Friday, May 31, 2019

ஹைக்கூ பூக்கள்#4

***************
தவறி விழுந்தேன் நான்
கதறி அழுதாள் அம்மா
உதறி எழுந்து வா அப்பா
சிதறி போகாதே ஆசான்
பதறி நிற்காதே சமுதாயம்
*************
நீ மிதித்து மிதித்து நடந்தாலும்
நான் முட்டி முட்டி முளைப்பேன்
சொன்னது "விதை"
**************
நடக்க நடக்க 
பாதை நீள்கிறது
நவீன ஒற்றையடிப்பாதை
டீரட் மில்
**************
மனதில் ஓசை
இதழில் மௌனம்
நினைவுகள்!
***************
விதைக்காமல்
விருட்சமானது
வதந்தி!
***************
நீயா... நானா... அழகு
பூவுக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும்
போட்டா போட்டி
***************

Wednesday, May 29, 2019

ஒரு பக்க க(வி)தை#2



வீட்டில்...

தாத்தா செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்
பாவம் அவர் உணரவில்லை
செய்தித்தாள் தான் அவரை வாசிக்கின்றது என்பதை
அவரது முகமெங்கும் ஒட்டிக்கொண்டது எழுத்துக்கள்.
ஊடக விளையாட்டே விளையாட்டு சலித்து கொள்கிறார்.

பாட்டி வெற்றுஇலையை பாக்கு சுண்ணாம்பு தடவி
வாயிலிட்டு மெல்ல வெற்றிஇலையாக மாற்றினாள்.
தன் பிள்ளைகள் செய்ததை நினைத்து வாய் மட்டுமல்ல
கன்னமும் கண்ணும் சிவந்திருந்தது.
உறவுக்குள் எத்தனை விளையாட்டுகள் புலம்புகிறார்.

மருமகள் வீட்டு வேலை செய்து கொண்டிருக்க
மூளையில் அலுவலக நினைவலை வந்து வந்து போக
குழந்தையை பராமரித்து உணவு செய்து என்று நொந்து கொள்ள
அச்சோ என்ன விளையாட்டு வாழ்க்கைலனு அலுத்துக்கிறார்.

மகன் விதியென புலம்பினாலும் மதியென மதித்து உழைத்து வாழ்வான்.
சுமையென அலுத்துக் கொண்டாலும்
சுகமென கருதி சுமப்பான்.
ஓடாய் தேய்ந்து உழைத்து விளையாடுகிறான்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டு
அழகாய் சிரித்து விளையாடி கொண்டிருக்கும் மழலை.

MOtivation#50


Tuesday, May 28, 2019

MOtivation#49


MOtivation#48


MOtivation#47


ஒரு பக்க க(வி)தை#1



மீன்கள் துள்ளி ஓட கொக்கு கொக்கி போட
தவளை திக்கி பாட நண்டு தத்தி ஆட
பாம்பு நடன மிட இதர வகை மகிழ்ந்திட

மேகம் பூமியின்
தாகம் தனித்துக்கொண்டிருந்தது..

ஆம் மழை பெய்த வண்ணம்
சாலை வீதி மரம் செடி கொடிகளை கழுவிக்கொண்டிருந்தது...

இதனை ரசிக்க ஜன்னல் ஓர(ம்)
சாரலை நான் ரசித்து கொண்டிருந்தேன்

அழகாய் இருந்தது இதனை மேலும்
அழகு சேர்க்க அழகு நங்கை
சாலையில் நின்று நனைந்தபடி
மேகத்தை மோகத்துடன் பார்த்தாள்.

அவள் மேனி தொட மழைத்துளிகள்
மோட்சம் அடைந்து கொண்டிருந்தது.

அதில் சில துளிகள் இதழ் நுழைந்து
சொர்கம் தொட ஆசை பட்டு கொண்டிருந்தது

நான் சொர்கத்தின் நுழைவாயிலில்
பார்வையாளனாக நின்று கொண்டிருந்தேன்...!
  

 

அன்பே...!

அன்பே...

உன் கண் பார்வையில்
எனது கட்சியினை கட்டி போடுகிறாய்..
உன் ஆள்காட்டி விரலால் எனது ஆட்சியினை ஆட்டிப் படைக்கிறாய்...
உன் தொலைநோக்கு செயலால் தலைவன் நான் தலைவணங்கும் தலைவி ஆகிறாய்

நானோ உன் தொண்டன் ஆகிறேன்...

காரணம்

எந்த பொத்தானை அழுத்தினாலும் ஓட்டு உனக்கே😋

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தேன்

தேர்தலுக்கு பின்...

நாடாளுமன்றம் கலைப்பு

அமோக வெற்றி

பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்

கட்சிக்கு மட்டுமல்ல

தலைவன் எனக்கு தலைவியாய்..!

Monday, May 27, 2019

காதல் பாடல்#34

இரும்பாக இருந்தேன் எறும்பாக நுழைந்தாய்
அரும்பாக இருந்தேன் குறும்பாக மலர்ந்தாய்
உன் வருகையில் பூத்துச் செழிக்கிறது என் மனம் 
நினைக்க நினைக்க இனிக்கிறது தினம் தினம்.
சரணம்
**********
உன் பார்வையில் மின்னேற்றம் செய்து கொள்கிறது என் உயிர்.
உன் வார்த்தைகள் இசையாகப் பரவுகிறது இதயத்தில். 
நீ தொடுகையில் ஆனந்தப் பரவசமடைகின்றன உடலின் அணுக்கள். 
நடக்கும் புதையல் நீ
நட்சத்திர சிற்பம் நீ

சரணம்
**********
உன் அன்பெனும் எரிபொருளில் இயங்கி கொள்கிறதது என் இதயம்.  
உன் நினைவுச் சுடர்கொண்டு ஒளிர்கிறது உதயம் !
நீ  வருகையில் ஒருநாள் கூட்டிக்கொள்கின்றன வாழ்வின் ஆயுட்காலம்.
ஏகாந்த சொர்க்கம் நீ 
என்னிலே அடக்கம் நீ.

Saturday, May 25, 2019

ஹைக்கூ பூக்கள்#3

மரத்தில் குருவி போய் 
மின்கம்பங்களில் குருவி
டெக்னாலஜியின் உச்சம் 
************
எத்தனை சுருக்கங்கள்
இஸ்திரி செய்யும்
கிழவனின் முகத்தில். 
************
நெகிழியை ஒழிக்கவும்
விளம்பரம் செய்யப்பட்டுள்ளது
நெகிழியால் ஆன போஸ்ட்டரில்
************
"நாய்கள் ஜாக்கிரதை"
வீட்டின் முன் போர்டு
நமக்கா? நாய்க்கா?
*************
சுதந்திரமாய்
நடத்த முடிவதில்லை
"சுதந்திர தின விழா"

Friday, May 24, 2019

காதல் பாடல் #33

முகம் முகம் பார்த்திட நிலா வரம் 
கண் கண் பேசிட உள் கலவரம்  
மனம் மனம் நினைத்திட தேன் தரும்
அகம் அகம் சேர்ந்திட காதல் வரும்
அன்பே சொல்லடி காதல் செய்யடி காதல்
சரணம்
**********
சொல் சொல் என்கிறாய்  சொன்னால் மெல் மெல்யென பேசுகிறாய்.
நில் நில் என்கிறாய் நின்றால் ஜல் ஜல்யென போகிறாய்.
தில் தில்யென வருகிறாய் மனதில் காதல் தல்யென நிற்கிறாய்.
கல் கல்யென ஆகுகிறாய் கலைந்து ஜில் ஜில்யென உருகுகிறேன்
அன்பே சொல்லடி காதல் செய்யடி காதல்

சரணம்
**********

வில் வில் ஏய்கிறாய் ஏய்வதால் நெஞ்சில் காதல்யென கொய்கிறாய்.
மெல் மெல்லினம் என்கிறாய் நெருங்கிவர வல் வல்லினம் ஆகின்றாய்.
சில் சில்லென சிலிர்கிறாய் உதிரத்தில் செல் செல்லென நிற்கிறாய்.
பல் பல்லென சிரிக்கிறாய் பதம் பார்க்க கொல் கொல்லென இளிக்கிறாய்
அன்பே சொல்லடி காதல் செய்யடி காதல்

Thursday, May 23, 2019

ஹைக்கூ பூக்கள் #2

மௌனம் காணும் வேளைதனில்
தமிழை அள்ளி பருகுகிறேன்...
ஹைக்கூவாக பேசுகிறேன்!
***********************
மாறிமாறி வருகின்றன
சூரியனும் சந்திரனும்
சபாஷ் சரியான போட்டி.!
***********************
எத்தனை சோகங்களோ
எத்தனை மகிழ்ச்சிகளோ
கூகுள் இன்பாக்ஸ்க்குள்..!
***********************
காகித நிலத்தை உழுது எழுதுகோல்  
விதைக்கும் விதை கவிதை..!
************************
பலரின் வேண்டுதல் அர்ச்சனை
சூடம் கற்பூரம் அர்ச்சனைகளில்
திக்குமுக்காடுகிறார் கடவுள்.
*************************
கொடுக்கப் பெருகும்
மனித இரத்தம் 
செய் இரத்ததானம்.
**************************

பயப்படுவதில்லை

அ'ருவி கீழே விழ பயப்படுவதில்லை
ஆ'டுகளம் காண விலங்குகள் பயப்படுவதில்லை
இ'ருள் அதன் கருமை விலகுமென பயப்படுவதில்லை
ஈ'ட்டிக்கு குறி எதிரே யாரென பயப்படுவதில்லை
உ'றவு யாரென்றாலும் அன்பைக்காட்ட பயப்படுவதில்லை
ஊ'ஞ்சல் தன் மேல் உட்கார்ந்தாலும் பயப்படுவதில்லை
எ'றும்பு தான் செல்வதை யார் கலைத்தாலும் பயப்படுவதில்லை
ஏ'ணி யாராகினும் மேலே ஏற்றி விட பயப்படுவதில்லை
ஐ'ம்புலன்களும் செய்வதை செம்மையாய் செய்ய பயப்படுவதில்லை
ஒ'ற்றுமை பிரிவை கண்டு என்றும் பயப்படுவதில்லை
ஓ'டும் நதி பாதை எதுவாயினும் பயப்படுவதில்லை
ஔ'டதமாய் விளங்க நம் உடம்பு பயப்படுவதில்லை
அஃ'து மனிதா நீ மட்டும் ஏன் உழைப்பதற்கு பயப்படுகிறாய்?
உழைத்திடு! உயர்ந்திடு!

Saturday, May 18, 2019

ஹைக்கூ பூக்கள் # 1

தலைகுனிந்து காலால் கோலம் போட்டாள்
தலைநிமிர்ந்தது பெண்மை!
****************************
தலைகுனிவான் விவசாயி பயிர்
தலைநிமிராமல் போனால்....
****************************
தலைகுனிந்தான் தன் நம்பி(க்)கை உயர்வால்
தலைநிமிர்ந்தான் 
****************************
தலைகுனிவு மனிதம் அற்றும்போது
தலைநிமிர்வு மனிதம் பறும்போது.!
****************************
தலைகுனிந்தது ரோஜா அன்பே உன் இதழ் பார்த்து
தலைநிமிந்தது பின் இதழ்  வணங்க....
****************************
தலைகுனிந்து முதுகில் சுமந்தான்
தலைநிமிர்ந்து குடும்பம் நடக்க..
****************************
தலைகுனிவு நேரலாம் நேர் எதிர்கொள்
தலைநிமிரலாம்!
****************************
தலைகுனிந்து அனைவரும் மரியாதை செய்கிறார்கள் 
உணவு வேளைகளில்...
தலைநிமிர்கிறது விவசாயின் விவசாயம்!
****************************
தலைகுனிந்து நடக்கவைத்தாய் என் பேனாவையும்
தலைநிமிர்ந்து சொல்கிறது கவிதை...
****************************
தலைகுனிந்து நடப்பது பழக்கம்
தலைநிமிர்ந்தேன் கண்ணா உன்னை பார்த்த நாள் முதல் ...

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...