Tuesday, November 28, 2017

அற்புதம் Versions



அற்புதம் V 0.1

அற்புதம் நிகழ்த்த 
ஆண்டவன் வர தேவையில்லை.
ஆண்டவன் நிகழ்த்திய
அற்புதமே நீதான் மனிதா!
அற்புதம் செய்ய நீயே போதும்

அன்பு கொள்
அறிவை தேடு
அடக்கம் சேர்
அகங்காரம் கொல்

ஆழம் அறிந்தவன் நீ
ஆசி பெற்றவன் நீ
ஆட்சி புரிவாய் நீ

அடி எடுத்து வை
அகிலம் வியக்க செய்

ஆளப் பிறந்தவன் நீயென்று!

அற்புதம் 👌 0.2

அளக்க முடியா வானம்!

வானையே கிழிக்கும் மின்னல்!

 வின் சித்திரம் நட்சத்திரம்!

மனதில் நிலைக்கும் வானவில்!

பேசி திரியும் முகில்கள்!

மகிழ்ச்சியில் மிரட்டும் மழை!

உலகையே எழுப்பும் சூரியன்!

அமைதியை கொடுக்கும் நிலா!

ஓயாமல் அலையும் அலை!

பச்சை நிறைந்த காடு! 

எங்கும் நிறைந்த காற்று ! 

எட்டா தூரம்வரை கடல்! 

நிமிர்த்து நிற்கும் மலைகள்!

வளைந்து நடக்கும் நதிகள்!

சாய்ந்து கொடுக்கும் கதிர்கள்!

ஆர்பரித்து கொட்டும் அருவி!

அழகை எடுத்துக்காட்டும் பூ!

எத்துணை வகை உயிர்கள்!

முட்டி முளைக்கும் விதை!

மூக்கை துளைக்கும் முக்கனி!

இசையை கற்றுதரும் குயில்கள்!

நடனமா இதோ  மயில்கள்!

பறந்தாலும் உழைக்கும் பறவைகள்!

நெறிமுறை கொண்ட மனிதர்கள்!

மொழிகளின் தாய்த் தமிழ்!

எத்தனை அற்புதம் 👌👌👌
இயற்கையின் படைப்பில்!! 


அற்புதம் 👌 0.3

வயதானாலும் வாழ்க்கைக்கு
வழிகாட்டி வாழ்த்தும்
தாத்தா பாட்டி!

உயிருக்குள் இன்னொரு
உயிரை சுமக்கும்
அன்பான அம்மா !

பாரங்கள் என்று
தெரிந்தும் சுகமாய்
நினைக்கும் அப்பா!

உன்னை யாரென
சிந்திக்க வைத்து
உணரசெய்யும் ஆசான்!

மனதாலும் குணத்தாலும்
சிறந்தவன்னு ஊர்
சொல்ல பிள்ளைகள்!

சண்ட போட்டாலும்
கோபித்தாலும் உடன்
நிற்கும் உடன்பிறப்புகள்!

எதற்கும் கவலைபடாதே
நான் இருக்குறேனு
சொல்ற நட்பு!

உனக்கு நான் மட்டும்
எனக்கு நீ மட்டும்
எனும் காதலர்கள்!

வம்பா பார்த்தாலும்
தெம்பா வந்துநிக்கும்
கம்பீரமான உறவு!

அற்புதம் 👌👌👌 அற்புதம்


அற்புதம் 👌 0.4

நேற்றைய 

பொசுங்கி போன
எண்ணங்களோடும்

கசங்கி போன 
இதயத்தோடும்

நசுங்கி போன 
மனதோடும்,

இந்த இனிய நாளை 
தொடங்காதீர்கள். 

கண் விழித்த இந்தநாளை
மேலும் இனிமை வருமென

புதிய

ஆச்சரியங்கள் காத்திருப்பதாக

அதிசயங்கள் நிகழுமென

அனுபவங்கள் கிடைக்குமென

இன்று இந்த புதிய அற்புத
நாளை தொடங்குங்கள்👍💐


அற்புதம் 👌 0.5

அரிய மனித பிறவியில்
அற்புதமாய் கிடைத்த வாழ்க்கை
அதில் அற்பப்பதர்கள் நம்மில்

சில உறவுகள் உள்ளத்தில் 
சில உறவுகள் உதடுவரை 
சில காலம் வசந்தம் 
சில காலம் வலிகள் 
சில நேரம் வறுமை 
சில நேரம் செழுமை 
சில எதிர்பாராத தாழ்வுகள் 
சில எதிர்பாராத உயர்வுகள் 
சில நியாயமான கோரிக்கை
சில நியாயமான சண்டை
சில தருணம் மகிழ்ச்சி
சல தருணம் இகழ்ச்சி
சில முறை முயற்சி
சில முறை பயிற்சி
........

இப்படி

இதுதான் வாழ்க்கை என்ற
சமரசத்தில் கழியுது
வாழும் வாழ்நாட்கள்.. 


அற்புதம் 👌 0.6

உலகில் ஏழு அற்புதங்கள்!

சொல்ல மறந்து விட்டார்கள் 
இன்னும் சில அற்புதங்களை..

கவனியுங்கள் சேருங்கள்
உலக அதிசயங்களில்

இதோ அவளின்..

இங்கும் அங்கும் ஓடி
பேச துடிக்கும் மீன்விழி
என்ன அற்புதம்👌

மது கிண்ணமோ
மாது உன் கன்னமோ
என்ன அற்புதம் 👌

கொய்யாப் பழமோ கொய்த
பழமோ உந்தன் இதழ்கள்
என்ன அற்புதம் 👌

இடை மெல்லினம்
நடை வல்லினம்
என்ன அற்புதம் 👌

வான் உயர எண்ணமோ
வானவில் வண்ணமோ
என்ன அற்புதம் 👌

நீளும் பட்டியல்
சொல்ல சொல்ல
அற்புதம் அற்புதம்
மெல்ல மெல்ல
ஆச்சரியம் அதிசயம் 😍


அற்புதம் 👌 0.7

அன்பையும் கருணையும்
கற்பிப்பவள் அம்மா!

துன்பத்தின் போது
துணை நிற்பவள் அம்மா!

உன் தோள் உயர தோள்
கொடுப்பவள் அம்மா!

அன்பின் மொத்த
உருவம் அம்மா!

அனைத்து உறவுகளில்
உன்னதம் அம்மா!

ஆயிரம் அர்த்தங்கள்
பொதிந்த சொல் அம்மா!

அதிசயங்கள் ஒன்றுசேர்ந்த
அதிசயம் அம்மா!

உலகின் ஒரே
அதிசயம் அம்மா!

சொல்ல சொல்ல
ஆச்சரியம் அம்மா!

கடவுளும் தொழும்
அற்புதம் அம்மா!


அற்புதம் 👌 0.8

தன்னிகரில்லா அற்புத
தவ வாழ்க்கையில்

தன்னால் மட்டும்
தான் முடியுமென்ற
தலைக்கணம்
தவிர்த்து
தன்னாலும் முடியுமென்று
தன்னம்பிக்கையுடன் வாழ்வதே

உன்னை மேலும் மேலும்

தரம் உயர செய்யும்👍




அற்புதம் 👌 0.9

மாச்சு பிச்சு மலை தொடரும் மலைத்து போகும் உன் அழகை பார்த்ததால்

பெட்ரா எனும் கல்வெட்டு
போல் பதிந்தது
மனதில் உன் முகம்!

விழி முதல் உயிர் வரை
ஓடி உயிருக்கு உயிராய்
சீன பெருஞ்சுவராய் நின்றதால்

கொலோசியம் மன்றத்தில்
நடப்பது போல்
அனுக்களும் திசுக்களும்
போட்டியிட்டு கவிபாடுது!

சிச்சென் இட்சா கட்டடங்கள்
போல என்னுள்
உன்னை வைத்து
உயிருடன் கட்டிவிட்டு

மீட்பரான கிறித்துவாக
உயர்ந்து என்னுள்
அற்புதமாக நிற்கின்றாய்!

தாஜ் மகால் போல்
நினைவகம் அல்ல
உயிரொவியம் உனக்காய்
எழுப்பப் போகிறேன்

என்னவளே மொத்தத்தில்
உலக அதிசயம்
அனைத்தும் உனக்காகவே!!


அற்புதம் 👌 1.0 (முற்றும்)

பசியில் நீ உண்ணும் போது
பசியென்று வருவோருக்கு உணவு பகிர்ந்து அளித்தல் அற்புதம்!

உடன் பிறந்தவளும் பெற்றவளும்
பெண் தான் என்பதை
மனதில் நிறுத்தி
உடன் பழகும் பெண்களுடன்
கண்ணியம் காத்தல் அற்புதம்!

கொடுமை சூழலில் நீ இருந்தாலும்
கொடை செய்ய நினைக்கும் உள்ளம் அற்புதம் !

அவசரத்தில் நீ இருக்க
உதவி என்போருக்கு
அவசர உதவியாவது செய்யலாம் என்ற
நினைப்பு அற்புதம்!

உயிரை துச்சமாக
நினைத்து பலர் உதாசனிப்படுத்த
எல்லா உயிரும்
சமமென நினைத்து
பழகுவது அற்புதம்!


கடவுளை தரிசித்து திரும்பி வர
காணிக்கையை யாசிப்போருக்கு அளித்தல் அற்புதம்!

ஆயிரம் மொழிகள்
பயின்றாலும் மொழிந்தாலும்
அன்னை மொழி தமிழில்
மொழிதல் அற்புதம்!

கடைப்பிடிக்க தவறினால் மனிதத்தன்மையுடன் மனம் வருந்துவது அற்புதமோ அற்புதம்!


தவறு செய்தால், தயங்காமல் நேர்மையாக ஒப்புக்கொண்டு  மன்னிப்பு வேண்டுவது அதனினும் அற்புதம்!


மன்னிக்க இயலா தவறுகள் இழைத்து உள்ளம் உடைக்காமல், நம்பிக்கை காத்தால்  அரியதோர் அற்புதம்!


ஒவ்வொருவரும் நமக்கு செய்த அன்பையும், உதவியையும் மறக்காமல் மனதில் கொண்டு, அவர்களை தகுந்த மரியாதையுடன் நடத்தி மகிழ்வித்து, நல்லோர் மனதில் நல்லவன் என்று இடம்பிடித்தால், அது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம்!

வணக்கம்🙏🏻

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...