Sunday, April 21, 2019

ஹைக்கூ 100 [81-90]


**********************
விதவிதமான படையல்கள் சாமிக்கு.
மூடநம்பிக்கையின் முதிர்ச்சி ஆசாமிக்கு.
**********************
பூனையின் வேட்டைக்கு தடங்கல்
ஆசாமி குறுக்கே சென்றதால்.
**********************
ஆயிரம் கவலைகள் பலியிடப்படுகின்றன
குழந்தையின் சிரிப்பில்.
**********************
பூமிகல் சாமியானது
பூசாரி மகிழ்ச்சியில்.!
**********************
புதைந்து போன மனங்களால்
சிதைந்து போகும் மனிதர்கள்!
**********************
பண்டிகை காலங்களின் கொள்ளையர்கள்
தள்ளுபடி அறிவிக்கும் நிறுவனங்கள்.
**********************
இணைந்து இருந்தாலும்
பிரிந்து கிடக்கின்றோம் 
தொலைக்காட்சியின் சாதனை.!
**********************
இன்று உடலில் விடும் வியர்வை துளிகள்
நாளை கழுத்தில் விழும் முத்து மாலைகள்.
**********************
அன்று மனம் பாத்தது
இன்று பணம் பாதுகாக்கிறது
காதல்.
**********************
அதிகார இலஞ்சம்
அதிநவீன பிச்சை!

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...