Sunday, April 21, 2019

ஹைக்கூ 100 [91-100]


**********************
வெயில் காலம் 
குளிரூட்டப்பட்ட அறை
சுடுகிறது மின்கட்டணம்.
**********************
யாரிடம் விசா வாங்கியிருக்கும்?
அங்கும் இங்குமாய் போய் வரும் 
வெள்ளை புறா. 
**********************
பேனா கண்ணீர் துளி சிந்துகிறது
காகிதத்தில் ஹைக்கூவாய் விழுகிறது.!
**********************
ஆபாசம் வேண்டாம் என்பதை நிலைநாட்ட
ஆபாசமாய் ஒரு படம் எடுத்தான்!
**********************
நாளொரு மேடை 
பொழுதொரு நடிப்பு
அரசியல்வாதி 
**********************
மனிதா என் வெளியே சுற்றி குப்பை 
உள்ளை ஒன்றுமில்லை
உனக்கு? கேட்கும் குப்பைதொட்டி!
**********************
முன்னேற்றம்தான் பின்னோக்கி
சென்றாலும் கயிறு திரிப்பவன்.
**********************
வருடாவருடம் புதுவருட காலண்டர்
பழைய ஆணிமட்டும் அப்படியே. 
**********************
கன்றுக்குட்டிக்கு பால் 
தேனிக்களுக்கு தேன்
கோழிகளுக்கு முட்டை
திருடுகிறான் மனிதன்
சுரண்டலின் உச்சம். !
**********************
மரம் வெட்ட கையில் கோடாலி
அதன் கைப்பிடியோ மரம்.!
**********************

1 comment:

  1. "மரம் வெட்ட கையில் கோடாலி
    அதன் கைப்பிடியோ மரம்.!"Excellent sir👌

    ReplyDelete

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...