Friday, November 3, 2017

கிண்டல் kavithai versions



Top of Form
Bottom of Form
கிண்டல் 😜 V 0.1

என்ன நீ கிழித்தாய்
என்னை கிழிக்க
வந்து விட்டாய்
கேட்கிறது நாட்காட்டி

மானிடா?

நினைவில் கொள்

என்னை நீ
கிழிக்க மறந்தால்
உன் வாழ் நாளை
கழிக்க மறந்ததாய்
என்பதாகும்!!!

கிண்டல் 😜 V 0.2

எங்கெங்கோ அலைகிறாய்!

தேடி தேடி செல்கிறாய்!

பேசி பேசியே கழிக்கிறாய்!

முட்டிமுட்டியே மோதுகிறாய்!

வேண்டி வேண்டி நிற்கிறாய்!

மனிதா எதற்கு

நிம்மதி வருமென?

மூடனே அது இருப்பது
உன் எண்ணத்தில் தான்
என்பதை அறியாமல்..!

கிண்டல் 😜 V 0.3

அன்று..

சல்லிக்கட்டு மாட்டுக்காக
பெருமையாக தோள் நிமிர்த்தி
போராடிய மனிதர்கள்😎

இன்று..

சல்லிப்பைய கொசுவின்
டெங்குவிலிருந்து விடுபட
வெட்கி தலை குனிந்து
போராடி கொண்டிருக்கிறார்கள்😢

கிண்டல் 😜 V 0.4

மனிதனிடம்..

மது குடிப்பவனே
உன் உயிரை நிச்சயம்
ஓர்நாள் நானும் குடிப்பேன்
என்றது மது கிண்டலாக..!

புகை பிடிப்பவனே
இன்று நான் எரிகிறேன்
விரைவில் நீ எரிவாய்
என்றது சிகரெட் கிண்டலாக..!

பலர் கண்ணில் மண் தூவி
கொள்ளை அடிப்பவனே
நான் மண்ணோடு மண்ணானால்
நீ எங்கே வாழ்வது
என்றது மண் கிண்டலாக..!

கண்ணில் காண்பவர்க்கு
முடிந்தவரை உதவு
பிறரை செய்யாதே தொந்தரவு
கடவுளை காண்பாய்
என்றது கடவுள் கிண்டலாக..!

நீ இராமன் ஆனாலும்
நீ இராவணன் ஆனாலும்
என்னை பெண்ணாய் பார்
உன்னில் பாதியாய் நேசி
காமத்தின் போது அணைக்க துடிக்காதே
காமத்தின் போதும்
நேசிக்க துடி
என்றாள் பெண் கிண்டலாக..!

அவன் சரியில்லை இவன்
அவள் போனால் இவள்
காதலா காமமா நட்பா?
புரியாது தவிக்கிறது
இன்றைய தலைமுறை
என்றது காதல் கிண்டலாக..!

மாட்டுக்கு சண்டை
போடும் மனிதா
நாங்கள் விலங்குகளோடு
ஒற்றுமையாக தான் வாழ்கிறோம்
ஜாதி மதம் கடந்து
மனிதனோடு மனிதனாக வாழ்
முதலில் உனக்காக போராடு
பிறகு என்னிடம் வா
என்றது மாடு கிண்டலாக..!

வளர்ச்சி வளர்ச்சி என
இருக்கும் வளங்களை
அழிக்கும் மனிதா
வரும் காலம் அரிசியையும்
டவுன்லோட் செய்து
கொள்வாயோ சாப்பிட
என்றது இயற்கை கிண்டலாக..!


கிண்டல் 😜 V 0.5

பணத்தை சுருட்டி
பற்றவைக்க மனமில்லாத

மனிதன்

பணத்தை கொடுத்து
பட்டாசா வாங்கி
பற்றவைத்து காசை
கரியாக்கி கொண்டிருக்கிறான்?!

கேட்டால் தீபாவளி என்கிறான்.

உச்சந்தலையில் எண்ணையிட்டு
நீராடி மனதூய்மையோடு

விளக்கினில் திரிஎண்ணையிட்டு
இல்லமெங்கும் தீபஒளி பரவவிட்டு
கொண்டாட வேண்டும்
என்பதை உணராமல்!!!!


கிண்டல் 😜 V 0.6

அன்றைய வறுமை..

ஐயா சாமி ரொம்ப

பசிக்குது சாப்பிட

எதாவது இருந்தா

போடுங்க சாமி நீங்க

நல்லா இருப்பீங்க..!

இன்றைய வறுமை..

சார் ப்ளீஸ்

ரொம்ப கஷ்டமா இருக்கு

பேசாம பார்க்காம

ரீசார்ஜ் பண்ணக் கூட

கைல காசில்ல சார்

பணமா வேண்டாம்

ரீசார்ஜ் பண்ணி விடுங்க

போதும் நல்லாயிருப்பீங்க..!


கிண்டல் 😜 v 0.7

எவனொருவன்

பிறர் வாதத்திற்கு

அல்லது செயலுக்கு

எதிர்ப்பாக

ஏன்?

எதற்கு?

எப்படி?

என வினவுகிறானோ?

அவனை

எப்படி

எதற்கு

ஏன்

என தெரியாமலேயே

ஓரங்கட்டப்படுகிறான்

அல்லது அழிக்கப்படுகிறான்!

என்ன உலகம்டா இது🤔


கிண்டல் 😜 v 0.8

தோழா உன்னை

விதி வந்து கெடுத்தாலும்

சதி செய்து தடுத்தாலும்

கதி என்ன நேர்ந்தாலும்

மதி உள்ளவனாய் இருந்தால்😜 அது சொல்வதே மந்திரம் எனக்கொள்👍

நதி போல் வாழ்க்கை
அழகாக ஓடவைக்கும் !!!


கிண்டல் 😜 v 0.9

வீட்டில் சண்டை இல்லை!

படிப்பில் சண்டை இல்லை!

அலுவலகத்தில் சண்டை இல்லை!

காதலில் சண்டை இல்லை!

பயணத்தில் சண்டை இல்லை!

கைபேசியில் சண்டை இல்லை!

இணையத்தில் சண்டை இல்லை!

சொத்தில் சண்டை இல்லை!

சோத்தில் சண்டை இல்லை!

குழந்தையாக, முட்டாளாக இருப்பதன் நன்மை!!😜


கிண்டல் 😜 v 1.0

பலர் நடந்த நிகழ்வுகளை
நினைத்து என்றுதான்
விடியுமோ விடிவுகாலம்
வருமோ என புலம்பி
காலம் கடத்தி
கொண்டிருக்கிறார்கள்,

தினம் தினம்
புதிதாய் விடிவது
தெரியாமல்🤔😜


கிண்டல் 😜 v 1.1

நேற்று
காலில் மிதித்தார்கள்!?
இன்று
கைகூப்பி வணங்குகிறார்கள்!?
நாளை
கடலில் கரைப்பார்கள்!?
மறுநாள்
கரையில் கூட்டுவாறுவார்கள்!?
கார்பரேசன் குப்பையில் இடுவார்கள்??😜��


கிண்டல் 😜 v 1.2

ஒரு பெண்ணுக்காக
பேசி பேசி
பில் கட்டுவதற்கு
பதில் அவன்
ஒரு தாஜ்மாஹலையே
கட்டிடலாம் எப்படி 😜🤔

ஒரு ஆண்மகனை
குடிக்காத தம் அடிக்காதனு
சொல்லிக் கொண்டு
உருட்டுக்கட்டையால் டாஸ்மாக்கின்
கதவை அடிப்பவளே
அந்த அடியை
அவன் மீது விழுமாறு அடி
அம்மி என்ன அவன்
மம்மினு உட்காருவான்
எப்படி 😜🤔


கிண்டல் 😜v 1.3

காதை கிழிக்கும் சத்தம் இல்லை😜

காற்றில் கலக்க மாசு இல்லை 😜

காட்டை அழிக்க யாரும் இல்லை😜

சட்ட விதிகளை மீற எவரும் இல்லை😜

சாலைகளில் மரணம் நிகழ்வதே  இல்லை😜

வீதி தெருக்களில் குப்பை இல்லை😜

வீண்பேச்சு அரட்டைக்கு நேரம் இல்லை😜 

மந்திரி சென்றால் ஆரவாரம் இல்லை😜

பதவிக்கு சண்டை சச்சரவு இல்லை😜

பள்ளிகளுக்கு எந்தவித கட்டணம் இல்லை😜

மருத்துவத்துக்கும் மறந்தும் பணம் இல்லை😜 

இலவசம் தேர்தலென்று ஏதும் இல்லை😜

மது போதை ஏதும் இல்லை😜

எதற்கும் இலஞ்சம் என்பது இல்லை😜

அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை😜

தான் முன்னேற சுயநலம் இல்லை😜

பெண்களிடம் எல்லை மீறுவதே இல்லை😜

மணமகளை பேரம் பேசுவதே இல்லை😜

பெரியவன் சிறியவனென்று யாரும் இல்லை😜 

மக்கள் இடையே வேற்றுமை இல்லை😜

மனிதனை ஏமாற்றும் மனிதன் இல்லை😜

இந்த மண்ணில் இல்லை என்பதே இல்லை 😜😜


கிண்டல் 😜 V 1.4

தோழா
நீ..
முழுமையாய் முயற்சித்து
தோற்பது தோல்வியல்ல!
நாம்..
முயற்சியை கை
விடும் போதுதான் 
தோற்றுப் போகிறோம்!! 


கிண்டல் 😜 V 1.5

அன்பே..

உன் மூஞ்சி
அழகான குண்டா!
உடம்போ செம
குண்டான அண்டா😜
உன் பேச்சு தேன்
கலந்த சர்க்கரை பொங்கல்!
உன் பால் மனம் கண்டு
என்மனம் பொங்குகிறது😜
இரவில் என் கனவிலே 
உப்புமாவை போல் என்னை கிண்டுகிறாய் 😜
பகலில் என் நினைவினை 
தேங்காயை துருவது போல் துருவிகிறாய்😜 
உன் பேச்சு ஏலக்காய்
போட்ட பாயாசம்
ஆனா கோபம் பாகற்காய்
கலந்த சாராம்சம் 😜
நீ நடந்தால்
புடலங்காய்
நின்றால் சுறக்காய்😜
என் காதல் சுத்தமான
24% காரட்
காதல் என்ன கத்தரிக்காய்யானு
கேட்காம சம்மதி
சம்மதித்தால் சேர்ந்து
சமைக்கலாம் சாம்பார்😜

அறுசுவை உணவே
கூட்டு பொரிப்போம் வா😜

சமையல் அறையில்
யோசித்தது😜😜😍



கிண்டல் 😜 v 1.6

கல்யாணம் பண்ணிப்பார்!!
உலகமே உன்னை பார்க்கும்!
உளமாற உன்னை வாழ்த்தும்!
உறவுகள் வியந்து நிற்கும்!
உச்சந்தலையில் ஒளிவட்டம் தோன்றும்!

கல்யாணம் பண்ணிப்பார்!!
புத்தம் புதிதாக ஜொலிப்பாய்!
கிடைத்ததெல்லாம் விருந்தென உண்பாய்!
கைகளில் கழுத்தில் மின்னும்!
செல்லம் உன் வார்த்தையாகும்!

கல்யாணம் பண்ணிப்பார்!!
கனவு காட்சிகள் நீளும்!
கண்கள் சுற்றி கருவளையம் வரும்!
கண்டதை மறந்து செய்வாய்!
கன்னம் சிவக்க சிரிப்பாய் பேசுவாய்!

கல்யாணம் பண்ணிப்பார்!!
இரவுகளின் நீளம் குறையும்!
பகலின் கொடூரம் புரியும்!
தூக்கம் வரும் தூங்க வராது!
ஏக்கம் தரும் தாகம் தீராது!

கல்யாணம் பண்ணிப்பார்!!
பில் கட்ட தொடங்குவாய்!
பிள்ளை செல்வம் கைக்கூடும்!
ஸ்கூல் அட்மிஷன்னு அலைவாய்!
அங்கும் இங்குமாய் திரிவாய்!

கல்யாணம் பண்ணிப்பார்!!
எல்லாம் தெரிந்ததாய் செய்வாய்!
உனக்கும் சமையல் வரும்!
சமையல் அறை உனதாகும்!
மிக்சி கிரைண்டர் வாசிங்மெஷின் உன் கடவுளாகும்!

கல்யாணம் பண்ணிப்பார்!!
தினமும் துணி துவைப்பாய்! 
மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்!
வீட்டு வேலைக்காரியும் திட்டுவாள்!
வீட்டு நாய்யும் மதிக்காது!

கல்யாணம் பண்ணிப்பார்!!
ரிமோட் கன்ட்ரோலாய் மாறுவாய்!
சுமைகள் சுகம் என்பாய்!
சுதந்திரம் பறிபோனதாய் நினைப்பாய்!
சுற்றி சுற்றி உழைப்பாய்!

கல்யாணம் பண்ணிப்பார்!!
ஆடம்பரம் தேவையை அதிகரிக்கும்!
கடன் சுமை கூடும்!
பேங்படி ஏறி இறங்குவாய்!
வாழ்க்கையே ஊஞ்சலில் ஆடும்!

கல்யாணம் பண்ணிப்பார்!!😜😜


கிண்டல் 😜 v 1.7

பெண்ணே..

உனது சிரிப்பு தான் 
என் எழுதுகோலை
திறக்க வைத்தது!

உனது சிரிப்பு தான் 
என்னை கவிதை
எழுத வைத்தது!

உனது சிரிப்பு தான் 
என்னை கவிஞனாய் 
அடையாளம் காட்டியது!

உனது சிரிப்பு தான்
என் இதய கதவை
தட்டி திறந்தது!

உனது சிரிப்பு தான்
என்னை தூங்க
விடாமல் செய்தது!

உனது சிரிப்பு தான்
என் சிந்தையை
தூண்டி விட்டது!

பெண்ணே..

உனது சிரிப்பு மட்டுமே
என்னுள் பல மாற்றங்களை
கொண்டு வருகிறது
என்றால்🤔

அப்புறம் ஏன்யா

பொம்பள சிரிச்சா போச்சு
போகியலை விரிச்சா போச்சுனு
பேசுறிங்க😜


கிண்டல் 😜 v 1.8

மரங்கள் தன்னை
துயர் செய்தாலும்
காற்று தந்து
உயிர் வாழவைக்கிறது!

செருப்பு கூட
சுமைகளை தாங்கி
பலரை வாழவைக்கிறது!

நீர்வீழ்ச்சி கூட
விழுந்து தான்
உலகை செழிப்பூட்டுகிறது!

மனிதன் மட்டும் தான்
பிற மனிதர்களை
சுமக்க வைத்தோ
துன்புறுத்தியோ
விழ வைத்தோ
ஏளனம் செய்து
கைகொட்டி வாழ்கின்றான்🤔😜


கிண்டல் 😜 v 1.9

உரிஞ்சி உரிஞ்சி
புகை இழுப்பவனுக்கும்
உரிஞ்சி உரிஞ்சி
மது குடிப்பவனுக்கும்
தெரியுமோ?
அதுவும் அவன் உயிரை
தினமும் உரிஞ்சிக்
கொண்டிருக்கிறது என்று?🤔



கிண்டல் 😜 v 2.0

டெங்கு
++++++++++

உடம்பு சரியில்லாம
ஊசி போடபோவோம்
கொசு ஊசி போட்டதாலே
உடம்பு சரியில்லாம
போறோம்😜

******************

டெங்கு டெங்கு டெங்கு !
நிறையுதே சவக் கிடங்கு !
நீராகாரம் அதிகமாய் அருந்து !
நிலவேம்புக் கசாயமே மருந்து !!

*****************

கலங்கிய இடங்களில்
கலக்கும் நாயகன்!
நம்மை கதி கலங்க
வைக்கும் வில்லன்!!

*******************

டெங்கு க்கு காரணம் 
கொசுவாம்! 
கொசுவர காரணம்
நாம் தானே🤔😜

***********************

பெண்ணாய் வந்து
என்னுள் காதலை
பரப்பி விட்டதற்கு

பதில்

கொசுவாய் வந்து
என்னுள் டெங்குவை
பரப்பியிருந்தாலும் நான்
உயிர் வாழ்ந்திருப்பேன்😜

**********************
டெங்குவை ஒழிக்க
கொசு மருந்து அடித்தல் 
வியாபாரம் விளம்பரம்  
கொசுவை உண்ணும் 
தவளையும் 
தாளிப்பிரட்டையும்
அது ஒழிக்குமல்லவா?

டெங்கு போய்
மலேரியா டைப்பாய்டு
வரப் போகிறது

சுத்தம் சுகாதாரம்மே
நம்மை காக்கும்



கிண்டல் 😜 v 2.1

வாழ்க்கை ஒரு போர்க்களம்
போராடி பார்க்கனும்..

அதுக்கு இப்படியா??

விவசாயி(யம்) வாழ போராட்டம்!
மொழி திணிப்பு போராட்டம்!
உரிமைகள் கிடைக்க போராட்டம்!
தண்ணீர் வாங்க போராட்டம்! 
நல்கட்டமைப்பு இல்லா போராட்டம்!
வசதிக்காக தேடி போராட்டம்!
வேலை வாய்ப்புக்காக போராட்டம்!
உயர் கல்விக்காக போராட்டம்!
இட ஒதுக்கீட்டுக்காக போராட்டம்!
தனியார் மயமாக்குதலுக்காக போராட்டம்!
ஜிஎஸ்டி எதிர்ப்பு போராட்டம்!
உணவு பெற போராட்டம்!
பணமதிப்பு இழப்பிற்காக போராட்டம்!
ரேசன் பொருளுக்காக போராட்டம்!
ஆட்சியை தக்கவைக்க போராட்டம்!
ஆட்சியை பிடிக்க போராட்டம்!
மாட்டிறைச்சி தடைக்கு போராட்டம்!
டாஸ்மாக் மூட போராட்டம்!
காதல் மன போராட்டம்!
ப்ளுவேல் உயிர் போராட்டம்!
............
எத்தனை எத்தனை போராட்டம்!
பிறந்தது முதல் போராட்டம்!
இறக்கும் வரை போராட்டம்!
சுதந்திரநாட்டில் போராட்டம் போராட்டம்! 😜

கிண்டல் 😜 v 2.2

காடுகள் அழித்து 
மடங்கள் திறந்து 
மதம் வளர்க்கும் 
கார்போரேட் சாமியார்கள் 
கன்னியவான்களே ! 

வரிப்பணம் ஏய்த்து 
கறுப்புப்பணமாக 
வெளிநாட்டு வங்கிகளில் 
பதுக்கி பதுங்கும் 
வியாபாரக்காந்தங்கள் 
போற்றப்படவேண்டியவர்களே ! 

சட்டங்களை உடைத்து 
நீதிபதிகளை விலைபேசி 
நீதிதேவதையை 
தாசியாக்கும் ஊழல்வாதிகள் 
உத்தமர்களே ! 

கண்ணியமாய் பேசி 
கையூட்டு வாங்கி 
கோப்புகள் நகர்த்தும் 
அரசாங்க ஊழியர்கள் 
நம்பிக்கைக்குரியவர்களே ! 

அரைசவரன் காதணிக்காய் 
மூதாட்டியின் காதறுக்கும் 
திருட்டு நாய்களிடம் 
பங்கு வாங்கிக்கொண்டு 
குற்றங்களை வளர்க்கும் 
கசங்காத காக்கிசட்டைகள் 
கவுரவிக்கப்படவேண்டியவர்களே ! 

இலவசங்கள் கொடுத்து 
ஓட்டுகள் வாங்கி 
ஆட்சியில் அமரும் 
அரசியல் வியாதிகள் 
அவசியமானவர்களே ! 

இவர்கள் அனைவரும்
மதிப்பிற்குரியவர்களே!
மதிப்பிற்குரியவர்களே!!


கிண்டல் 😜 v 2.3

தேர்தல் என்பது
ஓட்டு போடுபவன்
உன் கைவிரலில்
கருப்பு மை
ஜெயிப்பவன்
அவன் பைகளில்
நாளடைவில் புரளும்
கருப்பு பணம்😜


கிண்டல் 😜 v 2.4

கல்லை கல்லாகவும் 
மரத்தை மரமாகவும் 
பாம்பை பாம்பாகவும் 
நெருப்பை நெருப்பாகவும் 
காட்டிப் பழக்குங்கள்.... 
மனிதனை 
மனிதனாய் பார்க்க 
தானாய் பழகிக் கொள்வார்கள் ! 


கிண்டல் 😜 v 2.5

எங்கும் வியாபாரம்
எதிலும் வியாபாரம்

வியாபார சந்தையில் 
மறந்தே போய்விட்டது
மனிதம் என்ற நம்மைதான்..!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...