Tuesday, April 28, 2020

வெற்றி

கிட்டுவது சுலபமல்ல

முயன்றால் நிச்சியம் கிட்டும்

தக்க வைத்து கொள்வதும் சுலபமல்ல

முயன்று கொண்டே இருந்தால் நம்மிடம் தங்கும்

அனைவரும் முயல்வது இதற்குதான்

முயலாதவரும் ஏங்குவது இதற்காகத்தான்

பலருக்குள் போட்டா போட்டி இதற்குதான்

சிலருக்கு போட்டியின்றி கிடைப்பதும் இதுதான்

பலரை அளவிடு செய்வது இதுதான்

சிலரை அழவிட செய்வதும் இதுதான்

சிலரின் மதியை மறக்க செய்வது இதுதான்

பலரின் மதிப்பை கூட்டச் செய்வதும் இதுதான்

தோல்வியின் மறுபக்கம் இதுதான்

தோற்றால் மீண்டு பெற முயற்சிப்பது இதுதான்

பலரின் கனவும் பயணமும் இதை நோக்கித்தான்

சிலரின் முற்றுப்புள்ளியும் இதன் இடத்தில்தான்

நம்பிக்கையும் தைரியமும் இதன் தங்கைகள்

Tuesday, April 14, 2020

சித்திரை வந்தாள்

பிறந்திட்டாள் நல்ல சித்திரை!
நடத்திடுவாள் வெல்லும் யாத்திரை!
கிழித்தெறிவாள் கள்ள முகத்திரை!
விரட்டிடுவாள் நோய் சின்னத்திரை!
ஒளிரவைப்பாள் நம்பிக்கை வெள்ளித்திரை!
பதித்திடுவாள் கால முத்திரை!
நம்பிக்கை கொள்(வோம்) நித்திரை!!

Saturday, April 11, 2020

தந்தைக்கு ஒரு பாட்டு

தந்தை நம் தந்தை
உலகில் அவர் விந்தை 
அவர பார்க்கையில கரடுமரடு மீச
அவர் பேசையில திட்டிதீர்க்கும் பாஷ
ஆனாலும் உள்ளுகுள்ள வச்சிருப்பார் எங்க மேல காட்டாத ஏகப்பட்ட ஆச.. அவரே..

சரணம்
********
அப்பா நீங்க சொல்லும் அனுபவ பாடம் புத்தக படிப்பில் தான் கிடைக்குமா
உங்க கடல் அளவு கோபமும் நொடியில் அடங்கி போகும் எங்க கண்களிலே நீர் வழிய..
நீங்க படும் இன்பம் துன்பம் எல்லாத்தையும் நாங்கள் பெறும் வெற்றியில மறந்துதான் சிரிப்பீங்க..
இலக்கணம் இலக்கியம் தெரியாது ஆனா நமக்கெல்லாம் இலக்கணமாய் வாழ்ந்திடும் அவரே

சரணம்
*********
அப்பா உங்க தோளில் சாய்வதில் ஆனந்தம் வேறு எங்கும் தான் கிடைக்குமா
எங்க நலன் காக்க என்றும் வாழ்வின் இறுதிவரை உடன்நின்று போராடும் உறவு நீரே..
நாங்க இடும் பெயருக்கு பின்னால் மட்டுமல்ல நாங்கள் கரை சேர்ந்திட முன்னால்தான் இருப்பவரே..
இருக்கின்றாரோ இல்லையா தெரியாது ஆனா நம்மிடையே இருக்கும் தெய்வம் அவரே

Friday, April 3, 2020

கொரோனா கொரோனா

கொரோனா கொரோனா
ஊஹான்நாட்டு பிள்ளடா
உலகமே வளர்ந்தடா
கண்ணுக்கே தெரியாம கண் கலங்கடிக்க வச்சுட்டடா
கொரோனா... கொரோனா...
எதைசொல்ல வந்தடா
அச்சத்தில் உலகமடா
உச்சத்தில் தொற்றாகி ஊர் அடங்கி போனதடா

சரணம்
********
நடத்துற மூன்றாம் போரு
முழிக்கும் வல்லரசு பாரு
தொட்டா பரவி நின்ற
அணுகுண்டையே வென்ற
அந்த சாமியடா இந்த சாதியடா எதும் என்முன்னே நிக்கலடா
அந்த விஞ்ஞானம்டா எந்த மெய்ஞானம்டா எல்லாம் ஒன்றுமில்ல சொன்னேனடா
ஏ..சந்தோசு ஏ..அபிசேக்கு
ஆணவம் விட்டுபுட்டா இல்ல பிளாஸ்நியுஸ்சு
இந்த இறப்ப பாரு விடையே சொல்லும்
மனிதம் மதிச்சு பழக சரியா செல்லும்
கொரோனா... கொரோனா...

சரணம்
*********
முகத்தில் மாஸ்க மாட்டு
கையில் கிளவுஸ் போடு
இதுவே அரசின் கருத்து
செய்து நினைவில் நிறுத்து
இது போதாதடா வெளி செல்லாதடா இத செய்யலனா விடாதடா
சமூக விலகலடா அதை கடைப்பிடிடா அது வைரசை விரட்டுமடா
ஏ..அந்தோனி ஏ..சல்மானு
எதையும் தொட்டுப்புட்டா பண்ணு என்ட்வாஸ்சு
கொரோனா வேகம் உயிரை கொல்லும்
நாம வீட்டில் இருந்தா தாயகம் வெல்லும்
கொரோனா... கொரோனா...

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...