Thursday, August 11, 2022

நடைப்பிணம்

 தெளிவில்லாத பாதையில் 

நடைப்பயணம் மேற்கொள்ளும் ஒருவன்,

தெரிந்தே நடந்தால் 

அவன் நடைப்பிணம் என்பதற்கு சமமாவான்!

பெண்ணே


 

எரியும் நெருப்பில்

 மேலும் எரியும் நெருப்பில் 

எண்ணையை ஊற்றுவதுபோல் 

மையிட்டு எழுதுகிறாய் 

கண்களின் ஓரமும் 

உதடுகளின் மேலும் 


என்ன செய்ய தவிப்புகள் 

மேலும் தகிடதோம் ஆடுகிறது...? 


சகியே...

 சகியே...


தமிழில் ஆயிரமாயிரம் 

வார்த்தைகள் இருந்தும் 

உனது மௌனமொழியை 

மொழிபெயர்க்க முடியாது 

தவிக்கிறேன் தினமும்.

இடையிலயேனோ???

 மேலே கிழே நீயும் பார்க்க நானும் பார்க்க

தெரிவதோ ஆகாயம் இருப்பதோ நிலம் 

காற்று மழை நிலா சூரியன் பனி குளிர் 

நம்மை தொட மறந்ததில்லை மறுத்ததில்லை 


பிறப்பதும் இறப்பதும் உடலில் ஓடுவதும் ஒன்றே


இருந்தும் சாதி மதம் பகை வன்மம் நம் இடையிலயேனோ???

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...