Sunday, April 21, 2019

ஹைக்கூ 100 [71-75]

பிறரிடம் எதிர்பார்ப்பதை 
பிறருக்கும் வழங்குங்கள் 
மதிப்பு மரியாதை !
**********************
படித்ததில்லை ஆம் ஆனால் வரைகிறான் 
மார்டன்ஆர்ட் தன் விரல்களால்
கைநாட்டு 
**********************
நாளை மாட்டேன் என்று இன்றும்
மறுநாள் மாட்டேன் என்று நாளையும்
கடத்துவான் குடிகாரன்.
**********************
நெய்ல் ஆம்ஸ்ட்ராங்கா முதலில் நிலவை தொட முயன்றது?
நெடு நெடு பனைமரம் கேட்கிறது.!?
**********************
தென்மொழி தொன்மொழி
முதன்மொழி முதன்மைமொழி
தாய்மொழி தாயானமொழி
"தமிழ்மொழி"

1 comment:

  1. தென்மொழி தொன்மொழி
    முதன்மொழி முதன்மைமொழி
    தாய்மொழி தாயானமொழி
    "தமிழ்மொழி"😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...