Wednesday, April 10, 2019

ஹைக்கூ 100 [31-40]

கொடுத்து வைத்த குடும்பம்
அழுகையற்ற வாழ்க்கை
டிவியில்லா வீடு.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சரியா? இல்லை என்பான்
வேண்டாம்? வேண்டும் என்பான்
அந்த நாலு பேர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சீரான பாதை
கரடுமுரடான பயணம்
நகர வாழ்க்கை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இருப்பதை நினைக்க நேரமில்லை
இல்லாததை நினைத்தே வருத்தம்
இருட்டும் வாழ்க்கை
 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாழ்க்கை புத்தகம்
இரண்டே வார்த்தைகள்
பிறப்பும் இறப்பும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கூட்டு குடும்பம் வாழ்க்கை
நான்கு திசைகளில் நால்வர் 
கைகளில் கைபேசி.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நேரம் தவறினால்
நேரம் தவறிதான் நடக்கும்
வாழ்க்கை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இனிப்பும் காரமும் நாவில் சில நொடிகள் நிற்கும்
துன்பமும் இன்பமும் வாழ்வில் அதுபோலத்தான்...!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நேற்று மாதா பிதா குரு தெய்வம்
இன்று செலஃபீ FB Tweet Instagram
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இயல்பாய் இரு மனிதா
இனிக்கும் இருக்கும் வாழ்க்கை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...