Friday, February 22, 2019

MOtivation#26


நவீன திருக்குறள் அதிகாரம் - காதல்

நவீன திருக்குறள்
அதிகாரம் - காதல்
******************************


1. கைகள் பின்னி சோம்பல் முறிக்குமவள் 
நரம்புக ளறுபடு மெனக்கு. 

2. கைகள் வீசி ஒய்யாரமாய் நடக்குமவள்
கைகால்கள் ஓடவில்லை யெனக்கு.

3. கைகள் காட்டி நலம் விசாரிக்குமவள்
கை அசைவினால் நலமெனக்கு

4. கை கோர்த்து விழி பார்த்ததவள் 
கைரேகை வழிதந்த தெனக்கு

5. கைபிடித்து பலசெயல்கள் செய்ய தூண்டுபவள்
கைவிடாது இருந்தால் போதுமெனக்கு 

6. கையெழுத்தில் எனது பெயரை போடுமவள்
தலையெழுத்து மாறியது எனக்கு 

7. கைவிரல்களை அழகாய் ஆட்டுமவள் எனது
கைவிரல்கள் கவிகளை மீட்டுமெனக்கு

8. கைதேர்ந்த மருத்துவக்காரியவள் இதய சீரோட்டம்
கைகள்பட வந்த தெனக்கு

9. கைபேசி முகம்பேசி கண்பேசி காதல்பேசி
கைகள் இணையுமா எனக்கு     

10. கைகள் கொடுத்து சம்மதம் சொல்லுமவள்
கைகாரியின் காதல் வருமெனக்கு

அன்பே


Saturday, February 16, 2019

காதல் பாடல்#30

ஓடி ஓடி ஓடி ஓடி உடம்பின் இரத்தமாக இருக்கிறாய்
நாடி நாடி நாடி நாடி உயிரின் நாசியாக மாறுகிறாய்
எண்ண எண்ண எண்ண எங்கும் நீயாகவே தெரிகிறாய் பாரு பாரு
உன்ன உன்ன உன்ன பார்க்க கூடிடும் ஆயுள் நூறு பலநூறு

அன்பே காதல் இதுதானோ இறைவன் முன்பே நம்மில் செய்தானோ

சரணம்
*********
காற்றாக வந்து காதல் ஸ்பரிசம் தருகிறாய்
வெயிலாக வந்து உள்ளே மகிழ்வை கூட்டுகிறாய்
மழையாக வந்து ஏனோ ஜீவன் நனைக்கிறாய்
குளிராக வந்து என்னை இதமாய் அணைக்கிறாய்
அன்பே காதல் இதுதானோ இறைவன் முன்பே நம்மில் செய்தானோ

சரணம்
***********

கொஞ்சி பேசி கோடி சுகங்கள் தருகிறாய்
கொஞ்சம் பேசாது நம்மில் அன்பை பொழிகிறாய்
தீராத காதல் நம்மில் தீராது சொல்கிறாய் 
ஆகாயம் அளக்க நம்மில் காதல் என்கிறாய்
அன்பே காதல் இதுதானோ இறைவன் முன்பே நம்மில் செய்தானோ

Wednesday, February 6, 2019

தோல்வி...

தோல்வியென்பது நிலையல்லவே தோழா
தோற்பதென்பது வெற்றிக்காகவே தோழா
தோற்காது வெற்றியை நீ சந்திப்பதென்பது கனியை சுவைப்பது போலாகும்.
தோல்வியில் வெற்றியை நீ சந்திப்பதென்பது விதையை நடுவது போலாகும்.

தோல்வியின் தோளில் கைபோடு தோற்றுப்போ என்றே வீரநடைபோடு.


சரணம்
*********
பெயர் வைத்த பெற்றோர்க்கு பாங்குடனே பெயர் வாங்கித் தர பிறந்தவன் நீ
சருக்கி விழுந்து சட்டென்று எழுந்துடனே  சரித்திரம் படைக்க வர பிறந்தவன் நீ
பல்குத்தும் குச்சியல்ல உரசியதும் பற்றிக்கொள்ளும் தீக்குச்சியாயிரு தோழா
சோதனை தடையல்ல சாதனைகள் பலதுபடைத்து வரலாறுபடைத்திடு தோழா
தோல்வியின் தோளில் கைபோடு தோற்றுப்போ என்றே வீரநடைபோடு.

சரணம்
**********
தோல்வி என்பது உன்னைத்தேடி வருவதில்லை உன்னுள் உள்ளது மாற்ற எழுந்துவா நீ
உதிர்ந்த இலை உரமாகுமே விதைவிழுக மண்ணில் மரமாகுமே என்று எழுந்துவா நீ
உழைப்பின் பாதையில் சென்றால் வெற்றியின் இடம்தனை அடைவாய்
இருளுக்குபின் வெளிச்சம் நிச்சயம் விழித்தெழு தோழா விழித்தெழு
தோல்வியின் தோளில் கைபோடு தோற்றுப்போ என்றே வீரநடைபோடு.

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...