற்கை நிழற்படகருவி.
"பேசினால் பரபரப்பு
ReplyDeleteதிட்டினால் குற்றம்
அடித்தால் தண்டனை
கலக்கத்தில் இன்றைய ஆசான்கள்" -🙄🙄🤔😢