நவீன திருக்குறள்
அதிகாரம் - காதல்
அதிகாரம் - காதல்
******************************
1. கைகள் பின்னி சோம்பல் முறிக்குமவள்
நரம்புக ளறுபடு மெனக்கு.
2. கைகள் வீசி ஒய்யாரமாய் நடக்குமவள்
கைகால்கள் ஓடவில்லை யெனக்கு.
3. கைகள் காட்டி நலம் விசாரிக்குமவள்
கை அசைவினால் நலமெனக்கு
4. கை கோர்த்து விழி பார்த்ததவள்
கைரேகை வழிதந்த தெனக்கு
கைரேகை வழிதந்த தெனக்கு
5. கைபிடித்து பலசெயல்கள் செய்ய தூண்டுபவள்
கைவிடாது இருந்தால் போதுமெனக்கு
கைவிடாது இருந்தால் போதுமெனக்கு
6. கையெழுத்தில் எனது பெயரை போடுமவள்
தலையெழுத்து மாறியது எனக்கு
தலையெழுத்து மாறியது எனக்கு
7. கைவிரல்களை அழகாய் ஆட்டுமவள் எனது
கைவிரல்கள் கவிகளை மீட்டுமெனக்கு
கைவிரல்கள் கவிகளை மீட்டுமெனக்கு
8. கைதேர்ந்த மருத்துவக்காரியவள் இதய சீரோட்டம்
கைகள்பட வந்த தெனக்கு
கைகள்பட வந்த தெனக்கு
9. கைபேசி முகம்பேசி கண்பேசி காதல்பேசி
கைகள் இணையுமா எனக்கு
கைகள் இணையுமா எனக்கு
10. கைகள் கொடுத்து சம்மதம் சொல்லுமவள்
கைகாரியின் காதல் வருமெனக்கு
"கைதேர்ந்த மருத்துவக்காரியவள் இதய சீரோட்டம்
ReplyDeleteகைகள்பட வந்த தெனக்கு"-Nice sir